Friday, February 06, 2009

அது எனது மூஞ்சி

தேசக் கருச்சுமந்து
போராடச் செல்வோளே !
சிங்களக் கொடுங்கோன் கண்டு
கிளர்ந்தவளல்லவா நீ?


உனது பெற்றோரைப்
பூண்டோடு புணர்ந்த சிங்கள ஆட்சி,
உனது
கிராமத்தைக் கற்பழித்தபோது
ஆயுதந்தரித்தவள் நீ,


பாசிச அரசோ
அல்லப் பார்ப்பனப் பயங்கரவாதியோ அல்ல நீ!
புத்தனின்
பித்தர்கள் போடும் கொலைக் கூச்சல்
உனது தேசத்தைக் கற்பழிக்கின்றது இன்று!


மீளவும்
பாதகர்கள் தோழி,
பாதகர்கள் தோழி
பாரதஞ் சொல்பவர்கள் பாதகர்கள் தோழி!

என் தோழி,
இது கண்ணீர்த்தானம்
அநுராதபுரத்தில் உன் சிதையைக் கண்ட கண்ணீரோடு
இன்றுன் ஓர்மம் கண்டு கண்ணீர் சிந்துகிறேன் தோழி?
புரியவில்லைப் புலம்புகிறேன்-பொய்யில்லை!

நான் அழுகிறேன்,
என் இதயம் தினமும் ஓயாது நோகிறது
நான் யார்?
இனவாதியா,இடதுசாரியா?
எதுவுமே இல்லை!

மனிதன்
மகத்துவமாக வாழ்வதற்காக-நீ
போராடும் பொழுதில் நான் பார்வையாளன்
என் கரங்களில் தாங்கிய சுடுகலம் பறிக்கப்பட்ட அன்று
உன்னைக் கொன்றோம்

தோழி,
தனித்தா போராடுகிறாய்?
உனக்கு யாருமே இல்லையா?
எனது இதயமும்,என் விருப்பமும் துணையாகட்டும்
திடமான உனது நெஞ்சுக்கு துணிவையும்
துன்பமான சூழலையும் தந்தவர்கள் நாம்!

எனக்குப் பசிபோக்கிய பனை
உனக்கு அரணாகவரும் பாக்கியம்கூட
எனக்கு வாய்க்கவில்லை!

ஓ...
தற்குறியான என் சுயமே
என் உடலை
அவளுக்கு -அவனுக்கு அரணாக்கு
நான் மற்றவரைக் கொல்லேன்
என்னைக் கொல்பவரையும் விடேன்
நீ
என் சுயத்தைக் கொண்டாய்
நான் தனித்திருக்கிறேன்,அழுகின்றேன்!

அர்ப்பணிப்புடையவளே தோழி
தமிழச்சி நீ என்பதற்காக நான் கண்ணீர் சிந்தவில்லை
நாம் ஒடுக்கப்பட்டவர்கள்
தொடர்ந்தும் உலகங்களாலும்
இந்திய வஞ்சகத்தாலும் ஒடுக்கப்பட முதலில்
உன்னைக் கொல்வதற்கு கூடுகிறார்கள் அவர்கள்
நான் அறிவேன் நீ பயங்கரவாதியல்ல!

நான் அறிவேன்
நீ பாசிஸ்டு இல்லை
எனது மாமியன் மகனும்
அக்காளின் மகனும் நீ
உன்னைக் கொல்வதற்கு எனக்கு எந்தத் தத்துவம் தேவை?
போடு குப்பையில் என் புரிதல்களை
மக்கள் உன்னையும் என்னையும் தவிர்த்தாகப் புரிய
நான் கருத்துவளையத்துள் மாட்டிய விலங்கு இல்லை!

உன் வாழ்வுக்காக அழுகிறேன்
வா,வந்து என் முத்தத்தில் உச்சி மோந்த வீர சுகத்தைத் தா!
என் புதல்வியே !,தோழியே ,மருமகளே ,சோதரியே
சும்மா சொன்னார்கள்
"தன் கையே தனக்கு உதவி" என?

