சந்திப்புவின் ஒரு பதிவிலிட்ட பின்னூட்டம். அவர் முதலாவதாய் குறிப்பிட்ட உண்மை இது!
இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள்.
ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். //
என்னங்க..
கம்யுனிசம் மார்க்சியம் அது இது என பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க.. அதனால கொஞ்சம் விசயம் தெரிஞ்சவரா இருப்பீங்களோ என்று நினைச்சா..
ரொம்பவும் கூழ் முட்டையாக இருக்கிறீர்களே...
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டபோது சென்ற பத்திரிகையாளர்கள் அங்கு கட்டாகாலி நாய்களைத் தவிர யாரும் இல்லை. அனைவரும் கூண்டோடு இடம்பெயர்ந்து போய்விட்டார்கள் என சொல்லியிருந்தார்களே..
வெளியுலகத்தில என்ன ஏது நடக்குது என்றெல்லாம் பார்க்க மாட்டீர்களா... ?
மலையகத்தில் நடக்கும் கைதுகள் குறித்து ஏதாவது தெரியுமா? யாழ்பாணத்தில் நடக்கும் காணாமல் போதல்கள் குறித்து ஏதும் தெரியுமா..? அங்கே 600 பேருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்பதாவது தெரியுமா.. ?
தவளைகளே
கிணற்றின் மேலேறி வாருங்கள்.
10 comments:
சந்திப்பு மறைகழண்ட கேஸ். உதையே நான் பின்னாலை போட்டன். வ்
ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். //
இதுக்குச் சிரிக்கிறதா அழுறதா என்டு தெரியேல்லை ராசா... உலகத்திலை என்ன நடக்குதென்டே தெரியாத அளவுக்குப் போதையிலை இருக்கிறாங்கள் போல? நீர் தான் இப்பிடியான கிணறுகளை அப்பப்ப கலக்கி விட வேணும். அப்பப்ப அதுகள் உளறும்....கண்டு கொள்ளப்படதாப்பு....
கொழுவி,
நண்பர் சந்திப்பு விவரம் தெரியாத கூமுட்டை என்று கருத வாய்ப்பில்லை. மார்க்சீய கம்யூனிஸ்டுகள் ஈழப்பிரச்சனை உட்பட பல விசயங்களில் பொதுவுடமை சித்தாந்தத்துக்கு முரண்பாடான கொள்கையை கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனை மிகுந்த உண்மை. சாதீய முரண்பாடுகளில் மார்க்சீய கட்சி எப்போது செயல்பட துவங்கியது என்று பாருங்கள் அப்போது அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் இருப்பது புரிய முடியும்.
நிலப்பிரபுத்துவ கட்சியான காங்கிரசும், பாட்டாளி வர்க்க விடுதலையை பேசும் மார்க்சிஸ்டுகளும் ஈழப்போராட்டத்தில் ஒரே கொள்கையை கொண்டிருக்கின்றனர். பேச்சளவில் சுதந்திரம் பேசுவாரடி கிளியே! இப்படியிருக்க நண்பர் சந்திப்பின் கருத்துகளுக்கு வேதனைப்பட அவசியமில்லை. காரணம், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் தோழர்.வரதராசன் சொன்ன கருத்து இன்னும் பித்துக்குளித்தனமானது. 'ஈழத்தில் 30 லட்சம் தமிழர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆகவே தனிநாடு என்பது சாத்தியமில்லை' என்ற பொருளில் ஒரு ஊடக நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார் அவர். என்ன சோதனை இது மார்க்சுக்கும், லெனினுக்கும்!
இதுக்குச் சிரிக்கிறதா அழுறதா என்டு தெரியேல்லை ராசா... உலகத்திலை என்ன நடக்குதென்டே தெரியாத அளவுக்குப் போதையிலை இருக்கிறாங்கள் போல? நீர் தான் இப்பிடியான கிணறுகளை அப்பப்ப கலக்கி விட வேணும். அப்பப்ப அதுகள் உளறும்....கண்டு கொள்ளப்படதாப்பு....
அவர்கள் பெரிய பெரிய தடித்த புத்தகங்களுக்குள் மறைந்துள்ளார்கள். கிணற்றுக்குள் இருந்து வந்து விடலாம் இதிலிருந்து வர முடியாது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போன மக்கள் பெரும் அவலப்படுகின்றனர். பலர் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி மடிகின்றனர். காணாமல் போகின்றனர். கிழக்கு மாகாணத்தில் எத்தனைபேர் கொல்லப்படுகின்றர். என்னும் எவ்வளவோ கொடுமைகள் நடந்தேறுகின்றது. எல்லாம் தெரிந்துகொண்டுதான் இவ்வாறு பினாத்துகின்றார்கள்.
//ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். //
வன்னியில் இருந்து இராணுவப் பிடிக்குள் போகும் மக்கள் வவுனியா தடுப்புமுகாமில் அல்லவா வைக்கப்படுகின்றனர். கிளநொச்சியில் மக்கள் மீள செல்வதாக இலங்கை அரசு கூட எங்கேனும் சொல்லவில்லையே ! எந்த ஒரு செய்தியும் இல்லையே. இவ்வாறு எல்லாம் எப்படி பினாத்த முடிகின்றது? இவ்வாறு பினாத்தினால் நீங்கள் தேடும் அடயாளம் கிடைத்துவிடுமா? என்னும் எத்தனை பேரைய்யா கிழம்பியிருக்கிறீங்க ஈழத்தமிழன்ட சாவில பிழைப்பு நடத்த?
கட்டுகட்டான தடித்த புத்தகங்களை கிழித்து தின்னுகிற இந்த பன்னாடைகள் அவ்வப்போது செய்தித் தாள்களையும் கிழித்து தின்னலாமே...
இதெல்லாம் கொடுமைன்னா கொழுவி, சட்டமன்ற கட்சித்தலைவர் தோழர் பாலபாரதியையும் தோழர் வரதராசன் அவர்களின் மகன் தோழர்.வி.கே.கல்யாணசுந்தரத்தையும்“யாழ் நூலக எரிப்பு” ஆவனப்படம் தொடர்பாக திரையிடலுக்கு வரும்படி அழைக்கச் சென்றிருந்தேன். எப்ப எரிச்சாங்க “சொல்லவேயில்லை”ன்னு வடிவேலு மாதிரி கேட்டார்கள் தோழர்கள் இருவரும். அது பற்றிய பதிவின் இணைப்பு
http://kuttapusky.blogspot.com/2008/10/blog-post_21.html
உண்மையாவே இவங்களை வச்சு மசுரக்கூட புடுங்க முடியாது , நாமளும் சரி நமக்கு எதிர் தரப்பும் சரி :)
கொழுவியாரே இந்த சந்திப்பு சீபீஎம் எனும் போலி கம்யூனிஸ் கோஷ்டி அவர்கள அம்பலப்படுத்தும் வினவு/ ம.க.இ.க வினரை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுதப்பட்ட பதிவு இது. ஏதோ சந்திப்பு தான் அபத்தமாக எழுதுகிறார் என்றில்லை அந்த கட்சியே இப்படித்தான் சிந்திக்கிறது இவரை சம்பளம் கொடுத்து பிளாக் எழுத வைத்திருக்கிறது. ஜெயாவுடன் கூட்டனி வைத்துள்ள இவர்கள் வாங்கிய காசுக்கு மேல கூவுகிறார்கள். அவ்வளவே..மற்றபடி இவர்களுக்கு மார்க்சியமும் தெறியாது ஒரு மன்னாங்கட்டியும் புரியாது...!
//இதெல்லாம் கொடுமைன்னா கொழுவி, சட்டமன்ற கட்சித்தலைவர் தோழர் பாலபாரதியையும் தோழர் வரதராசன் அவர்களின் மகன் தோழர்.வி.கே.கல்யாணசுந்தரத்தையும்“யாழ் நூலக எரிப்பு” ஆவனப்படம் தொடர்பாக திரையிடலுக்கு வரும்படி அழைக்கச் சென்றிருந்தேன். எப்ப எரிச்சாங்க “சொல்லவேயில்லை”ன்னு வடிவேலு மாதிரி கேட்டார்கள் தோழர்கள் இருவரும். அது பற்றிய பதிவின் இணைப்பு
http://kuttapusky.blogspot.com/2008/10/blog-post_21.html
உண்மையாவே இவங்களை வச்சு மசுரக்கூட புடுங்க முடியாது , நாமளும் சரி நமக்கு எதிர் தரப்பும் சரி :)//
அய்யகோ!
நீங்க அவர்களிடம் அதிகமாக எதிர்பார்த்துவிட்டீர்களோ என்று தோனுது. எல்லா அரசியல் வாதிகளும், வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் அல்லர். பாவம் அவர்களுக்கு கேரளாவுக்கும்,மேற்கு வங்கத்துக்கும் போராடவே நேரம் பத்தவில்லை. இதுல தமிழர்களுக்கு எப்படி நேரம் ஒதுக்குவது.
அய்யகோ!
நீங்க அவர்களிடம் அதிகமாக எதிர்பார்த்துவிட்டீர்களோ என்று தோனுது.//
அந்த பக்கம் போறப்ப எல்லாம் சித்தாந்தம் அது இது என்று பேசிக்குவாங்க. அட ஏதோ புத்திஜீவிகளின் இடம். நமக்கென்ன வேலை இங்கென ஓடியாந்துருவேன்.
ங்கொய்யால இதத்தானா இத்தனை நாள் பேசிட்டிருந்தாங்க
Post a Comment