Saturday, October 27, 2007

இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ?

அடுத்த நேயர் விருப்பமாக இடம் பெறும் பாடல் பாலும் பழமும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடலைப் பாடியவர் P. சுசீலா. நேயர் விருப்பங்களை நீங்களும் கேட்கலாம்.

இங்கு அழுத்தி பாடலைக் கேளுங்கள்

Friday, October 26, 2007

20 நிமிடங்களில் அந்த தளம் முழுமையாக கைப்பற்றப்பட்டது !

இது நாள் வரையான சீண்டல்களுக்கும் கோபமேற்படுத்தும் தாக்குதல்களுக்கெதிராகவும் பலமான பதிலடி கொடுக்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஊடறுத்து உள்நுழைந்து தாக்கும் பெரும் சமரில் 20 நிமிடங்களில் தளம் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அநுராதபுர வான்படைத் தளம் 20 நிமிடங்களில் கரும்புலிகள் வசம் வீழ்ந்தது - போராளி கலைக்கோன்

எல்லாளன் நடவடிக்கையின் போது அநுராதபுர வான்படைத் தளத்தை சிறப்புக் கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என போராளி கலைக்கோன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவைச் சேர்ந்த போராளி கலைக்கோன் ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில்...

எல்லாளன் நடவடிக்கையின் போது அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கிருந்த வானூர்திகளை அழித்துள்ளனர்.

எல்லாளன் நடவடிக்கைக்கு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தலைமை தாங்கினார்.

தற்காப்பு நடவடிக்கைகளிலும் காட்டுப்புற நகர்வுகளிலும் கரும்புலி கப்டன் பஞ்சசீலன் ஈடுபட்டார்.

விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளுவதில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற கப்டன் ஈழப்பிரியா முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளார். இவர் அநுராதபுர வான்படைத் தளத்தில் உள்ள கனரக ஆயுதங்களைக் கைப்பற்றி அங்கிருந்த படை நிலைகளை தகர்த்தெறிந்தார்.

கரும்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அநுராதபுர வான்படைத் தளம் வீழ்ந்த பின்னர், வான்படைத் தளத்தினுள் உள்நுழைவதற்கான வான்படையினர் போரிட்டு நகரும் போது விடுதலைப் புலிகளின் வான்படையினர் வான்வழித் தாகக்குதலை நடத்தி சிறீலங்கா வான்படையினரை பின்வாங்கச் செய்துள்ளனர்.

8 வானூர்திகள் அழிக்கப்பட்ட நிலையில் அநுராதபுர வான்படைத்தளம் உள்ள வானூர்தி தரிப்பிடங்கள் சிறப்புக் கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டு தீப்பற்றியதில் அங்கிருந்து ஏனைய வானூர்திகளும் நாசமாகியுள்ளன.

இதில் அமெரிக்கத் தயாரிப்பான பீச் கிராவ் வேவுவிமானத்தை கரும்புலி லெப்.கேணல் வீமன் தாக்கியழித்தார்.

எல்லாளன் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கரும்புலி லெப்.கேணல் இளங்கோ விழுப்புண் எய்திய நிலையில் காலை 8.30 மணிக்கு வீரசாவடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் வரை வான்படைத் தளத்தினுள் கடும் மோதல்கள் இடம்பெற்றன.

தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடியான நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் அநுராதபுர வான்படைத் தளத்தில் நின்ற அனைத்து வானூர்திகளும் கரும்புலி மாவீரர்களால் துடைத்தெறியப்பட்டன என கலைக்கோன் ஆசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thursday, October 25, 2007

மாநாட்டில் அவர் சொன்னது இதுதானாம் !

பாரீஸில் இனப்பாகுபாடு உள்ளது. சில சமயம் துப்பிவிட்டுச் செல்கிறார்கள் என மனோ என்பவர் சொல்ல அதற்கு

காறித்துப்பாமல் என்ன செய்வார்கள். வெளிநாட்டுக்கும் வந்து கோவில் தேங்காய் உடைப்பது என்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி விடுதலைப் புலிகள் தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள

என அவர் கூறினாராம்.

ஏற்கனவே பெண்கள் மாநாட்டில் விடுதலைப் புலிகள் தன்னைத் துன்புறுத்துவதாக ராஜேஸ்வரி அவர்களிடம் புகாரளித்ததாக செய்தி வந்திருந்தது. அதனை அவர் மறுத்துமிருந்தார்.

இப்போ மீண்டும் விடுதலைப் புலிகள் தன்னை தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள் என முறையிட்டிருக்கிறார்.

எனது கேள்வி என்னவென்றால்...

விடுதலைப் புலிகளுக்கு வேறை வேலை இல்லையா... ?

ஒரு வேளை வேலை வெட்டியற்று வலைப்பதியும் என்னைப் போன்ற சிலரைத்தான் புலிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ ?

Wednesday, October 24, 2007

மாநாட்டிலிருந்து டெலிபோன் உரையாடல்

டெலிபோன் உரையாடலை எப்படி ஒலிப்பதிவு செய்வதென்பதை சொல்லித் தந்த சிங்களச்சாலையைச் சேர்ந்தவருக்கு என் நன்றிகள்.

மாநாட்டிலிருந்து நமது செய்தியாளர் பேசுகிறார்.

Tuesday, October 23, 2007

மார்க்ஸிசம் காலாவதியாகிவிட்டதா? - பாலகுமார் விளக்கம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கெனத் தோன்றி ஈரோசின் தலைவராக இருந்தவரும் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருப்பவருமான திரு. க.வே பாலகுமாரன் புலம்பெயர் சஞ்சிகையொன்றுக்கு அண்மையில் அளித்த செவ்வியிலிருந்து ஒரு பகுதி இங்குப் பிரசுரிக்கப்படுகிறது.

கேள்வி: "ஒருவருக்காக சமூகம். சமூகத்துக்காக ஒருவர்" என்ற பொது உடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு அரசியலில் பிரவேசித்தவர் நீங்கள். "மார்க்சிசம் காலாவதியாகிப் போன ஒரு சித்தாந்தம்" என ஒரு சாரார் கூறி வருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: எதுவும் இவ்வுலகில் காலாவதியாவதில்லை. காலத்திற்கேற்ப அவை தம்மை மாற்றியமைக்கின்றன. இதுவே மாக்சிய சித்தாந்தத்தின் உட்கரு. எனவே எவ்வாறு மாக்சியம் காலாவதியாக முடியும்? இயங்கியல் அணுகுமுறையும் முரண்பாடுகளைக் கையாளும் திறனும் மார்க்சியம் மனிதத்திற்கு அளித்தகொடை. எனவே எங்கு மனிதர் போராடுகிறார்களோ, எங்கே அவர்கள் பாதகமான சூழலை மாற்ற முனைகின்றார்களோ- அங்கு அவர்களுக்கு இவை கைகொடுக்கும். வெற்றியைத் தேடித்தரும். மனிதர் விடும் தவறுகளுக்கு மார்க்சியம் பொறுப்பல்ல.

சிந்திக்கத் தூண்டுவதும் சரியான இடத்திற்கு உங்களைக் கொண்டு சேர்ப்பதுமே மார்க்சியம் எனும் அறிவியலின் பணி. கடவுளை நம்புவோர் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்காக கடவுளை நம்பாமல் விடவில்லையே?

~~~~~~~~~~~~~~~~~~~~~
சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணலிலிருந்து...

Friday, October 19, 2007

ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அனைவரும் அணிதிரள்க!

நம்ப ஏலாமல் கிடக்கோ? இருந்து பாருங்கோ இப்பிடியோர் அறிவிப்பு கெதியில வரத்தான் போகுது.

சித்தாந்தங்களையும் புத்தகங்களையும் அப்பிடியே வரிவிடாமல் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு காவடியாடுற கூட்டம் இப்பவும் நிறைய இருக்கத் தான் செய்யுது. பிரதேச, கலாசார, நுட்பங்களுக்கு ஏற்றாற்போல் அவற்றின் பயன்பாடும் தேவையும் மாறுமென்ற அடிப்படைப் புரிதல்கூட இருப்பதில்லை இவர்களுக்கு.

மாஸ்கோவில் மழை பெய்தால் மானிப்பாயில் குடைபிடித்தவர்களும் சீனாவில் வெயிலடித்தால் சித்தங்கேணியில் நிழல் தேடியவர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்தார்கள். துன்பம் என்னவென்றால் இன்றும் அப்படியான கூட்டங்களைப் பார்க்கமுடியும்.

தமிழ்வலைப்பதிவுகளில் அப்படியான நிறையப்பேரைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்ததால் அவரின் அடிபொடிகள் அதை அப்பிடியே ஈழத்திலும் கொப்பி (காப்பி) பண்ணி அங்கும் பார்ப்பனிய எதிர்ப்புச் செய்கிறார்களென்பதைப் பார்க்கும்போது இவர்களுக்கும் பெரியாருக்கும் இருக்கும் தொடர்பு மாஸ்கோவுக்கும் மானிப்பாய்க்கும் இருக்கும் தொடர்பு போற்றான் தெரிகிறது.
அதே அடிபொடிகளிடமிருந்து விரைவில் வரப்போகும் அடுத்த "கலக" அறிவிப்புத்தான் ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

அப்படியொரு போராட்டத்தை அறிவித்து நோட்டீசு அடித்துப் "போராட"ப்போகும் தளபதி, தலைவிகளை வாழ்த்தி விடைபெறுகிறேன்

வணக்கம்! நன்றி!

முத்திரைகள்: தமிழ் இஞ்சி மிளகு மா சீனி மணி கலகம் கலக்கம்

யாருக்கு யார் பெண்ணுரிமை குறித்துப் போதிப்பது ?

ஆனையிறவுப் பெருந்தளம் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது அதற்குள் ஊடுருவிய புலிகளின் சிறப்புப் படையணியொன்று அங்கிருந்த ஆட்லறிப் பீரங்கிகளைத் துவசம் செய்தெறிந்தது. அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஈரத்தீ எனும் திரைப்படத்தினை புலிகளின் நிதர்சனம் திரைப்பட வெளியீட்டுப் பிரிவினர் வெளியிட்டிருந்தார்கள்.

அதிலிருந்து சில காட்சிகள் இங்கே விரிகின்றன. சமரை வழிநடத்துபவர், பிற சக ஆண் பெண் போராளிகளுக்கு களத்தில் ஆணை வழங்குபவர் யாரென அவதானியுங்கள். சீதனப் பிரச்சனைகள் இருந்தாலும் சாதிப் பிரச்சனைகள் இருந்தாலும் பெண்ணியம் குறித்த பிற்போக்குச் சிந்தனை மிக்க சமூகமொன்றிலிருந்து புறப்பட்டு சுமார் பத்து வருடங்களில் சகலதையும் உடைத்தெறிந்து இன்று ஆண்களுக்குச் சமானமாக, ஆண்களை வழிநடத்துகிற அளவிற்கு உயர்ந்திருப்பது ஒரு பாய்ச்சல்தான்.

ஏனெனில் இவர்கள் தனியே அறிக்கை விட்டுக் கொண்டோ நோட்டீஸ் கொடுத்துக்கொண்டோ இருக்கவில்லை. செயலில் காட்டினார்கள்.

சொல்லுக்கு முன் செயல்.





Thursday, October 18, 2007

பெரிய டைப்பிஸ்ட் NOT பெரியாரிஸ்ட்

இலங்கை நண்பரொருவரோடு பேசிக்கொண்டிருந்த போது அவர் ஓரிடத்தில் சொன்னதுதான் இப்பதிவின் தலையங்கம். இதற்கு மேல் இப்பதிவில் நான் சொல்வதற்கு ஏதுமில்லை.

இவர்கள் போராளிகள்

ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓடுவதையே இதென்ன கலிகாலம் வாய்பிளந்த பழமை வாதச் சமூகமொன்றில் பிறந்து இன்று அச் சமூகத் தடைகளை உடைத்து வெளியேறி வீதிகளில் மட்டுமல்ல காடுகளிலும் கடல்களிலும் இரவு பன்னிரன்டு மணிக்குத் தனித்து திரியும் இவர்கள் பெண்விடுதலைக்காக மட்டுமல்ல தாம் சார்ந்த இனத்தின் விடுதலைக்காகவும் போராடுகிறார்கள்.

இவர்கள் போராளிகள்.
இவர்கள் கலகக் காரர்கள்

இவர்களின் போராட்டம் எத்தகையது என்பதை உணர்த்தும் குறும்படம் இது.

என்ன செய்வது. இவர்களின் முகங்களை நாம் தான் காட்ட வேண்டியுள்ளது.


Tuesday, October 16, 2007

இரயாகரன் மறுத்த பின்னூட்டம்

தோழர் இரயாகரன் யாழ் மேலாதிக்க கழிசடைத்தனம் குறித்து எழுதிய பதிவில் ரிபிசி புலியெதிர்ப்புக் கும்பல் குறித்தும் சொல்லியிருக்கிறார். அப்பதிவுக்கு நான் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன்.

ரிபிசி மீது எனக்கு உடன்பாடு இல்லைத்தான். ஆனாலும் புலிப் பாசிசத்தை அம்பலப் படுத்த எமக்கு அந்த வானொலியை விட்டால் வேறு வழியில்லை என எழுதிய அப்பின்னூட்டத்தை இரயாகரன் தடுத்து நிறுத்திவிட்டார். :(

ஏன்.. நான் இரயாகரனுக்குப் பிடித்த புலிப் பாசனம்... மன்னிக்கவும் புலிப் பாசிசம் என்ற சொற்கள் கொண்டு தானே அப்பின்னூட்டத்தினை நான் எழுதியிருந்தேன். பிறகேன் அதனை தடுத்து நிறுத்தினார்..?

ஒரு வேளை எதிரிகளோடு இணக்கமான விவாதத்தை நடத்த முடியாதென்பதாலோ அல்லது எதிரிகளின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பது வீண் என்பதனாலயோ அதனை அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

அட

அதனைத் தானே புலிகளும் சொல்கிறார்கள். இதிலிருந்து தெரிவதென்ன ?

Sunday, October 14, 2007

ஸ்டாப் அட்டாக்கிங் பத்மப்பிரியா - ஒரு கராத்தே வீடியோ!

நடிகை பத்மப்பரியாவைத் தாக்கிய டவுசர்களுக்கு கொழுவியின் வீடியோ கண்டனப் படம்!


Friday, October 12, 2007

தமிழச்சியின் File மூடப்படுகிறது

அண்ணன் ஸ்ரீரங்கன் பெயரிலியின் பதிவொன்றிற்கு இட்ட பின்னூட்டத்தில் தமிழச்சி விவகாரம் தொடர்பான கோப்பை இத்தோடு மூடி விடுவதாக அறிவித்திருக்கிறார்.

சாதியத்துக்கெதிரான போராட்டத்தில் நம்மிடம் வேறு பார்வைகளும்,அது சார்ந்து உறவுகளும் தொடர்பாகக் கருத்துக்கள் தனித்துவமாக இருப்பதை ஏலவே எனது முதற்கட்டுரையில் கொடுத்துவிட்டேன்.இதற்குமேல் இந்தத் தமிழச்சியின் பயிலை இதோடு மூடிவிடுகிறேன்.

அவரின் முடிவை ஏகோபித்து ஆதரித்து நாமும் தமிழச்சி தொடர்பான பதிவுகள், பின்னூட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விலகிக் கொள்கிறோம். இங்கே தமிழச்சிக்கு சென்று சேர வேண்டிய ஒரு சில பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆபாச வார்த்தைகள் அற்ற, அல்லது ஆங்காங்கே தமிழச்சியின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் பரவிக் கிடக்கும் அநாகரீக வார்த்தைகள் அற்ற பின்னூட்டங்களே வந்து கொண்டிருப்பினும் அவை அவரது பதிவுகளில் அவை வெளியிடப் பட்டாலே படிப்பவர்கள் கொஞ்சமாயினும் புரிந்து கொள்வார்கள். ஆகவே அவரது பதிவுகளில் பின்னூட்டமிட்டுவிட்டு அவர் வெளியிடுவாரோ, இல்லையோ என்ற ஐமிச்சத்தில் இங்கும் வந்து பின்னூட்டிச் செல்பவர்களுடைய பின்னூட்டங்கள் வெளியிடப் பட மாட்டா.

ஒரு பழ மொழி சொல்வார்கள். நான் இங்கே பகிரங்கமாகச் சொல்ல விரும்பாத அப் பழமொழிக்கேற்ப நாம் விலககிச் செல்கின்றோம்.

வாருங்கள் தோழர்களே.. நாம் வழமை போல கும்மியடிப்போம்.

தமிழச்சி தான் வரித்துக் கொண்ட பாதையில் வீறுநடை போட வாழ்த்துகிறோம்.
இதுவரை அவர் போராடிப் பெற்ற பயன்களைப் போலவே இனியும் பெற வாழ்த்துகிறோம். ஐரோப்பிய வாழ் தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாது ஈழத்துவாழ் ,அமெரிக்க வாழ், தென்துருவ வாழ் தமிழர்களுக்கும் கூட அவர் கூடிய விரைவில் சமூக விடுதலை வாங்கிக் கொடுப்பார் என்னும் நம்பிக்கை எமக்குண்டு.

அண்ணன் ஸ்ரீரங்கன வழியே நமது வழி.

இனி

ஸ்டார்ட் மீசிக்

அண்ணன் கொழுவி அசைந்து வாறான்
அடியுங்கடி ஈழத்துக் கும்மி

Thursday, October 11, 2007

இவர்கள் செயலின் பின்பே பேசுகிறார்கள்

தமிழீழ தேசியக் காட்சியில் ஒளிபரப்பான இன்றைய உலக ஓட்டம் தமிழ்ப் பெண்களுக்கு சவாலே! சாத்தியமே என்னும் பட்டிமன்ற ஒளிப்பதிவு இது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் அவர்களின் பேச்சு பெருமளவிலான ரசிப்புத் தூண்டலை ஏற்படுத்த வில்லையென்றே கருதுகிறேன். எந்த வித ஆக்ரோசமான உணர்ச்சிப் பெருவாகமும் இன்றி சாதாரணமாகத் தான் பேசுகிறார்கள்.

ஏனெனில் அவர்கள் பேச்சாளர்கள் அல்ல !

செயல்வீரர்கள் மட்டுமே

