Tuesday, January 06, 2009

சென்னைப் புத்தக கண்காட்சியில் கொழுவியின் இரு புத்தகங்கள்

வரும் எட்டாம்திகதி சென்னையில் ஆரம்பிக்கும் புத்தக கண்காட்சியில் கொழுவி எழுதிய இரு புத்தகங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஈசானமூலைப் பதிப்பகம் அவ்விரு புத்தகங்களையும் பதிப்பித்திருக்கிறது. அவை பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு தருகின்றேன்.

1. கிளிநொச்சி வீழ்ந்தது எப்படி? ஓர் இரவின் முடிவு -
ஈழத்தில் புலிகளின் பலமான கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி வீழ்ந்தமை தமிழ் உலகில் பரபரப்பான செய்தியானது. கிளிநொச்சியை விட்டுப் புலிகள் பின்வாங்க நேர்ந்ததன் பின்னால் உள்ள இதுவரை வெளிவராத இராணுவ சூட்சுமங்கள் அரசியல் முடிச்சுக்களை கொழுவி இப்புத்தகத்தில் அழகாக அவிழ்க்கிறார். கிளிநொச்சிப் போர் குறித்த ஒரு குறுக்கும் நெடுக்குமான வெட்டுப் பார்வையை இப்புத்தகம் வாசகர்களுக்கு வழங்கும். 234 பக்கங்கள் உடைய இப்புத்தகம் ஒரு இராணுவவியற் பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது. விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே.

2. முல்லைத் தீவு வீழுமா ? முடிவா ஆரம்பமா?
கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் இலங்கைப் படைகள் முல்லைத்தீவை நெருங்குகின்றன. முல்லைத்தீவும் புலிகளின் பலமான கோட்டைதான். புலிகளின் தலைவரது அலுவலகமும் தங்குமிடமும் முல்லைத்தீவில் அமைந்துள்ளதாகவே இலங்கை அரசு கூறுகிறது. இந்நிலையில் முல்லைத் தீவையும் இலங்கை படைகளிடம் புலிகள் கைவிடுவார்களா மாட்டார்களா என்பதை இராணுவ அரசியல் நோக்கில் ஆராய்கிறது இப்புத்தகம். முல்லைத் தீவு வீழ்ச்சியின் பிறகு புலிகளின் எதிர்காலம் குறித்தும் இப்புத்தகம் விரிவாக பேசுகிறது. 366 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை வெறும் 200 ரூபா மட்டுமே.

மேற்குறித்த இரு பிரதிகளும் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகளே அச்சிடப் பட்டுள்ளமையால் பதிவுக்கு முந்துங்கள்.

அடுத்த புத்தக கண்காட்சியில் புலிகள் அழிந்தது எப்படி அல்லது சிங்கள இராணுவம் வீழ்ந்தது எப்படி என்ற இரண்டில் ஏதாவது ஒரு புத்தகம் போடும் அருமையான வாய்ப்பும் எமக்கு கிடைத்திருக்கிறது. வாருங்கள் காற்றுள்ள போதே தூற்றுவோம்.

12 comments:

Anonymous said...

அண்ணை டுவிட்டரிலையும் செய்தி போடுங்கோ அண்ணை. அப்பதான் படிச்சவை வாங்கி வாசிப்பினம். அப்பிடியே ஒரு பேஸ்மெண்ற் புத்தக வெளியீட்டு விழாவொண்டும் நடத்துங்கோ.

கேக்கமறந்து போனன். என்ன பெயரிலை புத்தகம் விட்டனியள். யயாதிராமா, குசுலஷ்மணா எண்டேது மாத்தினியளோ? அப்பதான் ஓசி புத்தகவிமர்சனத்துக்கு ஆள் பிடிக்கலாம்

மு மாலிக் said...
This comment has been removed by the author.
Anonymous said...

அண்ணே.. போன முறை விடுதலைப்புலிகளை விற்றார்கள். அட விடுதலைப்புலிகளையே விற்கிறார்களே.. இவர்கள் பெரும் விண்ணர்கள்தான் தான் வியப்புற்றிருக்க.. இந்ததடவை பிரபாகரனையே விற்கிறார்கள். பெரியாட்கள்தான்.

பிரபாகரனுக்கு தெரிஞ்சா றோயல்டி கேட்கப்போறார் :)

வரும்காலங்களில் கிட்டு திலீபன் தமிழ்செல்வன் பால்ராச் இவையும் விற்பனைக்கு வருவினமெண்டு நினைக்கிறன். ஐ ஜாலி..

உண்மைத்தமிழன் said...

எதை சொன்னாலும் மறுப்பீர்கள். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பீர்கள். இது நடந்தது உங்களுக்குத் தெரியுமா என்று எதிர்ப்பாடு கேட்பீர்கள். ஆனால் நீங்களும் எழுத மாட்டீர்கள். எழுதுபவர்களையும் விட மாட்டீர்கள். உங்களைக் கேட்டுக் கொண்டுதான் எதையும் எழுத வேண்டும் என்பீர்கள். மீடியாக்களும், பத்திரிகைகளும் அவரவர் கடமைகளைச் செய்கின்றன. செஞ்சோலை கொடூரத்தை பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் வெளியுலகத்திற்குக் காட்டின. இப்போதும் அதைத்தான் செய்கின்றன.

உண்மையில் கிளிநொச்சி வீழ்ந்தது எப்படி என்பது மக்களுக்குத் தெரிந்தால்தான் என்ன..? அதுவும் ஒரு வகையில் செய்திதானே..

பின்பு நாங்கள் ஒன்று சொன்ன பின்பு கொழுவிகள் என்ற தலைப்பில் முறை வைத்து ஆள் மாற்றி ஆள் வந்து அரை லூஸ் என்கிறீர்கள்..

என்னதான் சாமி செய்யச் சொல்றீங்க..

Anonymous said...

/மீடியாக்களும், பத்திரிகைகளும் அவரவர் கடமைகளைச் செய்கின்றன. /

வந்துட்டாரு முக்காலும் உண்மை! எது பக்கத்து வீட்டுக்காரன் விந்தை எடுத்து பொண்டாட்டியை புள்ளையாண்ட வெக்குற சூரகேட்டுபுள்ளைத்தனமா? பரபரப்புக்கு பட்டாணி வறுக்குற பயலுக இவனுக.

/செஞ்சோலை கொடூரத்தை பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் வெளியுலகத்திற்குக் காட்டின. /

யாரு கிழங்கு பதிப்பகமும் குமுத்தம் ரிப்பேர்டருமா?


/உண்மையில் கிளிநொச்சி வீழ்ந்தது எப்படி என்பது மக்களுக்குத் தெரிந்தால்தான் என்ன..? /

எப்போ விழுர நேரம்லாம் மொட்டைமாடில மொச்சகொட்டை அவிச்சுக் கொட்டிட்டு அப்புறமா அச்சுபிச்சு பிக்சன் கிளிநொச்சி விழுறதுபத்தி எழுதியா? இவிங்க என்னிக்காச்சும் பொத்தகம் விக்கிறதுக்கு தவிர்த்து கிளிநொச்சி, புலிநச்சி பத்தி எழுதிப் பாத்திருக்கியா

ங்கொய்யால! கோதுன்னு அப்பப்ப வந்து நிரூபிக்கல்லன்னா

Anonymous said...

"பிரணாப் இலங்கை போவாரா?மாட்டரா?"

மாட்டிக்கொள்ளாமல் இந்தியா வேடிக்கைபார்க்கும் மர்மம் நிறைந்த திகில் தொடர் ஈசான பதிப்பக வெளியீடாக.

ராஜபக்ச வின் மனதை கொள்ளைகொண்ட ஒரே நாவல்

வெறும் 25 ரூபாவிற்கு உங்களுக்கு புத்தக கண்காட்சியில் தருகிறோம்.

புத்தகம் வாங்கி நீங்கள் வாசிக்கும் வரைக்கும் இந்திய
இலங்கை அரசியல் கண்ணோட்டத்தில் மாறுதல் ஏற்படாது என உத்தரவாதம் அளிக்கிறோம்.

இந்த புத்தக வெளியீடு பற்றி கொழுவித்தம்பி இதுவரை விமர்சனம் தெரிவிக்காது இருப்பதன் காரணமென்ன?

ஈசான பதிப்பக அடுத்த புத்தக வாய்ப்புக்காகவா?

"நான் கடவுள் அல்ல அனானி"

Anonymous said...

குணம் மணம் நிறைந்த நூதனசாலை நூல்களையும் பார்க்கலாமா?
http://tamilarangam.blogspot.com/2009/01/blog-post_4716.html

sathiri said...

கொழுவி இன்னமும் சில புத்தகங்களை எழுதலாமே பல்கலைக்கழகத்தில் பெண்களை ராக்கிங் செய்வது எப்படி...
ஈழப்போராட்டம் என்று தொடங்கி விட்டு வங்கியை கொள்ளையடித்துக்கொண்டு வெளிநாடு ஓட சில ஆலோசனைகள்.நாலேவரி கட்டுரையில் நாற்பதுதரம் பாசிசம் என்கிற வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம்...மற்றவர்களை எழுதியே கொல்லலாம் வாருங்கள் இப்படியும் சிலவற்றை எழதலாமே

ராஜ நடராஜன் said...

எழுத்தும் புத்தகமும் ஒரு எழுத்தாளனின் சொத்து. புத்தகம் வாங்கிப்படித்தும் பிடிக்கவில்லையென்றால் புத்தகம் பற்றிய விமர்சனம் எழலாம்.அது தவிர்த்து இதிலென்ன எதிர்வினைகள்?

Anonymous said...

அண்ணே அண்ணே ராஜநடராஜன் ஆண்டே எழுத்தும் புத்தகமும் எழுத்தாளனின் சொத்து என்றால் அதை அவர் பங்குபோடுவதும் விற்பதும் ஓக்கே அண்ணே. ஆனால் இது வரலாறு அண்ணே. காந்தி இந்தியாவுக்கு கமர்கட் வாங்கித்தந்தார் அப்படி அஞ்சாங்கிளாசிலே சொல்லி தந்திருப்பாங்களே. பேசாம அட்லிதான் இந்தியாவுக்கு இட்லி தந்தார் அப்படி கரெக்டா சொல்லித்தந்திருக்கலாமோ?

Anonymous said...

கொழுவிமாமா உங்கட புத்தகத்தாலைதான் கண்காட்சியில பயங்கரவாதப்புத்தகமெல்லாம் மண்டி, கிண்டி, பங்கருக்குள்ளை மட்டுந்தான் விக்கோணும் எண்டு சொல்லிப்போட்டினமாம் எண்டு கேள்விப்பட்டன். உண்மையோ? எதுக்கு புத்தகபுரட்சி பேக்காடு எண்ட மாயவலை பின்னுறியள்?

ரவி said...

அப்படியே அய்டி கம்பேனி வீழ்ந்தால் அதை பற்றி தோதான பதிவு எழுதுவது எப்படி ?

சொந்த புண்ணை சொறிவது எப்படி ?

வெந்த புண்ணை நோண்டுவது எப்படி ?

காஷ்மீர் யாரோடது ?

கன்னியாக்குமரியில் இருப்பது திருவள்ளுவர் சிலையா திருநாவுக்கரசர் சிலையா ?

மார்கழி காலை வெய்யில் உடம்புக்கு நல்லதா ?

கிருஸ்துமஸ் அன்று ரம்ஜானை மாற்றுங்கள் கலைஞரே ...

பெயரிலேயே தமிழன் என்று காட்டுவது எப்படி ?

திடீர் சமூக உணர்ச்சி வந்தால் மூச்சா போவது தவிர வேறு என்ன செய்வது ? (பதிவு எழுதலாமா என்பதன் விடை புத்தகத்தில் தான் இருக்க்கவேண்டும்)

அப்புறம் இந்த புத்தகம் எல்லாம் ஒன்று இரண்டு மூன்று என்று பாகங்களாக வரவேனும்..