Monday, March 26, 2007

சற்றுப் பின்: புலிகளின் வான் படை! வரவுள்ள செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையணி இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அமைந்துள்ள இராணுவ விமான நிலைகள் மீது தாக்குதலைத் தொடர்ந்து விரைவில் வெளியாக உள்ள செய்திகள் இவை.

அப்பாவிகளான இலங்கை விமானப்படை மீது புலிகள் குண்டு வீச்சு! அமெரிக்கா கண்டனம்.

புலிகளின் விமானக் குண்டு வீச்சு. இந்தியா கவலை

புலிகளின் விமானங்கள். தமிழக அணு மின் உலைகளுக்கு ஆபத்து . ஜெயலலிதா எச்சரிக்கை.

புலிகளின் விமானத் தாக்குதல் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல். - போர் நிறுத்த கண்காணிப்பு குழு

புலிகள் தாக்குதல்களை கை விட்டு விட்டு பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்.

இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கி புலிகளிடமிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டும் - சோ

இவை வெளிவர இருக்கின்ற சாத்தியமான செய்திகளே.. ஆனால் இவர்கள் இலங்கை அரசு நடாத்தும் குண்டுவீச்சுக்களில் தினம் தினம் சாகும் அப்பாவித் தமிழர்கள் குறித்து கவலையோ கண்டனமோ தெரிவிக்க மாட்டார்கள். யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரச படைகள் செய்து வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கையும் விட மாட்டார்கள்.

பிந்திக் கிடைத்த செய்தி - இந்தியா கவலை தெரிவித்து விட்டது.

6 comments:

CAPitalZ said...

நகைப்பாகவும், "தமிழனுக்கு உதவ" இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதிலும்
கவலையாய் இருக்கிறது.

என்னமோ புலிகள் எதிர்பார்ப்பையும் மிஞ்சி விட்டார்கள்.


1) இரு விமானக்கள் ஒரே நேரத்தில் பறந்து குண்டுவீச்சு.
2) குண்டு காவி, போடும் பகுதி உள்ளூர்த் தயாரிப்பு.
3) இரவில் குண்டுபோட்டிருக்கிறார்கள்.


அட சிங்கள வான்படை கூட இரவில் குண்டுபோடுவதில்லை. அவர்கள் பகலில்
குண்டுபோட்டாலே புலிகளுக்கு பாதிப்பு வருவதில்லை என்பது வேறு விடயம்.


இனி அடுத்த வான்புலித் தாக்குதல் எங்கையோ? [இந்தியா காட்டிக்கொடுக்காமல்
இருந்தால்]

Anonymous said...

மேலேயுள்ள தலைப்புக்களுக்கு விபரமான அறிக்கைகளையும் எதிர்பார்கிறோம் விரைவில் புலிக்கு லாடம் கட்டப்படும்

இவண்
றோவில் இணைக்கப்பட்ட ஒரு பொடியன்

Anonymous said...

அது சரி.. இந்தியா ராடர் கொடுத்து உதவியதே.. அந்த ராடரில புலிகளின் விமானங்கள் வருவது தெரியலையாமா..? ஆகா.. பழுதா போன ராடரை கொடுத்திட்டாங்களோ.. :)

Anonymous said...

\\விரைவில் புலிக்கு லாடம் கட்டப்படும்\\
லாடம் கட்டுறது கோழைகள் வேலை. 30 வரரிசமா கன பேர் கட்டப் பாத்தவை, கடைசியாத் துண்டைக் காணம் துணியைக் காணம் எண்டு ஓடினதுகள் எல்லாருக்கும் தெரியும்.

தமிழ்பித்தன் said...

/////புலிகளின் விமானங்கள். தமிழக அணு மின் உலைகளுக்கு ஆபத்து . ஜெயலலிதா எச்சரிக்கை//////
இது நியாயமாகப்படுகிறது ஏனென்றால் பக்கத்து வீட்டு சண்டைக்காரன் புதிதாக வாள் வேண்டிவந்தால் எமக்கு எப்படி இருக்கும் ஆனால் அதை ஜெயலலிதா சொல்வதில் தான் உதைக்கிறது

Anonymous said...

//இது நியாயமாகப்படுகிறது ஏனென்றால் பக்கத்து வீட்டு சண்டைக்காரன் புதிதாக வாள் வேண்டிவந்தால் எமக்கு எப்படி இருக்கும் ஆனால் அதை ஜெயலலிதா சொல்வதில் தான் உதைக்கிறது//

பித்தரே.. பக்கத்து வீட்டுக்காரனோடு உமக்கு பகையெதுவும் இல்லையென்றால் பிறகென்ன பயம்..? வாள் இருக்கிறது என்பதற்காக சும்மா வந்து உம்மை வெட்ட பக்கத்து வீட்டுக்காரனுக்கு பைத்தியமா என்ன..? நீர் பக்கத்து வீட்டுக்காரனோடு ஒழுங்கா இருந்தால் சரி..

அது சரி.. புலிகளை என்ன தெருச் சண்டியர்கள் என்கிறீரா..?