Thursday, January 29, 2009
முத்துகுமரன்கள் வேண்டாம்.
ஈழத்தில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்காக நாள் தோறும் மணி தோறும் காடு மேடு பதுங்கு குழியென ஓடித்திரிகிறது ஒரு இனம். ஏனெனில் உயிர் பெறுமதியானது.
தமிழகத்திலிருந்து செய்தி வந்தபோது என்ன செய்வது என்றே குழம்பிப் போய் இருக்கிறோம். தயவு செய்து தமிழகத்து ஈழ உணர்வாளர்களே - உங்களது உணர்வை நாம் புரிந்து கொள்கிறோம். அதனை உயிரைக் கொடுத்தே நிரூபிக்கும் முடிவை எடுக்காதீர்கள். அரசுகளின் கையாலத் தனங்களுக்கு நீங்கள் எதற்கு கருக வேண்டும்.?
தயவு செய்து திருமா வைகோ முதலான சிங்கங்களே - உங்கள் கர்ச்சனையை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மொழியால் ஒன்று பட்ட ஒரு இனத்தின் இளைய சமூகத்தை உசுப்பி உசுப்பி விடுவதால் - தற்போதைய நிலை எவ்வகையிலும் மாறப் போவதில்லை.
முத்துகுமரா - அஞ்சலி சொல்வது கூட ஊக்குவிப்பது போல தெரிகிறது. ஏன் குமரா?.. இனியென்ன? கொஞ்ச காலத்தில் உன்னை மறந்து விடுவர். ஏன் ஈழத் தமிழர்களே மறந்து விடுவர். இதை படித்துகொண்டிருக்கிற எத்தனை ஈழத் தமிழருக்கு 95 இல் யாழ்பாண இடப்பெயர்வின் போது தீக்குளித்து மாண்ட தமிழக உறவின் பெயர் தெரியும்?
ஈழத்தமிழர்களே
எங்களுக்காக இன்னொரு தேசத்தில் இன்னொருவன் தன்னையே மாய்த்தான் என்பது பெருமைப்படக் கூடிய விடயமில்லை. மகிழ்வடையக் கூடிய விடயமில்லை. வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம். வாருங்கள் ஒருவரையொருவர் எங்கள் மூஞ்சிகளில் துப்பிக் கொள்வோம்.
முத்துகுமரன்கள் வேண்டாம்.
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
//மகிழ்வடையக் கூடிய விடயமில்லை. வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம். வாருங்கள் ஒருவரையொருவர் எங்கள் மூஞ்சிகளில் துப்பிக் கொள்வோம்//.
கொழுவி அண்ணை சொல்றது முற்றிலும் உண்மை.
திருமா வைகோ முதலான சிங்கங்களே - உங்கள் கர்ச்சனையை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மொழியால் ஒன்று பட்ட ஒரு இனத்தின் இளைய சமூகத்தை உசுப்பி உசுப்பி விடுவதால் - தற்போதைய நிலை எவ்வகையிலும் மாறப் போவதில்லை.
I agree with u
ஈழத்தமிழர்களே
எங்களுக்காக இன்னொரு தேசத்தில் இன்னொருவன் தன்னையே மாய்த்தான் என்பது பெருமைப்படக் கூடிய விடயமில்லை. மகிழ்வடையக் கூடிய விடயமில்லை. வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம். வாருங்கள் ஒருவரையொருவர் எங்கள் மூஞ்சிகளில் துப்பிக் கொள்வோம்
"""""""""""
:(
செய்தியை வாசித்ததிலிருந்து வேதனையாகவே இருக்கின்றது..உண்மை தான் அண்ண, இன்றைய அரசியல் கபட நாடக மேடைகளில் அந்த இளைஞனை ஓரிரு மாதங்களில் மறந்துவிட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை...என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மக்களின் குரல் எமனுக்குக்கூட கேட்கிறது, அரசியல்வாதிகளுக்குத்தான் கேட்பதில்லை :(
சகோதரர்களே, மன்னியுங்கள். ஏதும் செய்ய இயலாத கையாலாகத்தனமே கொண்டுள்ளோம்.
//கொஞ்ச காலத்தில் உன்னை மறந்து விடுவர். ஏன் ஈழத் தமிழர்களே மறந்து விடுவர்.//
உண்மை தான்... :(
ஐயா, இப்பதிவின் மனித நேயம் நெஞ்சை நெகிழ வைக்கின்றது.ஈழத்தவரான நீங்கள் இப்படி நல்ல மனதோடு யோசிக்க, இங்கு சிலர் தியாகம் வீரம் என இச்செயலை ஊக்குவிக்க முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கையாலாகத்தனம் - வேதனை - வெட்கம் - கண்ணீர் விட்டு அழ மட்டுமே முடிகிறது... தாங்க முடியவில்லை நண்பர்களே!!
மிக நேர்மையான பதிவு. உங்கள் உணர்ச்சிவசப்படாத உண்மையான பதிவுக்கு என் பாராட்டுகள்.
பொறுப்புடன் எழுதப்பட்ட பதிவு. வழிமொழிகிறேன்.
