Monday, April 23, 2007

புலிகளின் படகுகள் மீன் பிடிக்கவா பயன்பட்டன..?

புலிகள் 90 களில் தமக்கென கடற்படையைக் கட்டியெழுப்பிய போது அவர்களிடமுள்ள படகுகளைக் கொண்டு மீன் மட்டுமே பிடிக்கலாம் என கை கொட்டிச் சிரித்தவர் பலர். சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இலங்கைக்கு இஸ்ரேலோ இந்தியாவோ அமெரிக்காவோ எவர் கொடுத்த கப்பல்களினதும் ஈழக் கடல்ப் பரப்பு மீதான நடமாட்டத்தை கட்டுப் படுத்தி வைத்திருப்பவை இந்த மீன் பிடிப் படகுகள் தான்.
பெரும் சண்டைகளின் போக்கை மாற்றியவை இந்த மீன் பிடிப் படகுகள் தான். ஈழக் கடலின் ஆழமெங்கும் துருப்பிடித்து அமிழ்ந்து கிடக்கும் இலங்கைப் போர்க்கப்பல்களின் ஆயுளை முடித்தவை இந்த மீன்பிடிப் படகுகள் தான்.


செய்தி : இந்தியா இலங்கை அரசுக்கு கடலோர ரோந்துப் படகுகளை வழங்கியுள்ளது
பாடல் : வா வா என்றே அழைக்குது கடல் அலை. வருவோம் போவோம் தடுப்பவர் யார் எமை..?

1 comment:

Anonymous said...

சொன்னாலும் சொன்னீர். சரியாத்தான் சொன்னீர்.

மருந்து தெளிக்கிற பிளேனால மறுபடியும், இன்டைக்கு ( செவ்வாய்கிழமை) குண்டு தெளிச்சிருக்கினம் புலிகள் பலாலியில.

வீரர்கள் உறையிலிருந்தால் அது வீரவாள், வெற்றிவாள்தான்....

இதெல்லாம் சொல்லி ஆருக்கு விளங்கப்போகது..?