திமுக செயற்குழுக் கூட்டம் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாக இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இறுதிக்கும் கடைசிக்கும் இடையிலான ஒரு வேண்டுகோளை (கடைசி வேண்டுகோள் பின்னர் பயன்படுத்தப்படும்) கலைஞர் மத்திய அரசிடம் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் நாராயணனை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையொன்றை கலைஞர் கோராக்கூடும் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். உடனடியாக அல்லாது விடினும் எதிர்காலங்களில் மகிந்த ராஜபக்சவோ அல்லது அவரது தம்பிகளோ அழைக்கும் சமயங்களிலாவது நாராயணன் சென்று வந்தால் போதுமென கலைஞர் கருதுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாராயணனின் பயணத்தின் போது இலங்கையில் கால்மணி நேரமோ அரைமணி நேரமோ போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்துமாறு கலைஞர் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அதனை விடுதலைபுலிகள் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.
நாராயணன் பயணத்தின் பின்னர் இருவார காலம் கலைஞர் கழுத்துப் பிடிப்புக்கு வைத்தியம் செய்ய ஆஸ்பத்திரியில் சென்று படுப்பார் எனவும் அதன்பின்னர் யாரை இலங்கைக்கு அனுப்ப கோருவது என்பதன் இறுதி முடிவும் நாளைய கூட்டத்தில் எடுக்கப்படவிருப்பதாக திமுக செய்திகள் தெரிவிக்கின்றன.
6 comments:
பிராணாப் 125 டாங்கி, நாராயணன் 200டாங்கியாவது அனுப்ப வேண்டும் என கருணாநிதி கேட்டு கொள்வாரா.
நாராயணரு வாணாம். அவரு மவேன் மலனை அனுப்பி வெய்யுங்க
ஏன் மீதி இருக்கிற பீரங்கிய வித்துட்டு வரவா? நாராயணனு முதலில் சென்று இருக்க வேண்டும். தலைய விட்டு தும்ப புடிச்ச கதைதான் இன்னும்
உடனடியாக அல்லாது விடினும் எதிர்காலங்களில் மகிந்த ராஜபக்சவோ அல்லது அவரது தம்பிகளோ அழைக்கும் சமயங்களிலாவது நாராயணன் சென்று வந்தால் போதுமென கலைஞர் கருதுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன///
அத்துடன் எனக்குக் கிடைத்த செய்தி:- மக்கள் சாலைகளில் கூடுவதாலும் ஈழப்பிரச்சினை தொடர்பான போராட்டங்கள் அதிகரிப்பதாக அறிய முடிகிறதாகவும் வெகுவிரைவில் தமிழக சாலைகளை காலவரையின்றி மூடுவது தொடர்பாக திமுக மத்திய குழு ஆராய்ந்து வருவதாகவும் அறிய முடிகிறது.
நாராயணன் போவது உறுதி. ஏனெனில் அவருக்கு கொழும்பு போக விமான டிக்கட் கூட தேவை இல்லை. வன்னி ராணுவ முகாமிலிருந்து ஜீப்பிலோ எளிகாப்டரிலோ கொழும்புவிற்கு எளிதாக சென்றுவிடலாம் .
//தமிழக சாலைகளை காலவரையின்றி மூடுவது தொடர்பாக திமுக மத்திய குழு ஆராய்ந்து வருவதாகவும் அறிய முடிகிறது.//
:)
Post a Comment