அண்ணன் ஸ்ரீரங்கன் பெயரிலியின் பதிவொன்றிற்கு இட்ட பின்னூட்டத்தில் தமிழச்சி விவகாரம் தொடர்பான கோப்பை இத்தோடு மூடி விடுவதாக அறிவித்திருக்கிறார்.
சாதியத்துக்கெதிரான போராட்டத்தில் நம்மிடம் வேறு பார்வைகளும்,அது சார்ந்து உறவுகளும் தொடர்பாகக் கருத்துக்கள் தனித்துவமாக இருப்பதை ஏலவே எனது முதற்கட்டுரையில் கொடுத்துவிட்டேன்.இதற்குமேல் இந்தத் தமிழச்சியின் பயிலை இதோடு மூடிவிடுகிறேன்.
அவரின் முடிவை ஏகோபித்து ஆதரித்து நாமும் தமிழச்சி தொடர்பான பதிவுகள், பின்னூட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விலகிக் கொள்கிறோம். இங்கே தமிழச்சிக்கு சென்று சேர வேண்டிய ஒரு சில பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆபாச வார்த்தைகள் அற்ற, அல்லது ஆங்காங்கே தமிழச்சியின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் பரவிக் கிடக்கும் அநாகரீக வார்த்தைகள் அற்ற பின்னூட்டங்களே வந்து கொண்டிருப்பினும் அவை அவரது பதிவுகளில் அவை வெளியிடப் பட்டாலே படிப்பவர்கள் கொஞ்சமாயினும் புரிந்து கொள்வார்கள். ஆகவே அவரது பதிவுகளில் பின்னூட்டமிட்டுவிட்டு அவர் வெளியிடுவாரோ, இல்லையோ என்ற ஐமிச்சத்தில் இங்கும் வந்து பின்னூட்டிச் செல்பவர்களுடைய பின்னூட்டங்கள் வெளியிடப் பட மாட்டா.
ஒரு பழ மொழி சொல்வார்கள். நான் இங்கே பகிரங்கமாகச் சொல்ல விரும்பாத அப் பழமொழிக்கேற்ப நாம் விலககிச் செல்கின்றோம்.
வாருங்கள் தோழர்களே.. நாம் வழமை போல கும்மியடிப்போம்.
தமிழச்சி தான் வரித்துக் கொண்ட பாதையில் வீறுநடை போட வாழ்த்துகிறோம்.
இதுவரை அவர் போராடிப் பெற்ற பயன்களைப் போலவே இனியும் பெற வாழ்த்துகிறோம். ஐரோப்பிய வாழ் தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாது ஈழத்துவாழ் ,அமெரிக்க வாழ், தென்துருவ வாழ் தமிழர்களுக்கும் கூட அவர் கூடிய விரைவில் சமூக விடுதலை வாங்கிக் கொடுப்பார் என்னும் நம்பிக்கை எமக்குண்டு.
அண்ணன் ஸ்ரீரங்கன வழியே நமது வழி.
இனி
ஸ்டார்ட் மீசிக்
அண்ணன் கொழுவி அசைந்து வாறான்
அடியுங்கடி ஈழத்துக் கும்மி
12 comments:
பாவி மகனே பத்திரமாத் திரும்பி வந்திட்டியா? பதைபதைச்சுக் கொண்டு இருந்த எனக்கு இப்பதான் நிம்மதி ;-))
WHAT!!!! No No.... someone have to stay and you can't leave the battle ground in the middle :):)... Jokez aside.... she is talking of Tamileelam without enough knowledge
எந்த ராசா வந்துட்டியேடி வாடி வா இவளுகளொட இனி சேராதா இவளுகள் எல்லாம் புள்ளையை பேக்காட்டி போட்டாளவை அழாதேயும்
அப்ப நீங்கள் அவவோட புலிவேட்டைக்குப் போகயில்லை எண்டிறியளாக்கும்
முதல் கொமண்டை நீங்களே போட்டுக்கொள்ளவில்லை (என்னைப்போல) என்று நம்பி இந்த பின்னூட்டத்தை பின்னூட்ட கயமைக்காக அளிக்கும் இவ்வேளையில்
வெற்றுத்தமிழ்ச்சாதீயப்புரட்சிமார்க்ச்சியவாதக்கபடவாதகழிசடைக்கும்மிப்பதிவரோடிருந்தவரையில் நீங்கள் உருப்பட்டதா சரித்திரமே இல்லை...
எப்படி, பெயரிலியை விட நீட்சியான வார்த்தையை மொழிந்துவிட்டேனா...
உதனை உடனே பெயரிலி அண்ணைக்கு ரெலிபோன் போட்டு சொல்லிவிடவும்
வாட் த ஹெல் ஈஸ் ஹேப்பனிங் ஹியர்
எனக்கு தெரியும். உங்களுக்கு ?
இதோ தமிழச்சியின் இன்னொரு பதிவு
http://thamilachi.blogspot.com/2007/10/blog-post_5826.html
அதற்க்கு என் பதில் ஆனால் இதுவரை அந்தப் பதிலை அவர் வெளியிடவில்லை
தமிழச்சி வாழ்க உங்கள் ஜனனாயகம்
நானும் நெல்லியடியைச் சேர்ந்தவன் தான். நீங்கள் கூறியதுபோல் அங்கே சிங்களவர்களுக்கும் வெள்ளாளருக்கும் சண்டை என்ற விடயம் நடைபெறவில்லை.