எதற்காக போராடுகிறார்களோ அதனை செயலில் நிறைவேற்றியபின் வந்து பேசுகிறார்கள்.






Wednesday, October 10, 2007

வள்ளலார் சிறிரங்கனை வாழ்த்தியும் வளவளாப் பதிவரைத் தூற்றியும்

கொழுவிக்கு சிறிரங்கன் அண்ணா எழுதிய வாழ்த்துப் பாவொன்றை கடந்த பதிவில் இட்டிருந்தேன். அதுதொடர்பாக ஒரு தெளிவிப்பு அறிவிப்பும், அவரோடு ஒப்பிட்டு வேறு இரண்டொருவரின் "நன்னடத்தை" பற்றியும் 'உரையாடும்' வண்ணம் இவ்விடுகை செய்யப்பட்டுள்ளது.

முதலில் தெளிவிப்பு அறிவிப்பு.

அந்த வாழ்த்துப்பாவை நான் வெளியிட்டதற்கும், தமிழச்சி கொளத்தூர் மணி ஐயாவின் அறிக்கையை வெளியிட்டதற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன்.
இனிமேலும் 'அது' மாதிரி, கொண்டோடியிடமிருந்து கொழுவிக்கு ஆதரவு அறிக்கையோ கொக்கோ கோலாவிடமிருந்து கோள்மூட்டிப் பதிகமோ வாங்கிப் பதிவிட மாட்டேனென்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கிறேன். (கிட்டத்தட்ட டோண்டுசார் செய்துகொண்டிருந்த விளையாட்டுப் போலக் கிடக்கிறதே இப்படி ஆதரவு அறிக்கை பிரசுரிப்பது? என்று மனத்தில் கேள்வி வந்தாலும் கேட்கமாட்டோம். காரணம் வெளியுறவுக்கொள்கை)
தேவையற்ற சண்டையில் கொழுவியை இறக்கிவிட விசமிகள் சிலர் செய்யும் சதிவேலைகளை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். பிறநாட்டு அரசியலில் தலைபோடுவதில்லையென காலங்காலமாகக் கொழுவி கடைப்பிடித்து வரும் வெளியுறவுக்கொள்கை தான் இப்போதுமுள்ளதென்பதறிக.

++++++++++++++++++++++++++++++++++++++

இனி, வேறிருவரின் "நன்னடத்தை" பற்றியது.

இரண்டு மாதங்களின் முன்னால் வலைப்பதிவுகளில் ஒரு போக்கு நிலவியது. இன்னார் இருநூறாம் பதிவைக் கடந்துவிட்டார், இன்னார் இரண்டு வருடங்களை நிறைவு செய்துவிட்டார் எனக் கொண்டாட்டங்கள் நடந்தன. அவ்வலைப்பதிவரின் இடுகைகளை இன்னொருவர் 'ஆகா ஓகோ' வெனப் புகழ்ந்து "விமர்சிப்பார்".

அந்தக் காலகட்டத்தில்தான் கொழுவியின் வலைப்பதிவும் இரண்டுவருடங்களை நிறைவு செய்தது. இரண்டாம் வருட நிறைவு தொடர்பாகவும், அந்நாளில் எழுதப்படும் ஓரிடுகை தொடர்பாகவும் ஓர் அறிவிப்புக்கூட கொழுவியால் வெளியிடப்பட்டுமிருந்தது.

அந்த நேரத்துப் போக்குக்கு ஏற்றாற்போல கொழுவியை "விமர்சிக்கும்படி" இரண்டு தலைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எழுத்துலகில் புத்தகம் போட்ட அந்தத் தலைகளும் தலைக்கனமில்லாமல்
'அதுக்கென்ன! அந்தமாதிரி எழுதித்தாறம்'
என்று உறுதிமொழியும் அளித்திருந்தனர்.

எங்கட ஊர்ப்பக்கம் ஒண்டு சொல்லுவினம்.
குரங்கிட்ட மருந்துக்கு மூத்திரம் கேட்டா கொப்புக்கொப்பாத் தாவுவாம் எண்டு (அல்லது இதை மாதிரி ஏதோ ஒண்டு).
அது மாதிரிப் போச்சுது கொழுவியின்ர கதை. தாறம் தாறம் எண்டவங்களை பிறகு காணவேயில்லை.
(உந்தச் சொலவடை ஒரு 'இது'க்காகக் சொன்னது. பிறகு, அவையள் ரெண்டு பேரையும் கொழுவி குரங்கு எண்டு சொன்னதெண்டோ அவையளின்ர படைப்புக்களை கொழுவி வேறயொண்டுக்கு ஒப்பிட்டதெண்டோ வரிஞ்சுகட்டிக் கொண்டு வரக்கூடாது)

இப்பிடியே இந்த ரெண்டு தலைகளையும் நம்பி கொழுவியின்ர ரெண்டாம் வருசக் கொண்டாட்டம் திண்டாட்டமாயே போயிட்டுது. அது நடக்கவேயில்லை.

இப்பிடி விண்ணப்பம் விடுக்கப்பட்டு, அதுவும் தாங்கள் எழுதித் தருகிறோம் (அதுக்குள்ள, 'நக்கல் நளினங்கள் இருக்கும் தம்பி கண்டுகொள்ளாதையும்' எண்டு ஒரு முன்னறிவிப்பு வேற தந்திருந்தார் ஒருத்தர்) என்று ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையிலும், தந்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாமல் வலையாடும் அந்த இருவரும் இருக்கும் அதே வலைப்பதிவுச்சூழலில், கேட்காமலே பாமாலை கோர்த்துப் பரிசளிக்கும் சிறிரங்கன் போன்ற வள்ளலார் (நான் 'வாடிய பயிரைக் கண்டு வாடிய'வரைச் சொல்லவில்லை, சிறிரங்கன் வாடக்கூடியவர் என்ற போதும்கூட.) நிறைந்திருப்பது ஒரு முரண்.

இப்படிப்பட்டவர்கள் பெருக வேண்டும். இப்படிப்பட்ட பாமாலைகள் அதிகம் கோர்க்கப்பட வேண்டும். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும்.
"இன்ஷா அல்லா" (இதுக்கு என்ன பொருளெண்டு தெரியாது. ஆனா இப்பிடிப் பாவிக்கவேண்டிய கட்டாயம் ஒண்டு இருக்கிறதாக நினைக்கிறன். அவ்வளவுதான்.)

++++++++++++++++++++++++++++++++++++++
பின்குறிப்பு1:
சிறிரங்கனும் வள்ளலார் போல வாடக்கூடியவர் (கவனிக்க: பாடக்கூடியவர் என்று சொல்லவில்லை, அவர் பாடக்கூடியவர் என்ற போதும்கூட) என்று சொல்லப்பட்டதன் மூலம் சிறிரங்கன் அண்ணன் பாமாலையில் வைத்த ஐஸுக்கு பதில் ஐஸ் வைக்கப்பட்டாயிற்று என்று ஒரு குஞ்சும் நின்று கத்த ஏலாது.

