Tuesday, January 27, 2009

அதானே பார்த்தேன்....

பிரணாப்முகர்ஜியை இலங்கைக்கு செல்லுங்கள் இலங்கைக்கு செல்லுங்கள் என தமிழகத்திலிருந்து வற்புறுத்திக் கொண்டே வந்தார்கள். போய்....? என்பது கேள்விக்குறியாகவே இருந்தாலும் முதலில் போகட்டும் என அனைவரும் வற்புறுத்தி வந்தார்கள்.

பிரணாப்போ போவேன்.. ஆனா போகமாட்டேன் என என்னத்த கன்னயா போல இழுத்துக் கொண்டிருந்தார். போர் நிறுத்தம் பேச்சு அரசியல் தீர்வு என்ற இலக்குகளை விட்டுவிட்டு - காவலருக்கு பிரணாப்பின் பயணமே இறுதித் தீர்வு போலானது.

இறுதியில் திடீரென்று இன்று பிரணாப் கொழும்புக்கு விரைந்தார். போவதற்கு முன் காவலரிடம் பேசியுமிருக்கிறார். நமது கோரிக்கையை இறுதி வேண்டுகோளை கவனத்திற்கொண்டு பிரணாப் கொழும்பு விரைகிறார் என்ற கடிதம் நாளை வருவதற்கிடையில் இன்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உண்மையை போட்டு உடைத்தது.

வந்து சந்திக்கவும் என்ற தமது அழைப்பை ஏற்று பிரணாப் தம்மைச் சந்திக்க வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அது உண்மையில்லாதும் இருக்கலாம். ஆனால் அவ்வாறு சொன்னால் இந்தியா வழமைபோலவே `சொங்கி´ த்தனத்தோடு மறுப்பேதும் தெரிவிக்காமல் பல்லிளிக்கும் என்பது இலங்கைக்கு நன்றாகவே தெரியும்.

புலிகளை ஒழித்து விட வேண்டும் என்ற ஒரேயொரு விருப்பத்திற்காக இலங்கையின் எல்லா ஆணைகளுக்கும் வாலாட்ட வேண்டிய நிலை..

இதெல்லாம் ஒரு பொழைப்பு....
0 0 0
இலங்கையின் அழைப்பு கிடைக்காமல் எப்படி செல்வது என்று காங்கிரஸ் ராஜா கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சொல்லியிருந்தமை நினைவிருக்கலாம்.
0 0 0
எங்களிடம் ஒரு நாய் இருந்தது. ஞ்ஞ்சு... வா என்றால் வரும். போ என்றால் போகும். வராதே என்றால் வராது. நன்றியுள்ள நாய் அது.

13 comments:

ILA (a) இளா said...

// நன்றியுள்ள நாய் அது. //
சத்தியமா சிரிச்சுட்டே இருக்கேன்.

Anonymous said...

ஐயோ ஐயோ.. தமிழநாட்டு காரர் போக சொல்லி கேட்டு ஒருமாசமாகியும் போகவில்லை. ஆனா சிறிலங்கா காரன் வாடா வந்து மீட் பண்ணுடா என்றவுடன் விழுந்தடித்து ஓடுறாங்க..

பேசாமல் மத்திய அரசை மகிந்தவிடம் கொடுத்திட்டு டெல்லியை மாநில அரசாக்கி விடுங்கப்பா..

கலைஞருக்கும் ஒரே தமிழனத்த காப்பாற்று தமிழினத்த காப்பாற்று என்ற கோசங்களை கேட்டு தொலைக்க வேண்டியிருக்காது.

Anonymous said...

எங்களிடம் ஒரு நாய் இருந்தது. ஞ்ஞ்சு... வா என்றால் வரும். போ என்றால் போகும். வராதே என்றால் வராது. நன்றியுள்ள நாய் அது///
அப்போ நன்றியாவது இருகேங்கீர்..
மானந்தானில்லை... அதாவது இருக்கட்டுமே...

Anonymous said...

இனி கலைஞர் யாரை இலங்கைக்கு அனுப்புவார்?

Anonymous said...

2 நாள் பயணமாக போன மச்சான் திடீரென்று திரும்பி வந்து விட்டார். பாதி விருந்திலேயே திரத்தி அடித்திருப்பார்கள் போல..

Anonymous said...

// நன்றியுள்ள நாய் அது. //
Nice punch

Anonymous said...

பேசாமல் மத்திய அரசை மகிந்தவிடம் கொடுத்திட்டு டெல்லியை மாநில அரசாக்கி விடுங்கப்பா..

Well Said

thiru said...

டாங்கி எல்லாம் சரியாயிருக்கான்னு பார்க்க போயிருப்பார்.

சோனியா இப்போ அவ்வளவா பேசுறது இல்ல போல. பாவம்! நல்லபாம்பு.

Saminathan said...

//பேசாமல் மத்திய அரசை மகிந்தவிடம் கொடுத்திட்டு டெல்லியை மாநில அரசாக்கி விடுங்கப்பா..//

அப்புறம் ங்கோத்தாபய என்ன பண்ணுவார்...?

King... said...

\\
எங்களிடம் ஒரு நாய் இருந்தது. ஞ்ஞ்சு... வா என்றால் வரும். போ என்றால் போகும். வராதே என்றால் வராது.
\\

எப்படி அண்ணன்...

Anonymous said...

// நன்றியுள்ள நாய் அது. //
//சத்தியமா சிரிச்சுட்டே இருக்கேன்.//

சிரிச்சுக்கிட்டே இருங்க..வெவஸ்தைகெட்டதுகள்.

Anonymous said...

கொழுவிக்குள் ஏதோ அதிகார மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது?! எழுதும் மொழி நடையிலும் விடையங்களிலும் மாற்றம் தெரிகிறது.

Anonymous said...

//கொழுவிக்குள் ஏதோ அதிகார மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது?! எழுதும் மொழி நடையிலும் விடையங்களிலும் மாற்றம் தெரிகிறது.//

yes!