இது நாள் வரையான சீண்டல்களுக்கும் கோபமேற்படுத்தும் தாக்குதல்களுக்கெதிராகவும் பலமான பதிலடி கொடுக்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஊடறுத்து உள்நுழைந்து தாக்கும் பெரும் சமரில் 20 நிமிடங்களில் தளம் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அநுராதபுர வான்படைத் தளம் 20 நிமிடங்களில் கரும்புலிகள் வசம் வீழ்ந்தது - போராளி கலைக்கோன்
எல்லாளன் நடவடிக்கையின் போது அநுராதபுர வான்படைத் தளத்தை சிறப்புக் கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என போராளி கலைக்கோன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவைச் சேர்ந்த போராளி கலைக்கோன் ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில்...
எல்லாளன் நடவடிக்கையின் போது அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கிருந்த வானூர்திகளை அழித்துள்ளனர்.
எல்லாளன் நடவடிக்கைக்கு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தலைமை தாங்கினார்.
தற்காப்பு நடவடிக்கைகளிலும் காட்டுப்புற நகர்வுகளிலும் கரும்புலி கப்டன் பஞ்சசீலன் ஈடுபட்டார்.
விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளுவதில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற கப்டன் ஈழப்பிரியா முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளார். இவர் அநுராதபுர வான்படைத் தளத்தில் உள்ள கனரக ஆயுதங்களைக் கைப்பற்றி அங்கிருந்த படை நிலைகளை தகர்த்தெறிந்தார்.
கரும்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அநுராதபுர வான்படைத் தளம் வீழ்ந்த பின்னர், வான்படைத் தளத்தினுள் உள்நுழைவதற்கான வான்படையினர் போரிட்டு நகரும் போது விடுதலைப் புலிகளின் வான்படையினர் வான்வழித் தாகக்குதலை நடத்தி சிறீலங்கா வான்படையினரை பின்வாங்கச் செய்துள்ளனர்.
8 வானூர்திகள் அழிக்கப்பட்ட நிலையில் அநுராதபுர வான்படைத்தளம் உள்ள வானூர்தி தரிப்பிடங்கள் சிறப்புக் கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டு தீப்பற்றியதில் அங்கிருந்து ஏனைய வானூர்திகளும் நாசமாகியுள்ளன.
இதில் அமெரிக்கத் தயாரிப்பான பீச் கிராவ் வேவுவிமானத்தை கரும்புலி லெப்.கேணல் வீமன் தாக்கியழித்தார்.
எல்லாளன் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கரும்புலி லெப்.கேணல் இளங்கோ விழுப்புண் எய்திய நிலையில் காலை 8.30 மணிக்கு வீரசாவடைந்தார்.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் வரை வான்படைத் தளத்தினுள் கடும் மோதல்கள் இடம்பெற்றன.
தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடியான நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் அநுராதபுர வான்படைத் தளத்தில் நின்ற அனைத்து வானூர்திகளும் கரும்புலி மாவீரர்களால் துடைத்தெறியப்பட்டன என கலைக்கோன் ஆசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
2 comments:
நான் ஏதோ வலைத்தளம் என்று நினைத்துவிட்டேன். மன்னிக்கவும்.
Anonymous said...
நான் ஏதோ வலைத்தளம் என்று நினைத்துவிட்டேன். மன்னிக்கவும்.
தலைப்பு வைத்ததே தலைப்பிலதவரை சீண்டத்தானே :)
Post a Comment