Friday, October 05, 2007

அண்ணன் சிறீரங்கன் வழியில் நானும் ..

எனக்கு புலிகள் அமைப்பில் உடன்பாடுகள் இல்லை. எனது அரசியற் கண்ணோட்டத்துக்கும் அவர்களின் அரசியல் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடு கிடையாது. அதனால் அவ்வமைப்பை நிராகரிக்கிறேன். ஆனால் பொதுப்பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும் போது அந்த அமைப்பை விட்டால் நமக்கு எதுவும் கிடையாது.

கொழுவிக்கு என்னாச்சு என்று யோசிக்கிறீர்களா ? வேறொன்றுமில்லை. அண்ணைன் சிறிரங்கன் அவர்கள் தோழர் தமிழச்சி அவர்களுக்கு எழுதியிருந்த பின்னூட்டமொன்றில் வழங்கியிருந்த ஆலோசனைகளில் ஒன்றைப் படித்தவுடன் அவரது வழியிலேயே நானும் செல்லலாம் என முடிவெடுத்து விட்டேன்.

அப்படி என்னதான் எழுதினார் சிறீரங்கன் அவர்கள் ? அது இது தான்.

எனக்கு ரீ.பீ.சீ வானொலியில் உடன்பாடுகள் இல்லை.எனது அரசியற் கண்ணோட்டத்துக்கும் அவர்களின் அரசியற் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடுகிடையாது.அதனால் அவ் வானொலியை நிராகரிக்கிறேன்.ஆனால் பொதுப் பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும்போது அந்த வானொலியைவிட்டால் நமக்கு எதுவுங்கிடையாது.

இப்போது சொல்லுங்கள் நண்பர்களே சிங்கள இனவாத அரசு மேற்கொள்ளும் அழித்தொழிப்பு நமக்குப் பொதுப்பிரச்சனை இல்லையா ?

8 comments:

Sri Rangan said...

நிச்சியமாகக் கொழுவி!


புலிகளை இந்திய இராணுவம் அழிக்கும்போது ஆதரித்தோம்.அதாவது, நிபந்தனையின்றி!

இப்போதும்,அந்நிய இராணுவங்களின் முகங்கள் மாறுபடலாம்,ஆனால், அவர்களின் அனைத்து வளங்களையுங்கொண்ட அந்நிய ஏவல்படையான சிங்கள இனவாத இராணுவத்தின் இனவழிப்புக்கெதிராகப் புலிகள்(நமது பாலகர்கள்)செய்யும் தேச பக்தப் போரை நான் நிபந்தனையின்றி ஆதரிக்கிறேன்.இக் கருத்தை இடம்-பொருள் கண்டு புரிக.

மாறபட்ட கள நிலவரங்களை மனங்கொள்ளாத கதையாடலூடே கட்டியமைக்கும் கயமைக் கருத்தாடலின் பின்னே உந்தப்படும் நிலையில் எனது புரிதற்பாடில்லை.


கொழுவியின் கருத்தில் உள்ள மேற்கருத்தாடலின் நியாயத்தை மறுப்பதற்கில்லை!


எனினும்,அதன்(ஈழ அரசியல்-புலிகள்) உள்ளார்ந்த அரசியலுறுவுகள்,நலன்களையும்,அதன் பின்னான புலிகளின் வர்க்கச் சாய்வுகளையும்,மீளக் கட்டியமைக்கும் மக்கள்சாரப் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்துக்கும் நாம் எதிரானவர்கள்.குடிசார் சமூகத்தின் எல்லையில் நின்று கருத்தாடும் ஒருவருக்கு உளப்பூர்வமாகப் புலப்படும் புலிகளின் போராட்டத்தினு}டாகக் கடக்கப்படும் உயிர்மீதான அழுத்தம் மற்றும் இயற்கை-வாழ்வாதாரங்கள்மீதான ஆதிக்கம் மக்களின் குடிசார் மதிப்பீடுகளோடு அவர்களது உறவு எத்தகையதென்பது வெளிச்சம்.

தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தை அழிப்பதற்கெடுக்கும் அந்நிய முயற்சிக்கு புலிகளின் கடந்தகால,நிகழ்கால,எதிர்காலப் போராட்டச் செல் நெறி மற்றும் உலகப் போராட்டச் சக்திகளோடான உறவு மிகத் தீர்மானகரமான பாத்திரத்தை எடுக்கும்.அங்கே, புலிகள் மக்களின் பக்கமா அல்ல அந்நியச் சக்திகளின் அடிவருடிகளா என்பதை நாம் அறியுந்தரணமொன்று வரும்.அப்போது தமிழ்பேசும் மக்களின் கைகளில் பொன் விலங்கு பூட்டப்பட்டிருக்கும்.

Anonymous said...

எனக்கு கொழுவி பேசுறதுல உடன்பாடுகள் இல்லை.எனது புளோக் கண்ணோட்டத்துக்கும் அவரின் புளோக் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடுகிடையாது.அதனால் அவ் வானொலியை நிராகரிக்கிறேன்.ஆனால் பொதுப் பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும்போது கொழுவியின் பதிவை விட்டால் நமக்கு எதுவுங்கிடையாது.


இப்போது சொல்லுங்கள் நண்பர்களே கொழுவி ப‌திவு வெச்சி கொழுவித்தள்ளிக் கோண்டிருப்பது பொதுப் பிர‌ச்சினைதானே இல்லையா?

வெற்றி said...

:-))

கொழுவி said...

//குடிசார் சமூகத்தின் எல்லையில் நின்று கருத்தாடும் ஒருவருக்கு உளப்பூர்வமாகப் புலப்படும் புலிகளின் போராட்டத்தினு}டாகக் கடக்கப்படும் உயிர்மீதான அழுத்தம் மற்றும் இயற்கை-வாழ்வாதாரங்கள்மீதான ஆதிக்கம் மக்களின் குடிசார் மதிப்பீடுகளோடு அவர்களது உறவு எத்தகையதென்பது வெளிச்சம்.//

அண்ணை நீங்கள் இப்பிடி எழுதி நிறைய நாளாச்சு. இதுதான் உங்கடை ட்ரேட்மார்க் எழுத்து. :)

//எனது புளோக் கண்ணோட்டத்துக்கும் அவரின் புளோக் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடுகிடையாது.அதனால் அவ் வானொலியை நிராகரிக்கிறேன்//

ஐயா ராசா கொப்பி செய்து பேஸ்ற் செய்யும் போது கவனமாக இருக்க வேணும். நான் எங்கே ஐயா வானொலி நடாத்துறேன். ?

-/பெயரிலி. said...

எனக்கும் இந்தப்பதிவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நானும் சில கேள்விகள் கேட்டுப் பதிவு போட்டனான். ஆனால், தமிழ்மணம் ஏற்க மறுக்குது. தமிழ்மணக்காரர் விலத்திப்போட்டினர் எண்டு கத்தவும் சத்தியில்லை ஆனா, சத்தி வருகுது. ஆராச்சும் அதை தமிழ்மணத்துக்கு அனுப்பிவிடுங்கோ.

மாசிலா, இரயாகரன், தமிழச்சி இன்னார் பிறர் & புரட்சி

கொழுவி said...

//ஆராச்சும் அதை தமிழ்மணத்துக்கு அனுப்பிவிடுங்கோ.//

ம். சேர்த்துக்கிடக்கு. அதுக்காக தமிழ்மணத்தை கொழுவியோ நடத்திறது எண்டெல்லாம் கேட்கக் கூடாது. ஆமா

-/பெயரிலி. said...

இல்லை; கேப்பம். கேள்வி கேக்கத்தான் எங்களுக்குத் தெரியும். அதுவும் கேக்கிற மூட் வந்தால், கேட்டுக்கொண்டேயிருப்பம்.

அண்ணன் ஸ்ரீரங்கன் வழிக்கோ கொழுவி வழிக்கோ நாங்கள் வரமாட்டம். எங்கள் வழி தனிவழி. அதிலை மற்றவையின்ரை கார், கால் படக்கூடாது.

Anonymous said...

//குடிசார் சமூகத்தின் எல்லையில் நின்று கருத்தாடும் ஒருவருக்கு உளப்பூர்வமாகப் புலப்படும் புலிகளின் போராட்டத்தினு}டாகக் கடக்கப்படும் உயிர்மீதான அழுத்தம் மற்றும் இயற்கை-வாழ்வாதாரங்கள்மீதான ஆதிக்கம் மக்களின் குடிசார் மதிப்பீடுகளோடு அவர்களது உறவு எத்தகையதென்பது வெளிச்சம்.//

ஸ்.....ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே..