இது ஒரு நுட்பம் சார்ந்த விடயம். ஒவ்வொருவருக்கும் தான் எழுதிய பதிவு படிக்கப் பட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதில் தவறில்லை. அது தானே மனித இயல்பு. நல்ல பதிவெழுதினால் எல்லாரும் வந்து படிப்பார்கள் தான். ஆனால் எல்லோராலும் முடிகிற காரியமா அது..? அதற்காகத் தான் இம்முறையை அறிமுகப் படுத்துகிறேன். இதன் மூலம் நீங்கள் உங்கள் பதிவுக்கு எவரெல்லாம் வரவேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்களை வரவைத்துக் கொள்ளலாம். அவர்களுடைய வலை முகவரிகளைத் தெரிந்து கொண்டு இங்கே நான் சொல்லும் வழி முறைகளைச் செய்தால் போதும்.
அதாவது உங்கள் பதிவினை அனைவரும் கண்டிப்பாக பார்வையிடச் செய்வது எப்படி..?
இப்போ நான் செய்தேனே ..அது மாதிரித்தான்.
(நாளை சந்திப்போமா..)
12 comments:
ஒரு முடிவோட தான் இன்னிக்கு பதிவு போடுறீங்களா :)
இப்படி ஏமாத்தினால், உங்கள் வழக்கமான serious, regular, loyal வாசகர்கள் (யாராச்சும் இருக்காங்க அப்படி? ;)) வருந்த மாட்டாங்களா :)
:)
சரிதான்...
இன்னிக்கு மொதோ போணி கொழுவிக்கு :))
சென்ஷி
:(((
இன்னொமொரு ஏமாந்தவன்!
:-(
கொழுவி...
நீங்கள் (ரவிசங்கர் சொல்வது போன்ற) ரொம்ப சீரியஸான ஆளென்று நினைத்திருந்தேன்...
களத்திலிருந்து கொழுவி, பதிவைப் பார்வையிடச் செய்வதெப்படி.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடத்துங்க.. !! :))))
அம்மான்,
இது உங்களுக்கே நாயமா? ரவி சங்கர் மாதிரி நீங்களும் ஐடியா திலகமாட்டம் எதாச்சும் கொடுத்திருப்பீங்கன்னு வந்தேன்.
இப்புடி"யே" மாத்திபுட்டீங்களே...
***
ஆமா, பொன்ஸுக்கு சீரியஸான ஆளுன்னா பயம் :-))
good post ..:)
கொழுவி அம்மான்!
பதிவை அனைவரும் பார்க்கச் செய்வதைப் பற்றி நான் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன்.
அதில் வரும் கடைசி இரண்டு வரிகள்:
"தலைப்பை நன்றாகப் போடு
தானாக வருவார்கள்!"
வலு கெதியிலை மணிமேகலைப் பிரசுரத்தில இருந்து உங்களுக்கு அழைப்பு வரப்போகுது :-)
கொழுவி!
பாராட்டுக்களப்பு. கொழுவியாலும் தொழில் நுட்பப் பதிவு எழுதேலுமென்டத நிரூபிச்சுப் போட்டிரே:
துடுதண்ணி வைச்ச பதிவிலும் பறவாயில்லை. இந்த எப்படி?????
Post a Comment