தீவு நீங்கள் கூறியதுபோல் இராஜலிங்கம் எம்பியின் வெற்றிக்கு வெள்ளாளர்கள் காரணம் இல்லை. அந்தப் பகுதிகளில் வாழ்ந்த குறிப்பாக உடுப்பிட்டி அல்வாய் வதிரி தாழ்த்தப்பட்ட மக்களே காரணம். ஒரு சில வெள்ளாளர்கள் ஆதரித்தார்களே அன்றி பலர் அவருக்கு ஆதரவு வழங்கவில்லை.
தமிழச்சி உங்களுக்கு ஏன் தேவையற்றவேலை. தமிழ்னாட்டைப்போல் எங்கள் நாட்டில் சாதிக்கொடுமை இல்லை. இங்கே சாதிக்கட்சி இல்லை. எங்கேயும் சாதிப்பெயர் கேட்பதில்லை. இரட்டை டம்ளர் முறை இல்லை.
நீங்கள் பிரபலமடைய ஏன் தேவையற்ற பிரச்சனைகளை எடுக்கிறீர்கள்.
அது சரி !
தன்னோடு எதற்காக சண்டை பிடிக்கிறார்கள் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத சிறுவர்களோடு நாம் கருத்து மோதினால் எமக்குத் தான் இழுக்கு.
சிறிரங்கன் இராயகரன் ஆகியோரோடு வாதிட்டாலாவது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதையாவது அவர்கள் புரிந்து கொள்வார்கள். தமிழச்சியிடம் அவ்வாறெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
பேசாமல் நாம் நம் வேலையைப் பார்க்க வேண்டியது தான்.
செந்தழலே
/உதனை உடனே பெயரிலி அண்ணைக்கு ரெலிபோன் போட்டு சொல்லிவிடவும்/
உதுக்கெல்லாம் உடனே ரெலிபோன் போட்டுச் சொல்லத்தேவையில்லை. சதிலீலாவதியிலிருந்து மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன்வரை கிளைமாக்ஸ் சீன்வரையிருந்து பிறகெதுக்குப் பார்த்திருக்கிறோம் என்கிறீர்கள். போன், போன்விட்டா எதுவுமில்லாமலே சண்டைக்காட்சிப்பின்னூட்டத்திலே வந்து குதிப்போம். என்ன நாயகியை, தங்கச்சியை, தாயைக் கடத்தின பின்னூட்டத்துக்கு முதல் ஒரு பாட்டுப்பின்னூட்டம் போட்டிருக்கிறவேணும். அவ்ளோதான் மா(ட்)டர் :-)
தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு பெரியாரிஸ்ட்டுக்கள் மேல் வெறுப்பினை ஏற்படுத்தும் நோக்கில் சீண்டிவிடும் நோக்கில் தமிழச்சியின் பின்னால் இருந்து அவரை இயக்குபவர் யார் என்பது புரிகிறது.
தமிழச்சி அதனைப் புரிந்து கொண்டுதான் வலையில் விழுந்தாரா அல்லது தன்னை முன்னிலைப் படுத்தும் அவரது வழமையான செயற்திட்டத்திற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் விழுந்தாரா எனத் தெரியவில்லை.
இந்நிலையில் ஈழத்தமிழர்களான நாம் இதனை பெரியாரிஸ்ட்டுக்களுடனான மோதலாகப் பார்க்காமால் தனியே தமிழச்சி என்னும் தனி மனிதருடனான மோதலாகத் தான் பார்க்க வேண்டும்.
அவ்வாறு தனி மனிதர் ஒருவருடன் மோதுவதால் எப்பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லையென்பதால் நாம் அவரின் ஈழம் தொடர்பான அரை வேக்காட்டுத்தன கருத்துக்களுக்கு காது கொடுக்காமல் கடந்து போக வேண்டும்.
///உதுக்கெல்லாம் உடனே ரெலிபோன் போட்டுச் சொல்லத்தேவையில்லை. சதிலீலாவதியிலிருந்து மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன்வரை கிளைமாக்ஸ் சீன்வரையிருந்து பிறகெதுக்குப் பார்த்திருக்கிறோம் என்கிறீர்கள். போன், போன்விட்டா எதுவுமில்லாமலே சண்டைக்காட்சிப்பின்னூட்டத்திலே வந்து குதிப்போம். என்ன நாயகியை, தங்கச்சியை, தாயைக் கடத்தின பின்னூட்டத்துக்கு முதல் ஒரு பாட்டுப்பின்னூட்டம் போட்டிருக்கிறவேணும். அவ்ளோதான் மா(ட்)டர் :-)
////
அப்போ சரி...
ஆனா உங்களை விட நீண்ட வார்த்தை எழுதி சாதனை படைத்தேனா இல்லையா ?
நீங்க தொன்னுத்தொம்போதுலேயே (1999) இணையத்துல இதுமாதிரி எழுதிட்டீங்களே...
அப்போ எல்லாம் நான் மூண்றாம் ஆண்டு படிச்சுக்கிட்டிருந்தேன்...திருச்சியிலே...
இணையம் என்றால் இண்டர்நெட்டு என்று மட்டும் தெரிந்துவைத்திருந்தேன் :)))
நிறைய மீள் பதிவு செய்யவும்....
(பார்ப்போம் இந்த பின்னூட்டத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்று)
Post a Comment