பின்குறிப்பு2:
சிறிரங்கன் வள்ளலார் போலப் பாடக்கூடியவர் என்று பின்குறிப்பு ஒன்றில் கொழுவி சொன்னதன்மூலம், கொழுவிக்கு அவர் வைத்த ஐஸ் மீண்டும் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதென எந்தப் புடுங்கியும் எழுத ஏலாது.

பின்குறிப்பு3:
பின்குறிப்பு இரண்டில் சொல்லப்பட்டது போல் ஐஸ் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதால், சிறிரங்கன் கொழுவிமீது இன்னொரு புகழ்மாலை புனைந்தளித்துச் சமன்செய்யக் கடப்பாடுடையவர் என எந்தப் புறம்போக்கும் சொல்ல முடியாது.

பின்குறிப்புக்கள் அவ்வப்போது தொடரும் சங்கிலியாக.

++++++++++++++++++++++++++++++++++++++

முத்திரைகள்: வள்ளலோசிறிபாமோபியா, ஆதரவறிக்கோமோபியா, பெயரிடிதசேமிழோபியா

Tuesday, October 09, 2007

ஸ்ரீரங்கன் வாசித்தளித்த வாழ்த்துப்பா

வலையில் நீண்டகாலம் தங்கியிருப்பவர்கள் (இடையில் போனவர்கள் திரும்ப வந்தவர்கள் உட்பட) ஸ்ரீரங்கன் மற்றும் கொழுவிக்கான உறவு குறித்து நன்கறிவீர்கள். அவ்வாறு காலங்காலமாக சுமுகமான உறவைப் பேணும் ஸ்ரீரங்கன் அவர்கள் கொழுவிக்கு தன் கைப்பட (கீபோட்டில கை படும் தானே ) வாழ்த்துப்பா ஒன்றினை கேட்காமலயே வழங்கியிருக்கிறார். (வழமையா வாழ்த்துப்பாவினை கேட்டுத்தானே வாங்கிப் போடுவார்கள். அதுவும் சமாதானத்திற்கான காலத்தில இங்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள புத்தகம் பேப்பர் ரிவி வானொலி என ஒருத்தரும் விடாமல் அங்கை ஈழத்தில இருந்த ஒராளை அண்ணை ஒரு வாழ்த்து அண்ணை ஒரு வாழ்த்து என பின்னும் முன்னும் போனிலை கலைச்சுப் பிடிச்சு வாங்கினவை. )

ஸ்ரீரங்கன் வழங்கிய வாழ்துப்பாவினை வரும்காலங்களில் கொழுவியின் முகப்பில் தொங்க விட முயற்சிக்கிறோம்.

அப்பனே கொழுவி ஆண்டவா!
உன் பாதம் தாழ்கிறேன்
படுத்தாதே எனைப் பெரும்பாடு
பாருக்குள்ளே நீ ஒரு பரந்தாமன்
போருக்குள்ளே நீ ஒரு கிருஷ்ணன்
ம(மி)தியுரைப்பதில் நீ சகாதேவன்
பெரியோனில் பீஷ்மர் நீ
தண்டெடுப்பதிலோ நீ கடோற்கஜன்
வில்லுக்கு ஏகலைவனானாய்
சொல்லுக்கு நீ நற்கீரன்
மல்லுக்கோ என் கொழுவி வீமன்
நகுலானானாய் வாளுக்கு
தூக்கத்தில் கும்பகர்ணன் நீ
நெடுகத் திரிவதில் நீயோ நாரதன்
நட்புக்குக் கர்ணனாகுவாய்
இதற்கெல்லாம் தாண்டி
நாணயத்துக்கும் நெறியுக்கும் இராவணனாய்
கைகூக்ப்பிப் பாடுகின்றேன்-என்
பராபரமே இந்தப் பாவியைவிட்டு
பாருக்குள் நாரதனாய் புறபடு
அதோ!இன்னுஞ் சில பதிவர்கள்...
என்னைக் கடைந்தேற்றக்
கண்ணாயிருக்கும்-என் கற்பகமே!
ஐயா இந்தச் சனியனை விட்டு-நீ
கங்கைக் கரையோரமாய்ப் போய் விடு-அங்கோ
கன்னிப் பெண்கள் கூட்டம்
காத்துக் கிடக்கிறார்கள்-என் கண்ணா!
மணியே!கற்கண்டே!!
-ஸ்ரீரங்கன்-

Monday, October 08, 2007

தோழர் தமிழச்சிக்கு பகிரங்க மடல் :)

எல்லோருமே பதிவர்களின் பெயர்களை தலைப்பில் இட்டு பதிவெழுதிக்கொண்டிருக்கிறார்கள். என் பங்குக்கு நானும் ஒரு பகிரங்க மடலினைத் தோழர் தமிழச்சிக்கு எழுத விளைகிறேன். (தோழர் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் என நம்புகிறேன். இருப்பினும் யாராவது தமிழறிஞர்கள் இதுவிடயத்தில் பிழையைச் சுட்டிக் காட்டின் தோழர் என்னும் சொல்லை தோழியாக மாற்றக் கடமைப்பட்டுள்ளேன்)

தமிழச்சியின் பதிவுகள் குறித்து கருத்தெதுவும் கிடையாதென்ற போதும் அவர் வரித்துக்கொண்ட பணியில் தளராமல் தொடர்வது குறித்து ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு.

எனது நடவடிக்கைகள் எந்த விதத்திலும், அது பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எவ்வாறெனினும், எனக்கும், முக்கியமாக சமூகத்தில் பிறருக்கும் பாதிப்பினை, இழப்பினை ஏற்படுத்தாத நிலையில் அனைத்தையும் செய்வதற்குரிய உரிமை எனக்குண்டு என நான் நம்புகின்றவன். இவ்விடத்தில் கலாசாரம், பண்பாடு, கடவுள், பகுத்தறிவு, பெரியார் என எந்தவிதமான இடையூறுகளையும் நான் கணக்கெடுத்துக் கொள்வதில்லை.

தமிழச்சி எனக்கு அரசியலும் வேண்டாம் இயக்கமும் வேண்டாம் எனச் சொன்னது போல எனக்கு கடவுளும் வேண்டாம் பெரியாரும் வேண்டாம் என்பதுதான் இப்போதைக்கு என் நிலை.

இங்கே இத்திறந்த மடலில் தமிழச்சி மீதான என் பிம்பங்கள் உடைந்த சில சந்தர்ப்பங்களைச் சொல்லிச் செல்கிறேன். ( வலையுலகில் வேறும் பலர் மீதும் இவ்வாறான பிம்பங்கள் உடைந்திருக்கின்றன )

தனக்குத் தொல்லை கொடுக்கும் ஒருவரை (தமிழச்சியின் வார்த்தைகளில் பொறுக்கியை) நோக்கி தமிழச்சி இவ்வாறு அறை கூவுகின்றார். உன் அம்மா உன்னை ஒருத்தனுக்குப் பெற்றவளாயிருந்தால் நேரே வாடா என்கிறார் அவர். வழமையாக பெண்ணின் பாலியல் நடத்தையூடு ஒருவனை இழிவு செய்யும், காலங்காலமாக கட்டமைக்கப்பட்ட ஆண் வர்க்கச் சிந்தனைதான் இது.

