Tuesday, October 09, 2007

ஸ்ரீரங்கன் வாசித்தளித்த வாழ்த்துப்பா

வலையில் நீண்டகாலம் தங்கியிருப்பவர்கள் (இடையில் போனவர்கள் திரும்ப வந்தவர்கள் உட்பட) ஸ்ரீரங்கன் மற்றும் கொழுவிக்கான உறவு குறித்து நன்கறிவீர்கள். அவ்வாறு காலங்காலமாக சுமுகமான உறவைப் பேணும் ஸ்ரீரங்கன் அவர்கள் கொழுவிக்கு தன் கைப்பட (கீபோட்டில கை படும் தானே ) வாழ்த்துப்பா ஒன்றினை கேட்காமலயே வழங்கியிருக்கிறார். (வழமையா வாழ்த்துப்பாவினை கேட்டுத்தானே வாங்கிப் போடுவார்கள். அதுவும் சமாதானத்திற்கான காலத்தில இங்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள புத்தகம் பேப்பர் ரிவி வானொலி என ஒருத்தரும் விடாமல் அங்கை ஈழத்தில இருந்த ஒராளை அண்ணை ஒரு வாழ்த்து அண்ணை ஒரு வாழ்த்து என பின்னும் முன்னும் போனிலை கலைச்சுப் பிடிச்சு வாங்கினவை. )

ஸ்ரீரங்கன் வழங்கிய வாழ்துப்பாவினை வரும்காலங்களில் கொழுவியின் முகப்பில் தொங்க விட முயற்சிக்கிறோம்.

அப்பனே கொழுவி ஆண்டவா!
உன் பாதம் தாழ்கிறேன்
படுத்தாதே எனைப் பெரும்பாடு
பாருக்குள்ளே நீ ஒரு பரந்தாமன்
போருக்குள்ளே நீ ஒரு கிருஷ்ணன்
ம(மி)தியுரைப்பதில் நீ சகாதேவன்
பெரியோனில் பீஷ்மர் நீ
தண்டெடுப்பதிலோ நீ கடோற்கஜன்
வில்லுக்கு ஏகலைவனானாய்
சொல்லுக்கு நீ நற்கீரன்
மல்லுக்கோ என் கொழுவி வீமன்
நகுலானானாய் வாளுக்கு
தூக்கத்தில் கும்பகர்ணன் நீ
நெடுகத் திரிவதில் நீயோ நாரதன்
நட்புக்குக் கர்ணனாகுவாய்
இதற்கெல்லாம் தாண்டி
நாணயத்துக்கும் நெறியுக்கும் இராவணனாய்
கைகூக்ப்பிப் பாடுகின்றேன்-என்
பராபரமே இந்தப் பாவியைவிட்டு
பாருக்குள் நாரதனாய் புறபடு
அதோ!இன்னுஞ் சில பதிவர்கள்...
என்னைக் கடைந்தேற்றக்
கண்ணாயிருக்கும்-என் கற்பகமே!
ஐயா இந்தச் சனியனை விட்டு-நீ
கங்கைக் கரையோரமாய்ப் போய் விடு-அங்கோ
கன்னிப் பெண்கள் கூட்டம்
காத்துக் கிடக்கிறார்கள்-என் கண்ணா!
மணியே!கற்கண்டே!!
-ஸ்ரீரங்கன்-

15 comments:

-/பெயரிலி. said...

த்ரீ பொயின்ற்ஸ்

1. உம்மைத் தருமனெண்டோ இராமனெண்டோ சொல்லேல்லை. அதால, எப்பவும் தியாகம் செய்யிற செக்கண்ட் கீரோவா வச்சுக் கடசியில மண்டையப்போட வைக்கப்போறார் எண்டு தெரியுது

2. உமக்கு டைப் வண்ணோ ரூவோ டயபிற்றீஸ் இருக்குதெண்டு தெரிஞ்சு, இனிப்பா அள்ளிக்குடுக்கிறார். அதிலையும் உம்மை மண்டையைப் போட வைக்கிற பிளான்தான்

3. பாதம் பணியிறேன் எண்டுறார். குழி பறிச்சுக் கவுக்கிற பிளான். அதிலையும் ஆள் உம்மட மண்டையப் போட வைக்கிறதுதான் பிளான்

இப்ப சீரியஸா, இஞ்சை நீங்கள் ரெண்டு பேரும் புருஷன் - பெஞ்சாதி ஊடல் கூடல்களை ஏன் இப்படி பப்ளிக்கா வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமெண்டு வெளியில போடுறியள். நல்லாயில்லை. அவ்வளவுதான் சொல்லுவன் :-)

theevu said...

அது அவற்றை பாட்டு எண்டு நம்பேலாது.பாட்டின் ஒரு வரியில்கூட பாயாசம் பாஸிஸம் எண்டு ஒரு சொல்லுக்கூட வரேல்லை.

மலைநாடான் said...

கொழுவி!

உண்மையைச் சொல்லும். எவ்வளவு குடுத்தனீர்?. ஆனால் இனி ஆருக்கும் வாழ்த்துப்பா குடுக்கிறதெண்டா சிறிரங்கனைத்தான் பிடிக்கோணும் :)

கொழுவி said...

//உண்மையைச் சொல்லும். எவ்வளவு குடுத்தனீர்?.//

இப்படிக் கேலி பேசுவதும் யைநாண்டி செய்வதும் கூட ஒரு வகை பாசிசம் தான்.

(அண்ணை றைற்றோ.. ?)

-/பெயரிலி. said...

/இப்படிக் கேலி பேசுவதும் யைநாண்டி செய்வதும் கூட ஒரு வகை பாசிசம் தான்.

(அண்ணை றைற்றோ.. ?)/

may be; but it is one of the core features of post modernism.
தமிழிலை சொன்னால், ஒரு தம்பியும் கேக்கிறானில்லை. அதுதான் இங்கிலிசில சொல்லியிருக்கிறன்

பிகு: அதென்ன யைநாண்டி? எனக்குச் சொல்லாமல் புதுசு புதுசா சொல்லெல்லாம் கண்டு பிடிக்கிறியள். உது பாசிசத்துக்கு எதிர்ச்சொல்லோ எதிர்ப்பாற்சொல்லோ?

செந்தழல் ரவி said...

உங்களுக்குள்ள என்ன சண்டையோ அரசியலோ விளையாட்டோ எனக்கு தெரியாது...

ஆனா இந்த கவிதை / பதிவு / பெயரிலி பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ரசித்தேன்...!!!!

கொண்டோடி said...
This comment has been removed by the author.
கொண்டோடி said...

ஓய்!
உம்மை பீஷ்மர் எண்டு சொல்லியிருக்கிறார்.
கொஞ்சக் காலத்துக்கு முதல் பேராசிரியர் சிவத்தம்பிதான் பீஷ்மர் எண்டு உங்கால ஒருகூட்டம் இணையத்தில விளையாடிக்கொண்டிருந்ததெல்லோ?

//போருக்குள்ளே நீ ஒரு கிருஷ்ணன்//

எப்பவும் ட்றைவர் வேலைதான் உமக்கு.

//கங்கைக் கரையோரமாய்ப் போய் விடு-அங்கோ
கன்னிப் பெண்கள் கூட்டம்
காத்துக் கிடக்கிறார்கள்-என் கண்ணா!//

நான் உமக்குச் சொல்லிற அறிவுரையும் அதுதான்.

வரவனையான் said...

:))

-/பெயரிலி. said...

/உம்மை பீஷ்மர் எண்டு சொல்லியிருக்கிறார்.
கொஞ்சக் காலத்துக்கு முதல் பேராசிரியர் சிவத்தம்பிதான் பீஷ்மர் எண்டு உங்கால ஒருகூட்டம் இணையத்தில விளையாடிக்கொண்டிருந்ததெல்லோ?/

அந்தாளை அம்புப்படுக்கையில போட்டுட்டுப் புதாள் தேடுறாங்கள்போலை. கவனம் கொழுவி. காவியத்திலை சொல்லுறது, படத்திலை காட்டுறதுபோல, அம்புப்படுக்கை அஞ்சு பக்க வசனம் பேசிப்போட்டுச் சாகிறதுக்கு வசதியான படுக்கையில்லை. ஸ்ரீரங்கத்தார் கதையை நம்பி பீஷ்மர் கரக்டரில நடிக்கப்போகாதையும். உது ராஜபார்ட்டோ, கள்ளப்பார்ட்டோ எண்டுகூடத் தெரியேல்ல. எழுதினதுவேற வில்லனோவில்லி்புத்தூர்க்காராளாம்.

டொட்டொடாய்ங்!
போலிகளை நம்பி ஏமாறவேணாம். அசல் ஆயா மார்க் விளக்கெண்ணெய்யிலே செய்த கரெக்டர்களைமட்டுமே நம்பி நடியுங்கள்.
டொட்டொடாய்ங்!

பிகு: அதென்ன, கொண்டோடி ஓத்தர் எழுதிக்கழட்டியிருக்கிறார்?

Anonymous said...

/எப்பவும் ட்றைவர் வேலைதான் உமக்கு/
இன்ரநஷனலோ? இல்லை, இருக்கிற நாட்டுக்குள்ளை மட்டுமோ? எதுக்கும் ரோட்டில போற வாறாக்களுக்குச் சங்கூத ரெடியா இரும். அல்லது ஓடும்

ராமனப்பன் said...

//உம்மைத் தருமனெண்டோ இராமனெண்டோ சொல்லேல்லை.//

பாலம் கட்டுவதில் நீ ராமன் என்று சொல்லியிருக்கணும்.

ஈழநாதன்(Eelanathan) said...

உம்மை சகுனி எண்டு சொல்லாமல் விட்டிட்டார் :))

கொழுவி said...

//பிகு: அதென்ன, கொண்டோடி ஓத்தர் எழுதிக்கழட்டியிருக்கிறார்?//

பெயரிலி,
உந்த வசனம் விளங்கேல.

மலைநாடான் said...

//அந்தாளை அம்புப்படுக்கையில போட்டுட்டுப் புதாள் தேடுறாங்கள்போலை. கவனம் கொழுவி. காவியத்திலை சொல்லுறது, படத்திலை காட்டுறதுபோல, அம்புப்படுக்கை அஞ்சு பக்க வசனம் பேசிப்போட்டுச் சாகிறதுக்கு வசதியான படுக்கையில்லை.//

ஓ... கொழுவி காவிய நாயகன் ஆகப்போறாரோ? :))