தம்பி கொழுவி! அவனவன் ஆளாளுக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தியே தமிழனை றணகளமாக்கிடுறான்... எவனும் யுத்தத்தை நிறுத்துவதாகத் தெரியவில்லை.. என்ன செய்ய காலங் காலமாக தமிழன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறானே தவிர வேறேதும் இது வரை கண்டதாககத் தெரியவில்லை... எங்கள் மூஞ்சிகளில் துப்புவதை விட நாக்கைத் தொங்கப் போட்டபடி நாமெல்லாம் ஆட்சியாளர்கள் காலில் விழுந்து அழுந்த வேண்டும்... அப்போது தான் ஞானம் வருமோ?? சீ சீ....அப்போதும் வராது,,
இலவசக்கொத்தனார் Says : 8:14 PM
மிக நேர்மையான பதிவு. உங்கள் உணர்ச்சிவசப்படாத உண்மையான பதிவுக்கு என் பாராட்டுகள்.
thanks pappan
முற்றும் உண்மை,மிக நேர்மையுடன் எழுதப்பட்டது.!
இந்த உணர்வாளர்கள் வாழவேண்டும்.
உசுப்பி விடுவோரே!!அடக்கி வாசியுங்கள்.
செவிடன் காதுல ஊதுற சங்குக்கு உயிர விடுனுமா?
கொழுவி,
முழுதும் உடன்படுகிறேன். தெளிவான கருத்துகள்.
இருந்தாலும், அவ்விளைஞருக்கு எம் அஞ்சலி ! RIP :-(
சரி!
வேறொன்றும் சொல்லத்தெரியவில்லலை...
:(
எங்கள் இனம் சபிக்கப்பட்ட இனம்??? நாளாந்தம் இறந்து போவதே எங்கள் தீர்ப்பு... இனிமேலும் இப்படி அவலங்கள் வேண்டாம்.
//தயவு செய்து திருமா வைகோ முதலான சிங்கங்களே - உங்கள் கர்ச்சனையை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மொழியால் ஒன்று பட்ட ஒரு இனத்தின் இளைய சமூகத்தை உசுப்பி உசுப்பி விடுவதால் - தற்போதைய நிலை எவ்வகையிலும் மாறப் போவதில்லை.//
ஈழத்தமிழர் அழிவிற்க்கு தமிழகத்தமிழர் மட்டுமே குரல் கொடுக்கிறார்கள், அவர்களையும் நக்கல், நையாண்டி செய்து முடக்கி விடுங்கள் தமிழினம் அமைதியாகவே அடங்கி சாகட்டும், புலம்பெயர் தேசத்தில் நடக்கும் எத்தனை ஆர்பாட்டங்களுக்கு சென்று நீர் தமிழர் அழிவிற்கு எதிராக குரல் கொடுத்தீர்? ஆதாரத்துடன் கூறவும், உயிரின் மதிப்பு அழப்பெரியதுதான், அதை நான் மதிக்கிறேன், அதற்காக தமிழகத்தில் நடக்கும் எழுச்சியை அடக்க நினைப்பது அறிவீனம். உலத்தமிழரின் எழுச்சியால் மட்டுமே ஈழத்தமிழனுக்கு விடிவு.
//தயவு செய்து திருமா வைகோ முதலான சிங்கங்களே - உங்கள் கர்ச்சனையை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மொழியால் ஒன்று பட்ட ஒரு இனத்தின் இளைய சமூகத்தை உசுப்பி உசுப்பி விடுவதால் - தற்போதைய நிலை எவ்வகையிலும் மாறப் போவதில்லை.//
இதோ இப்பொதே இருவர் அவர்து உணர்வை புரிந்து கொள்ளாது மூடன் என கூறி விட்டான் இவெர் போண்றவர் ஏராள வரிவர், தியாகமனிதன்மீது மூடன்,அறிவிழி, பிழைக்கதெரியாதன், என் அவதூறு பேசுவர் இதையே நீர் ஊக்கு விக்கிறீர்.
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
முற்றும் உண்மை,மிக நேர்மையுடன் எழுதப்பட்டது.!
இந்த உணர்வாளர்கள் வாழவேண்டும்.
உசுப்பி விடுவோரே!!அடக்கி வாசியுங்கள்.//
அடக்கி வாசித்தால் முட்டாளே உன் இனம் கேட்பார் இன்றி அடங்கி விடும்
இடுகைகலை பெருக்குவதில் உள்ள அவசரம் உணமையை யோசிக்கவிடுவதில்லை, அகற்றப்பட்ட முதல் இரு இடுகைகளும் இதற்க்கு சாட்சி, உயிரிளப்பு இல்லா உணர்வு வழியில் போராட்டததை மாற்றச்சொல்லவேண்டுமே ஒழிய அடக்கி வாசி என கூறுதல். அறிவீனம், இந்த உணர்வு நிலைக்கு தமிழர்களை கொண்டு வர எத்தனை உழைப்பு, எத்தனைபேர் சிறை சென்றார்கள் என்று உமக்கு தெரியுமா?