ஆயினும் இது தமிழச்சியின் எண்ணத்திலிருந்து ஏன் வெளிப்படுகிறது ? ஆண் வர்க்கம் பெண்ணின் மீது வலிந்து திணித்த, கற்பு கோட்பாடுகளுக்கு எதிராக பெரியார் துணையுடன் எழுத்தில் சமர் செய்யும் தமிழச்சியின் உள்மன வெளிப்பாடுதானே அவரது அத்தகைய வார்த்தைகளில் வெளித்தெரிகிறது.

அதாவது யாரோ ஒரு பொறுக்கியினைத் திட்டுவதற்கு, சற்றேனும் சம்பந்தப்படாத ஒரு பெண்ணின் பாலியல் நடத்தை குறித்துச் சந்தேகம் எழுப்புகிறார் தமிழச்சி. இதைத்தானே இதுநாள்வரை பெண்களுக்கெதிராக அதிகார ஆண்வர்க்கம் செய்து வருகிறது. இன்னும் விரிவாக சொல்வதென்றால் உன் அம்மா உன்னை பலபேருடன் உறவு கொண்டு பெற்றவள். ஆகவே நடத்தை கெட்டவள். நடத்தை கெட்ட ஒருத்திக்கு பிறந்தவனாகையால் நீயும் இழிவானவன். இதுதான் தமிழச்சியின் அவ்வார்த்தைகளுக்குள் பொதிந்து கிடக்கும் விரிந்த பொருள்.

இது குறித்து தமிழச்சியிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு தான் குறித்த ஒரு பொறுக்கிக்கு எதிராக மட்டுமே அவ்வாறு திட்டியதாகச் சொல்கின்றார். பொறுக்கிக்கோ அல்லது பெறுக்கிக்கோ (பெறுக்கி விவகாரத்திற்கு பின்னர் வருகிறேன் ) எவருக்கோ திட்டுவதாயினும், எவளோ ஒரு பெண்ணை இழிவுபடுத்த வேண்டிய தேவைதானே உங்களுக்கும் இருக்கிறது. ? காலம் காலமாக அதிகார ஆண்வர்க்கம் செய்து வரும் அதே கைங்கரியத்தைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்? இத்தனைக்கும் அதனை எழுத்தில் எதிர்த்துக்கொண்டு.

அடுத்த விவகாரம் ! தலித் மாநாட்டுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். அதுகுறித்து கருத்தெதுவும் இல்லை. ஐய்யையோ ஈழத்தில் சாதியக் கட்டமைவுகள் இல்லையென்று நான் பூச்சாண்டி எதுவும் காட்ட முயலவில்லை. யுத்தம் காரணமாகவும், தமிழ்த்தேசியம் முதன்மைப் படுத்தப்பட்டிருப்பதனாலும், ஈழத்தில் சாதியக் கருத்து நடைமுறையில் பெரும்பாலும் இல்லாது போயிருக்கிறது. அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ( நடைமுறையில் கோவில் திருவிழா, திருமணம் உட்பட இன்னும் பல நிகழ்வுகள் சாதிய அடிப்படையில் அங்கே இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன) ஆயினும் எண்ண அடிப்படையில் எல்லோர் மனங்களிலும் அங்கு சாதியம் குறித்த கருத்துக்கள் ஒழிக்கப்படவில்லை. அதற்கான மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆக தேவையெனச் சிலர் உணர்கின்ற மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கியிருக்கும் நீங்கள் ஒரிடத்தில் எழுதிய வார்த்தைகள் இவை.

/டேய் அனானி உன்னை மாதிரி தட்டு கழுவிக் கொண்டும், பெறுக்கும் வேலையும் செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. /

ஈழத்தில் சாதியம் தொழில்முறையான பிரிப்புக்களுனூடே கடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. 90 களின் ஆரம்பம் வரை இப்பிரிப்புகளினூடே மக்களின் சாதி அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருந்தது. அவன் கள்ளுச்சீவுறவன், இவன் பறைமேளம் அடிக்கிறவன் என்பவையூடாகத்தான் அங்கு சாதி அடையாளப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

அடக்கப்பட்ட மக்களின் தொழில்கள் இழிதொழில்களாக, கேவலமான தொழில்களாக நோக்கப்பட்டன. அத்தொழில்களைச் சொல்வதன் ஊடாக ஒருவர் சமூக மட்டத்தில் இழிவு செய்யப்பட்டார்.

இங்கே தமிழச்சியும் கழுவுறவன், பெறுக்கிறவன் என்பதனூடாக ஒருவரைக் கேவலமாகத் திட்டமுடியும் என நம்புவதன் ஊடாக அத்தொழில்கள் கேவலமானவை என அவருக்குள்ளிருக்கும் உயர் மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இதற்கு கூட தமிழச்சி குறிப்பிட்ட ஒரு நபரைத் திட்டவே அச்சொற்களைப் பயன்படுத்தினேன் என விளக்கமும் தந்திருக்கிறார். மேற்சொன்னது போலவே எவரைத் திட்டவெனினும் அவர் தனக்குள்ளிருக்கின்ற காலம்காலமாக கட்டமைக்கப்பட்டு வந்த பிற்போக்குத் தனத்தைத்தானே பயன்படுத்துகிறார். ?

இறுதியாக சொல்வது என்னவெனில் பெண்களின் பாலியல் நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புவதன் ஊடாக இழிவு செய்யலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு பெண் விழிப்புணர்வு குறித்து பேசவும் எழுதவும் என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், தொழில் ரீதியில் ஒருவரை கேவலப்படுத்தலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு, அதே தொழில்முறையில் சாதிப்பிரிப்புச் செய்த ஈழத்துச் சாதியத்திற்கெதிரான தலித் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், இது போல பல கேள்விகளும் எனக்குள் எழுவது தவிர்க்க இயலாதது என்பதுதான்.

