இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்கா வான்படைத் தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான
கேணல் ரூபன்
லெப்.கேணல் சிரித்திரன்
ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இந்த இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 comments:
ஓ.. அப்ப ரெண்டு பறவையும் விழுந்திட்டுத்தான் எண்டது ஊர்சிதமாகிட்டுது.
புலிகளின் இந்த அறிக்கை தமிழ் மக்களைப்பொறுத்தவரை ஒரு நல்ல செய்தி அல்ல.
இன்று ஈழதமிழர் அனைவருக்கும் ஒரு கருப்புத்தினம்.
ஒன்றில், விழுந்த பறைவைகளின் மீசையில் மண்ணொட்டாத கதையை புலிகள் அறிக்கைவிடுமளவு ஈழத்தமிழர் நிலை தாழ்ந்து போய்விட்டது
அல்லது,
மிகச்சிறிய சேதங்களுக்கு மிகப்பெரிய விலைகொடுக்குமளவுக்கு எமது போராட்டம் தோற்றுப்போய்விட்டது
இதனை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.
இந்த பின்னூட்டத்தினை எனது சொந்தப்பெயரில் வெளியிடத்தான் விருப்பம். இலங்கையில் சூழ்நிலைகள் நன்றாயில்லாததால் மனமின்றி முகமூடி போட்டுள்ளேன்.
வாஷிங்டனில் கவனஈர்ப்பு போராட்டம் யுத்த நிறுத்தம் கோரி கொழும்பில விமானத்தாக்குதல் ம்ம் ம்ம்
Post a Comment