ஈழத்தமிழர் அழிவிற்க்கு தமிழகத்தமிழர் மட்டுமே குரல் கொடுக்கிறார்கள், அவர்களையும் நக்கல், நையாண்டி செய்து முடக்கி விடுங்கள் தமிழினம் அமைதியாகவே அடங்கி சாகட்டும்,//
ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிகள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் - ஈழம் குறித்து ஒரு கொதிநிலையை எப்போதும் மக்களிடத்தில் வைத்துக்கொண்டே இருக்கும். முத்துகுமரனின் மரணமும் அதற்கே பயன்படும்.
அரசியல் தளத்தில் - தற்போதைய அவலத்தை உடனடியாக நிறுத்த இவை ஒருபோதும் பயன்படாது. (வேண்டுமானால் அரசியல்வாதிகளின் கபட நாடகங்களை மக்கள் அறிந்து கொள்ள பயன்படும்.)
நமது போராட்டங்கள் எல்லாமே விழிப்புணர்ச்சி போராடங்கள் மட்டுமே. ஊடக மட்டங்களிலும், வேறு மக்களிடத்திலும் போர் தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். அவ்வளவே!
இன்றும் - தமிழகத்து மத்தியதர வர்க்கத்தினரிடம் ஈழ போர் குறித்த சாதக பார்வையை - வெறும் செய்தியாக அன்றி - உணர்வுத் தளத்தில் நெருக்கமாக கொண்டு செல்ல முடியவில்லை என்ற உண்மையை நான் சொன்னால் உங்களுக்கு கசக்கும். இந்து பத்திரிகைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அவ்வர்க்க மனநிலை உங்கள் விருப்பிற்கு மாறாக தான் இருக்கும். திராவிட இயக்கங்கள் ஆரம்பித்த போது மத்தியதர வர்க்கத்தை குறிவைத்து ஒரு கனமான ஊடகத்தை கொண்டு வர முடியவில்லை. அதற்காக முயற்சிக்க கூட வில்லை.
வைகோ திருமா போன்றவர்களால் நான் மேற்சொன்ன கொதிநிலையை வைத்துக் கொண்டே இருக்க முடியும்.
அறிக்கைகளாலும் ஆர்பாட்டங்களாலும் தீர்மானங்களாலும் ஆளும் அரசுகள் மக்களின் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப தமது முடிவுகளை எடுத்து கொள்கிறார்கள் என்றால் - அது உண்மையானால் - இன்று உலகம் சொர்க்க பூமியாக இருந்திருக்கும்.
உயிர் எவ்வளவு முக்கியம்? எந்த உத்தரவாதமும் இன்றி கோபத்தை மட்டுமே வைத்து கொண்டு இன்று வன்னியில் பல முனைகளில் புலிகளின் படையணிகள் இறங்கியிருக்க முடியும். ஏன் தங்கள் ஆளணியை இன்னும் இன்னும் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
0 0 0
ஒவ்வொரு சாவும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் -
அறிக்கை தீர்மானம் மௌனவிரதம் இத்தகைய போராட்ட வடிவங்கள் அறப்போர் வடிவங்கள்தான். ஆனால் இவை எதிர்ப்பை பதிவை செய்வதோடு தம் பணியை நிறுத்திக் கொள்கின்றன. இந்தியா இலங்கை போன்ற மூன்றாந்தர அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளில் மக்களின் ஒட்டுமொத்த கருத்துக்களுக்கேற்பவே ஆட்சி நடக்கும் என்றோ மக்களின் கருத்துக்களை கேட்டு ஆட்சியாளர் தம் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்றோ நம்புகின்றவனே மடையனும் அறிவிலியும் ஆவான்.
அதனையும் தாண்டி தற்போதைய ஆர்ப்பாட்டங்களும் ஊர்லவங்களும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்தோ பாலம் கட்டச் சொல்லியோ அல்ல.
உண்மையில் அதுபோன்ற நாட்களை இழுப்பதால் மனிதாபிமானப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாத - கொஞ்சம் அரசியலும் செய்யக் கூடிய - பிரச்சனைகளிலேயே தமிழக அரசியல் கட்சிகளின் இதுநாள்வரையான போராட்டங்கள் நடந்து வந்துள்ளன.
மனித வதைக்கெதிரான போராட்டத்தில் இந்த ஜனநாயக போராட்டங்களின் பங்கு என்ன என்பதை - ஜனநாயகம் அகிம்சை அறம் என மூளைச் சலவை செய்யப்பட்ட தமிழகத்து மத்தியதர வர்க்கம் இப்பிரச்சனையூடாவது புரிந்து கொள்ள வேண்டும்.
நடைமுறைச் சாத்தியமானவை இரண்டே இரண்டுதான். அரச இயந்திரத்தை இராணுவ பலம் கொண்டு சிதறடிப்பது. உடைப்பது. மீள முடியாத வகையில் சிதறடிப்பது.
இரண்டாவது அதிகாரங்களின் காலில் விழுந்து வேண்டியதை அடைவது.
காங்கிரசின் காலில் விழுவது இனி சாத்தியமாகாது.
முடிந்தால் பிஜேபியின் காலில் விழுந்து விடுவோம்.
Post a Comment