உள்ளார்ந்த விழிப்புணர்வும், தெளிவும், அர்ப்பணிப்பும் அற்ற நிலையில் தமிழக அரசியல்த்தனத்தின் ஓர் அங்கமாகிய வார்த்தைகளால் யுத்தம் செய்தல் மற்றும் தன்னைத் துருத்தி வெளிக்காட்டுதல் என்னும் நிலைப்பாட்டில் அவர் செல்கிறாரா என்பது மற்றவர்கள் முடிவெடுக்க வேண்டியது. நான் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டேன்.

Sunday, October 07, 2007

பாசிசப் போட்டி ! பங்கு பெற வாரீர்

தோழர் பி.இரயாகரன் இன்னுமொரு கட்டுரையை எழுதியிருக்கிறார். தூங்குவதாக நடிக்கும் பாசிட்டுக்களை யாராலும் எழுப்ப முடியாது என்னும் அக்கட்டுரை பற்றி எதுவும் பேசப் போவதில்லை. வேண்டுமானால் தமிழ்மணத்தை ஈழத்தமிழர்கள் அல்லாதவர்கள் நடாத்துவதால் அது புலிப் பாசிசத்தில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளது என்ற அருமையான கண்டுபிடிப்பை இங்கு குறிப்பிட்டுச் செல்லலாம். (தமிழ்மணம் ஒரு தளமல்ல. அது ஒரு திரட்டி. அதில் கருத்தியல் கொள்கை அடிப்படையில் எவரென்ன எழுதினாலும் வெளிவரும் என்பதையும் அவருக்கு விளக்கிச் சொல்ல வேண்டியஅளவிற்கு அவரது அறிதிறன் ஆழம் குறைந்ததல்ல என நான் நம்புகிறேன். ஒரு பேச்சுக்கு புலிகளின் தலைவர் வலைப்பதிவமைத்து எழுதி அது தமிழ்மணத்தால் திரட்டப்பட்டால் இராயகரன் புலிப்பாசிசத் தமிழ்மணம் எனச் சொல்வாரோ தெரியவில்லை.

அதை விடுவோம். கணித பாடத்தில் பொதுவெடுத்தல் என ஒரு விசயம் உண்டு. அதாவது 2xy + 3x என்பதில் x ஐ பொது எடுத்தால் x(2y+3) என வரும்.

அதே போல இராயகரன் எழுதியிருக்கும் மேற்சொன்ன கட்டுரையில் ஒரு விளையாட்டுக்கு பாசிசம் என்ற சொல்லைப் பொது எடுத்தேன். என்ன அதிசயம் ? அவரது கட்டுரை ஐந்து வரிகளிற்குள் முடிந்து விட்டது.

இப்போ போட்டி என்னவெனில் அக் கட்டுரையில் எத்தனை தரம் பாசிசம் என்னும் சொல் இடம்பெற்றிருக்கிறது. விடைகளைச் சொல்லி பாசிசப் பரிசுகளை பறித்துச் செல்லுங்கள்.

Friday, October 05, 2007

அண்ணன் சிறீரங்கன் வழியில் நானும் ..

எனக்கு புலிகள் அமைப்பில் உடன்பாடுகள் இல்லை. எனது அரசியற் கண்ணோட்டத்துக்கும் அவர்களின் அரசியல் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடு கிடையாது. அதனால் அவ்வமைப்பை நிராகரிக்கிறேன். ஆனால் பொதுப்பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும் போது அந்த அமைப்பை விட்டால் நமக்கு எதுவும் கிடையாது.

கொழுவிக்கு என்னாச்சு என்று யோசிக்கிறீர்களா ? வேறொன்றுமில்லை. அண்ணைன் சிறிரங்கன் அவர்கள் தோழர் தமிழச்சி அவர்களுக்கு எழுதியிருந்த பின்னூட்டமொன்றில் வழங்கியிருந்த ஆலோசனைகளில் ஒன்றைப் படித்தவுடன் அவரது வழியிலேயே நானும் செல்லலாம் என முடிவெடுத்து விட்டேன்.

அப்படி என்னதான் எழுதினார் சிறீரங்கன் அவர்கள் ? அது இது தான்.

எனக்கு ரீ.பீ.சீ வானொலியில் உடன்பாடுகள் இல்லை.எனது அரசியற் கண்ணோட்டத்துக்கும் அவர்களின் அரசியற் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடுகிடையாது.அதனால் அவ் வானொலியை நிராகரிக்கிறேன்.ஆனால் பொதுப் பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும்போது அந்த வானொலியைவிட்டால் நமக்கு எதுவுங்கிடையாது.

இப்போது சொல்லுங்கள் நண்பர்களே சிங்கள இனவாத அரசு மேற்கொள்ளும் அழித்தொழிப்பு நமக்குப் பொதுப்பிரச்சனை இல்லையா ?

Tuesday, October 02, 2007

நான் புலி, ரயாகரன் துரோகி

நிதர்சனம் வலைத்தளம் யாருடையது என்பது தொடர்பாக காலங்காலமாக சர்ச்சை நடந்துவருகிறது. சர்ச்சை என்பதைத்தாண்டி பலநேரங்களில் புலிகள் மீதான அவதூறு பரப்புவதற்கு இந்த விசயம் கையாளப்படுகிறது. புலியெதிர்ப்பு வாதிகள் அடிக்கடி சொல்லும் 'நிதர்சனம் புலிகளுடையதுதான்' என்ற கோசம் வழமைபோல ரயாகரனால் சொல்லப்பட இன்னொருமுறை தீப்பற்றிக் கொண்டது.
நிதர்சனம் புலிகளுடையதுதான் என்பதற்கு புலியெதிர்ப்புக் 'கும்பல்' சொல்லும் காரணம், அது புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகிறது என்பதுதான்.
புலிகளை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லாரையும் 'துரோகி' என்ற சொல்லால் அழைக்கும் சில புலி வால்பிடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் புலியெதிர்ப்புக் கும்பல் செய்வதும் அந்த வால்பிடிகளின் வேலையைத்தான்.