இன்னொரு
வாழ்வுக்காக நான்
உனது அழிவை விரும்பேன்
நீ இந்த மண்ணின் மகள்
என்னை உனக்குள் புதைத்துவிட்டு
நான் உனக்காகக் கிறுக்குவேன்
இனி உனது அழிவைப் பற்றியே எழுதுவேன்

பார்வையாளனக இருக்கும் நான்
உன்னைக் கொல்வதற்கான முதற் கல்லைப் பதித்தேன்
கட்டிலில் புணர்வதற்கான எனது ஏற்பாட்டிற்குப் பளிங்குப் பத்திரிகை
என் உறவுகளுக்காகப் பார்வைக்கு வைக்கிறேன்
பாவி நான்,வஞ்சகன்
வியாபாரத்துக்காக உன்னை விளம்பரப் படுத்தினேன்
உன் இறப்பை மௌனித்து வரவேற்கிறேன்
கொடுமையானவொரு இனத்தின் வீரப் புதல்வி-மகள் நீ
எனது குருதியின் துளியே
உன் மார்பினில் துளைக்கும் அந்நிய ரவைக்கு
நானே வியர்வை சிந்தி நிதியளித்துள்ளேன்
உன்னைக் கொன்றுபோட முனைபவர்களுள்
என் நிழலும் இருக்கிறது

என் தோழி
உனது அழகான புன்னகையைக் கொல்வதற்கும்,
உன் தேசக் கனவை அழித்தெறியவும்
உன் திடமான உறுதியைக் குலைத்துப் போடுவதற்கும்
நானும் உடந்தையாகிப் பார்வையாளனானேன்

கைகட்டி,வாய் மூடி
வருகின்ற பெருநாட்களுக்குக் கொண்டாடும் மனதோடு
உனக்கும் எனக்கும் தொடர்பற்ற
உலகத்தைத் நான் சிருஷ்டித்துக் கொண்டேன்,
எனது மக்களின் மண விழாவுக்கு
வரவேற்பிதழ் பல்லாயிரம் யூரோவில் பதிப்பிக்கிறேன்
நீ,என்றும்போலேவே பனைமரத்தை அரணாக்கி
எமது மண்ணுக்கு உடலை விதைக்கின்றபோதும்

என் தோழி
நான் வஞ்சகன்!
எனக்காக நீ உயிர் தருகையில்
உன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்
எனது குலத்தின் வீரமே,விழுதே,வியங்கோளே,
விலைமதிப்பற்ற எனது தேசமே!
ஏன் நான் பார்வையாளன் ஆனேன்?
உன்னைக் கொல்வதற்கு ஒப்படைத்து
நான் மட்டும் தப்பினேனா?

மகத்துவம் என்பதை
உனது வாழ்வினோடு சொல்பவளே
உனது மக்களின் மௌனத்தைக் கலைக்கின்ற உன் வீரம்
இங்கு கண்டேன்
வா,வந்து என்னை நீ மன்னித்துவிடு
நான் உன்னைக் கொன்றுவிட்டேன்
உனது வீரத்தால் என்னைக் கொல்,கொய்துவிடு எனது சிரசை!

உன்னைச் சுற்றி வளைத்த
பாரதஞ் சொல்லும் பார்ப்பனியக்கூட்டம்,புத்தர் தர்மம்
உலகத்தைத் தமக்கிசைவாக்கி
ஒவ்வொரு திசையிலிருந்தும்
உன்னைக் குறிவைத்திருக்கையில்
நீயோ
திடமான நெஞ்சை முன் நிறுத்தித்
தேசத்துக்காக
உனது உடலைக் காணிக்கை செய்து
என்னை எள்ளி நகையாடுகிறாய்!

