Friday, March 02, 2007

இப் படை தோற்கின் எப்படை வெல்லும்

இந்தப் பாடல் திரைப்படப் பாடலா என்று கூட எனக்குத் தெரியாது. பல இடங்களில் தேடியிருக்கிறேன். அண்மையில் வலைப்பதிவில் மு.கார்த்திகேயன் அறிமுகப்படுத்திய தமிழ்ப் பாடல்கள் தேடுதல்ப் பொறி கொண்டு இதனைக் கண்டு பிடித்தேன். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றதாம் இப்பாடல். படம் பார்த்திருக்கிறேன். ஆனால் நினைவில்லை.

பாடல்களை இணைப்பது பற்றிய ஒரு உண்மையான ? நுட்பப்பதிவைப் பார்த்தவுடன் அதைப் பயன்படுத்திப்பார்க்கும் ஆசையில் இந்தப் பதிவு. musicplug.in தளத்தில் பழைய பாடல்கள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். play பொத்தானை அழுத்தி கேட்கவும்.


Get Your Own Music Player at Music Plugin

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும் - இதில்
நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவருக்கும் அழிவாகும்.

13 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்பாடல் உ.சு.வா படத்தில்; டைட்டில் பாடலாக இடம் பெற்றதால்;உங்களுக்கு ஞாபகம் வராதிருக்கலாம்.
சீர்காழி கோவிந்தராஜன் ;பாடியது ;எம்.எஸ். விஸ்வநாதன் இசை; புலமைப்பித்தன் எழுதியதாக இருக்கவேண்டும்.
எவருக்கும் பிடிக்கும் இசை;எழுத்து;குரல்.
எனக்கும் மிகப் பிடிக்கும்.

சின்னக்குட்டி said...

77 தேர்தல் காலத்தில் .கூட்டணி மேடையில்..சீர்காழி கோவிந்தராஜனே சுட்டிபுர அம்மன் கோயிலிலை இந்த பாடலை பாடி உசுப்பேத்தினார்

Anonymous said...

இது 'உலகம் சுற்றும் வாலிபனில்' "ரைட்டில்" ஓடும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல். அக்காலத்தில் இப்பாடல் இலங்கை வானொலியில் தடைசெய்யப்பட்ருந்ததாக ஞாபகம். 'நேற்று இன்று நாளை'யில் வரும் 'தம்பி நான் படிச்சேன் காஞ்சியில நேற்று' பாடலும் தடைசெய்யப்பட்டிருந்தது. என்றாலும் 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் பாடல்' யாழ்ப்பாணத்தில் படுபிரபலம். அளவையூர் பாரதி கலாமன்றத்தின் 'வடக்கும் தெற்கும்' நாடகத்தின் (1000 மேடைகளிற்கு மேல்) ஆரம்பப் பாடலே இதுதான்.

ஷோபா

Anonymous said...

//ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும் - இதில்
நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவருக்கும் அழிவாகும்.//

ரசித்தேன் இதையும்.. அதையும் ;)

பின்னூட்டமிட்ட ஷோபா எண்டவர் ஷோபா சக்தியோ..

வசந்தன்(Vasanthan) said...

எங்கள் காலத்தில் சாந்தனும் இப்பாடலை மேடைகளில் பாடி பிரபலமாக்கினார்.
அவரின் குரல்கூட சீர்காழியோடு மிகநன்றாகப் பொருந்திப்போகும்.

Anonymous said...

நல்ல பாடல்...எங்கள் வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் பாடல் :)

சிறில் அலெக்ஸ் said...

படத்தில் இந்த பாடலுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். அவர்தான் உ.சு.வாவிற்கு இசையமைப்பதாக இருந்தது. இந்தப் பாடல் முடிந்த பின்பு எம்.எஸ்.விக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.. பின்னர் வெகு குறுகிய காலத்தில் மீதமுள்ள அழகிய பாடல்களை உருவாக்கினார் அவர் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

Anonymous said...

உண்மையாகவே இந்தப் பதிவுக்கு பின்புலம் முன்புலம் பக்கப்புலம் எதுவும் இல்லையா..? நான் நம்ப மாட்டேன்;)

ரவிசங்கர் said...

//பாடல்களை இணைப்பது பற்றிய ஒரு உண்மையான ? நுட்பப்பதிவைப் //

இதுக்குப் பேர் தான் உள்குத்தா :)

கொழுவி said...

டைட்டில் பாடலா.. கொஞ்சம் நீண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். சிறில் புதிய தகவலுக்கு நன்றி

கண்மணி said...

நல்ல மாட்டினீர் நீரும் கொழுவி 410 பின்னூட்டமாமில்லே உமது ஹி..ஹி..ஹி..கண்மணியவா கலாய்க்கிறீர்[அறிவிப்புகள்] பகுதியில்..ஹ..ஹா.பாட்டு பத்திச் சொல்லாமின்னா என்னோட ஓட்டை கம்ப்யுட்டர் பொட்டியில் உம்ம பாட்டுப் பொட்டி திறக்கவேயில்லை

லக்கிலுக் said...

இப்பாடல் புனையப்படும் நேரத்தில் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தார். அவர் அதிமுகவை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் இன்னேரம் இப்பாடல் திமுகவின் கொள்கைப்பாடல்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப் பட்டிருக்கும்.

கொழுவி said...

இப்பாடல் புனையப்படும் நேரத்தில் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தார். அவர் அதிமுகவை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் இன்னேரம் இப்பாடல் திமுகவின் கொள்கைப்பாடல்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப் பட்டிருக்கும்.//

தகவலுக்கு நன்றி