வலைப்பதிவு எழுதுபவர்களில்கூட புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். புலிகளை ஆதரித்து எழுதுகிறார்கள். இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி பார்த்தால் வலைப்பதிவில் புலிகள் ஆதரவுப்போக்குக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் புலிகள்தான். அதன்படி பார்த்தால் கொண்டோடி புலியாகத்தான் இருக்க வேண்டும். (ஆனால் புலியாதரவாளர்கள் நிதர்சனம் வலைத்தளம் நிறுத்தப்பட வேண்டுமென விரும்புவதோடு, அதை வெளிப்படையாக எழுதியுமிருக்கிறார்கள் என்பது இங்கொரு நகைமுரண்)
மறுவளத்தில், புலியை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லோரும் துரோகிகள்தாம் (இதை நாம் சொல்லவில்லை; புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி தான்). அவ்வகையில் ராயகரன் துரோகிதான்.
இப்போது புதுவாதம் வைக்கப்படுகிறது.
"நிதர்சனம் புலிகளுடையதா இல்லையா என்று வாதிடுவதால் எந்த மாற்றமும் நடந்துவிடாது".
மேலும், புலிகளின் வரலாற்றைப்போலவே நிதர்சனத்தின் வரலாறும் இருக்கிறதாம். ஆகவே இது புலிகளினது தானாம்.
நிதர்சனம் தமது வலைத்தளமில்லை என்பதை புலிகள் அதிகாரபூர்வமாக மறுத்து அறிக்கை விட்டிருந்தார்கள். நிதர்சனம் தளமும் புலிகளுடனான தமது தொடர்பை மறுத்திருந்தது.
சரி, ரயாகரன் சொல்வதுபோல் புலிகளின் மறுப்பை நம்புவதற்கில்லை என்பது நியாயமான வாதம் தான். புலிகள் தாம் செய்தவற்றை மறுத்திருக்கிறார்கள்.
ஆனால், நிதர்சனம் தமது தளமில்லையென்ற நிலையில் அதை நிறுத்த புலிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை ரயாகரன் கேட்பது வியப்பானது. என்னதான் செய்ய வேண்டும், ஓர் அறிக்கை விடுவதைத்தவிர?
நிதர்சனத்தை நடத்துபவரை மண்டையில் போடச் சொல்கிறீர்களா? முதலில் நிதர்சனம் தளத்தை நிறுத்துவதை வரவேற்கிறீர்களா? நீங்கள் முன்பு எழுதிய கட்டுரைகளில் இருந்து, அதை முழுமையாக மறுப்பீர்கள் என்றுதான் புரிகிறது.
பிறகு என்னதான் செய்வது? நிதர்சனத்தை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று புலிக்கு ரயாகரன் கோரிக்கை வைப்பது வேடிக்கையானதல்லவா?
அடுத்து, நிதர்சனம் யாருடைய நலனுக்குப் பாடுபடுகிறது என்ற கேள்வியை கேட்டுவைப்போம். நிதர்சனம் தொடர்ந்து இயங்குவதில் யார் பலனடைகிறார்கள் எனற கேள்வியைக் கேட்டு வைப்போம். நிதர்சனம் நிறுத்தப்பட்டால் யாருக்குத் தீமை என்பதைக் கேட்டுவைப்போம்.
இவற்றுக்குரிய பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நிதர்சனமானது புலிகளின் எதிர்த்தரப்பின் நலனையே தனது முதன்மை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது. நிதர்சனத்தால் பலனடைவது புலியெதிர்ப்பாளர்களே. நிதர்சனம் நிறுத்தப்பட்டால் நட்டமடைவது புலியெதிர்ப்பாளர்களும் சிறிலங்கா அரசுமே.
நிதர்சனத்தை நிறுத்துவோம்; அதன்மீது வழக்குப்போடுவோம் என்று கரடி விட்டுக்கொண்டிருந்தவர்கள் எங்கே போனார்கள்? ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை? ஏன் நிதர்சனம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது?
ஆனந்தசங்கரி துள்ளினார், புளொட் அமைப்பு கொக்கரித்தது. இறுதியில் என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை.
ஏன் சிறிலங்கா அரசின் உயர்மட்டத்தில்கூட நிதர்சனம் தளம் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கமே அறிக்கையும் கண்டனமும் வெளியிடவேண்டி வந்தது. இவ்வளவுக்கும் நிதர்சனத்துக்கு எதிர்ப்பக்கம் நின்று கொக்கரித்தவர்களிடம் தான் நூறுவீத நியாயமும் இருந்தது. அதுவும் சிறிலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால் அந்த படம் வெளியிட்ட பிரச்சினைக்கு நிதர்சனத்தை முடக்கியிருக்கலாம். அனால் சும்மா அறிக்கை விட்டதோடு நின்றுவிட்டது. அதுபோல்தான் புளொட் மற்றும் ஆனந்தசங்கரி வகையறாக்களின் வெற்றுச் சவடால்கள். நிதர்சனத்தைப் புரட்டுறோம் புடுங்குறோம் என்று அறிக்கை விட்டவர்கள், தமது பக்கம் முழுமையாக நியாயம் இருந்தபோதும்கூட எதுவும் செய்யவில்லை. இது, ஏதோ ஜனநாயகப்பண்பால் வந்ததென்று யாரும் நம்பமுடியாது. ஒரே காரணம், நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்பதுதான்.
நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்று விரும்புவர்கள் சிறிலங்கா அரசாங்கமும் ஆனந்தசங்கரியும், புளொட்டும்தான். ஏனென்றால் அதில் அவர்களின் புலியெதிர்ப்பு வியாபாரம் இருக்கிறது. நிதர்சனத்தை வைத்து புலிகளை வசைபாடும் அருமையான வாய்ப்பை அவர்கள் நழுவவிடத் தயாரில்லை.
இப்போது சொல்லுங்கள், நிதர்சனம் யாருடைய நன்மைக்காக இயங்குகிறது?