என் உயிரே,உத்தம பெண்ணே !
உணர்வுடையவள் நீ
உனது நரம்புகளில்
எனது கோழைத் தனம் தீயாக வீரக் குருதியைக் கொட்டட்டும்
போ,போரிடு,போரிடு
வஞ்சகர்களின் வலை அறுபடும் வரை நீ போரிடு
என் தேசமானவளே
உன்னை விட்டவொரு தேசம் எனக்கில்லை!

நீ எனது தேசம்,
நீ,எனது மொழி,
நீ,எனது மதம்,
நீ,எனது உடல்,
நீ,எனது வேர்,
நீ,எனது பூர்வீகம்!
நீ,எனது மகள்,
உன்னைக் கொல்வதில் நான் மகிழ்ந்திருக்கேன்
உனது அழிவை மகிழ்வாக்கிப் பணம் கொண்டவன் நான் அல்ல மகளே

என் தேசத்தின் வீரமே!
உனக்கு ஒரு பனைமரமாக இருந்து
அரணாக வருவதற்குக்கூட அருகதையற்றவன் நான்
உன்னைப்பேணி ஒரு குவளை சோறிட முடியாத எனது உழைப்பு
எனது பிள்ளைக்குப் பூமா மார்க் சோடி சப்பாத்து வேண்டுகிறது
என் போலித்தனம் உன்னைக் கொல்வதற்கு முகவுரை எழுதுகிறது

அழுவதால் நான் கழுவப் படுகிறேன்
உனது வீரத்தால் எனது கோழைத் தனம் கொல்லப்படுகிறது
உனது உயிர் தியாகத்தால் என் பிழைகள் அழிக்கப்படுகிறது
உனது உடற்சிதைவால் எனது முகம் இழக்கப்படுகிறது
இதயம் நோகிறது-நீ
போரிடும் ஆற்றலோடு தனித்திருக்கிறாய்
உனக்காக வழி நெடுக உனது தேசக் கனவு மட்டுமே துணையாக இருக்கிறது
உன் தேகத்தில் துளைபோடும் ரவைக்கு எனது மனமிருந்தால்
நிச்சியம் எய்தவனையே வேட்டையாடும்

தோழி
உன்னைக் கொல்பவர்கள் கூடுகிறார்கள்
ஐந்து நட்சத்திரக் கோட்டல்களில்
ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன
உனது காலடியின் தடங்களை அழித்து வளங்களை அள்ளுவதற்கு
நீ
முதலில் அழிக்கப்படுகிறாய்
உன் கோப்பையில் பங்கிட்டுக் கொண்டவன் கருணா
பணத்தோடு பாரதஞ் சொல்கிறான் கிழக்கில்!

என்னவளே
எனது காதலி,கண்ணைக் கசக்குவதால்
நான் கடுகளவுகூட உனக்கு உதவேன்
எனது அழுகை எனக்கானதே!
நீ, என்னை மன்னிக்காதே
எதிரியைச் சுடும் அந்தக் கணத்தில் எனது துரோகத்தையும் நினை
உனக்கு அதுவே துணையாகவும்,நெஞ்சுரத்தையும் தரும்!

ஒருவேளை நீ,வென்றுவிட்டால்
உனது சுய வீரமேதான் அதன் அடித்தளம்
எவருமே உனக்கு உறுதி தரவில்லை,
உனது மனத்தைத் திடமாக்கி
அழிக்கப்படுவதற்கு முன் காறி உமிழ்ந்து
எதிரியின் மூஞ்சியில் துப்பு
அது எனது மூஞ்சி.

- நன்றியுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மற்றும் மன்னங்கண்டல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினரரின் ஊடறுப்பு அதிரடித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான படையப் பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:

கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாங்கண்டல் பகுதில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களுகம் குவிக்கப்பட்டிருந்தன.

1ம் நாள் தொடக்கும் 3ம் நாள் வரை இடம்பெற்ற புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்கள் மற்றும் கரும்புலி வீரர்களின் தாக்குதல்களில் 1000க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்
81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்
துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல

என இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவர் இணைந்து நிற்கும் புகைப் படங்கள் ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்துள்ளன.

புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலையடுத்து படையினர் வசம் இருந்து 3.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு விடுதலை புலிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் படையினருக்கான படையப் பொருள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 வாகனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேடியழிக்கும் பிரிவினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

6 comments:

சக்(ங்)கடத்தார் said...

'என் தோழி
நான் வஞ்சகன்!
எனக்காக நீ உயிர் தருகையில்
உன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்
எனது குலத்தின் வீரமே,விழுதே,வியங்கோளே,
விலைமதிப்பற்ற எனது தேசமே!
ஏன் நான் பார்வையாளன் ஆனேன்?
உன்னைக் கொல்வதற்கு ஒப்படைத்து
நான் மட்டும் தப்பினேனா?//

தம்பி கொழுவி! கவிதை அருமை! நானும் தெரியாமத் தான் கேட்கிறன்?? உந்தாளுக்கு என்ன நடந்தது? ஒரு நாளைக்கு அவங்கள் சரியில்லை, பாசிசம், மனிதக் கேடயமாச் சனத்தை வைச்சிருக்கிறாங்கள் என்டெல்லாம் கத்துறார். பிறகு திடிரென்று மனுசன் ஏன் இப்பிடி ஆகிட்டார்? பாடுறதென்டால் ஒரு பக்கம் பாடச் சொல்லும், சும்மா கூளுக்கும் பாடிக் கஞ்சிக்கும் பாட வேண்டாம் என்டு சொல்லும்?? இதுகளைப் புரிஞ்சு கொள்ளவே முடியவில்லை.

தமிழ்பித்தன் said...

ஐயோ! முடியல கூட்டமா சேர்ந்து குழப்புறாங்களே!

என்ன கொடுமை சார் இது! said...

என்ன கொடுமை சார் இது!
கவிதையின் பின் பாதி பாலஸ்தீனக் கவிதையொன்றின் தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சுட்ட மாதிரித் தெரியுது!

Sri Rangan said...

//என்ன கொடுமை சார் இது!
கவிதையின் பின் பாதி பாலஸ்தீனக் கவிதையொன்றின் தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சுட்ட மாதிரித் தெரியுது!//


சார்,சார்!
அந்தப் பாலஸ்த்தீனக் கவிதையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை இங்கே ஒட்டிவிட்டீர்களானால்,இந்தப் போலிக் கவிதையும் அம்பலமாகுமெல்லே!அந்தக் காரியத்தையும் செய்யுங்களேன்.

சாத்திரி said...

சிறிரங்கனிற்கு பழைய குடும்பப்பாதிப்பு இன்னமும் மனதை விட்டு அகலவில்லைபோல .ஆனால் இப்ப தன்ரை வீட்டுக்குக்கீழை ஆக்கள் நடமாடினம் என்று பழையபடி வழக்கு போடாமல் இருக்கிறார் .அதுசரி இப்ப வயசு போட்டுதல்லோ?? அவரை சொல்லவில்லை கிகிகி அவருக்கு விளங்கும்

Sri Rangan said...

//சிறிரங்கனிற்கு பழைய குடும்பப்பாதிப்பு இன்னமும் மனதை விட்டு அகலவில்லைபோல .ஆனால் இப்ப தன்ரை வீட்டுக்குக்கீழை ஆக்கள் நடமாடினம் என்று பழையபடி வழக்கு போடாமல் இருக்கிறார் .அதுசரி இப்ப வயசு போட்டுதல்லோ?? அவரை சொல்லவில்லை கிகிகி அவருக்கு விளங்கும//

சாத்திரி,உங்க பொண்டாட்டியையும்-தங்கச்சியையும் கேட்டதாகச் சொல்லுங்கோ,அப்படியே அவர்களுக்கு அலுப்பு மருந்தும் கொடுங்கோ!