Saturday, January 31, 2009

கலைஞர் சொல்லியா போர் நிறுத்தம்?

ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை ஆசைப்படு என ஏதோ படத்தில் ரஜினி சொல்வார். பாவம் அந்த நிலைமை இப்போது கலைஞருக்கு ஏற்பட்டிருக்கிறது. நேற்று மகிந்த 48 மணிநேர போர்நிறுத்த நாடகம் அறிவித்த போதே நினைத்தேன். (செய்தி - போர் நிறுத்தம் என்று சிறிலங்கா அரசாங்கமானது அறிவித்த போதிலும் இன்றும் தொடர்ச்சியாக உடையார்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் தொண்டு நிறுவனமான கியூடெக் நிறுவனத்தின் மீதும் சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டதனால் அங்குள்ள உணவுக்களஞ்சியங்கள் எரிந்த வண்ணம் உள்ளன.)

மச்சான் முதுகுவலிக்கு தலையணை முண்டுகொடுத்தாவது இந்த போர்நிறுத்தம் தன்னால் விளைந்தது என சொல்வார் என்று நேற்றே நினைத்தேன். அதுமாதிரியே சொல்லியிருக்கிறார்கள். கலைஞரின் அழுத்தத்தை தொடர்ந்து 48 மணிநேர போர் நிறுத்தம் ஒன்றை மகிந்த மேற்கொண்டிருக்கிறாராம். அட.. மனித சங்கிலி, பதவி விலகல் மிரட்டல், தந்தி போராட்டம் இதெல்லாம் வெறும் 48 மணிநேர போர் நிறுத்தத்திற்குத் தானா.. ? இதை முன்பே மகிந்தவின் காதில் போட்டிருந்தால் ஒக்டோபரிலேயே ஒரு நல்ல நாளில் 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பாரே மகிந்த?

என்னிடம் ஒரு ஆசையும் ஒரு கேள்வியும் உண்டு.

ஆசையென்னவெனில் கலைஞரின் இந்த அறிக்கையை கண்ட பிறகு மகிந்த ஓர் அறிக்கையை இவ்வாறு விட வேண்டும். அதாவது கலைஞருக்கும் போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமேயில்லை. அந்த கோரிக்கையை நாம் கணக்கெடுக்கவேயில்லை. இது முழுக்க முழுக்க இலங்கை அரசின் விருப்பத்தில் நடக்கும் நாடகம்.

கேள்வியென்னவெனில் கலைஞருக்கு 50 வருட அரசியல் அனுபவம் உண்டென்கிறார்கள். ஆனால் இப்படியான வெற்று ஏமாற்று அறிக்கைகளை நம்பக் கூடியவர் யாரேனும் உண்டென்று அவரால் நம்ப முடிகிறதா? அல்லது அட.. நம்ம தலைவராலதான் இலங்கையில் 48 மணிநேரம் போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்கிறாங்க என நம்பும் தொண்டர்கள் இன்னும் இருக்கிறார்களா... ?

4 comments:

Pot"tea" kadai said...

//அல்லது அட.. நம்ம தலைவராலதான் இலங்கையில் 48 மணிநேரம் போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்கிறாங்க என நம்பும் தொண்டர்கள் இன்னும் இருக்கிறார்களா... ?//

இன்னும் இரண்டொரு நாட்களில் சில மானங்கெட்ட மதிகெட்ட விசிலடிச்சான் குஞ்சி அல்லது கருணாநிதி குடும்பத்தின் குறிகளை நக்கிப் பிழைக்கும் உடன்பிறப்புகள் இதை மேற்கோள் காட்டி எழுதத் தான் போகிறார்கள்.

சோமி said...

கொழுவியாரே,
இலங்கை அரசு போர்நிறுத்தம் அறிவிக்கவில்லை என்று மனித உரிமைக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருக்கிறார். ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோக பூர்வமாக அவர் கூறியிருகிறார். மக்கலை பாதுகாபான இடங்களுக்கு செல்லுமாறு கூறியிருக்கிறோம் அதற்க்காக அவர்கள் போகும் வழிகளில் தாக்குதல் நடத்தமாட்ட்ம் என்றுதான் அவர் அறிவித்திருக்கிறார்.

உமையணன் said...

//
சோமி said...
கொழுவியாரே,
இலங்கை அரசு போர்நிறுத்தம் அறிவிக்கவில்லை என்று மனித உரிமைக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருக்கிறார். ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோக பூர்வமாக அவர் கூறியிருகிறார். மக்கலை பாதுகாபான இடங்களுக்கு செல்லுமாறு கூறியிருக்கிறோம் அதற்க்காக அவர்கள் போகும் வழிகளில் தாக்குதல் நடத்தமாட்ட்ம் என்றுதான் அவர் //

link please

Anonymous said...

Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.

Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamils, until they cover Eelam related news and Tamil’s Protests all across World.

NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV. If their business get affected, and sure they’ll change their stand.