Sunday, October 07, 2007

பாசிசப் போட்டி ! பங்கு பெற வாரீர்

தோழர் பி.இரயாகரன் இன்னுமொரு கட்டுரையை எழுதியிருக்கிறார். தூங்குவதாக நடிக்கும் பாசிட்டுக்களை யாராலும் எழுப்ப முடியாது என்னும் அக்கட்டுரை பற்றி எதுவும் பேசப் போவதில்லை. வேண்டுமானால் தமிழ்மணத்தை ஈழத்தமிழர்கள் அல்லாதவர்கள் நடாத்துவதால் அது புலிப் பாசிசத்தில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளது என்ற அருமையான கண்டுபிடிப்பை இங்கு குறிப்பிட்டுச் செல்லலாம். (தமிழ்மணம் ஒரு தளமல்ல. அது ஒரு திரட்டி. அதில் கருத்தியல் கொள்கை அடிப்படையில் எவரென்ன எழுதினாலும் வெளிவரும் என்பதையும் அவருக்கு விளக்கிச் சொல்ல வேண்டியஅளவிற்கு அவரது அறிதிறன் ஆழம் குறைந்ததல்ல என நான் நம்புகிறேன். ஒரு பேச்சுக்கு புலிகளின் தலைவர் வலைப்பதிவமைத்து எழுதி அது தமிழ்மணத்தால் திரட்டப்பட்டால் இராயகரன் புலிப்பாசிசத் தமிழ்மணம் எனச் சொல்வாரோ தெரியவில்லை.

அதை விடுவோம். கணித பாடத்தில் பொதுவெடுத்தல் என ஒரு விசயம் உண்டு. அதாவது 2xy + 3x என்பதில் x ஐ பொது எடுத்தால் x(2y+3) என வரும்.

அதே போல இராயகரன் எழுதியிருக்கும் மேற்சொன்ன கட்டுரையில் ஒரு விளையாட்டுக்கு பாசிசம் என்ற சொல்லைப் பொது எடுத்தேன். என்ன அதிசயம் ? அவரது கட்டுரை ஐந்து வரிகளிற்குள் முடிந்து விட்டது.

இப்போ போட்டி என்னவெனில் அக் கட்டுரையில் எத்தனை தரம் பாசிசம் என்னும் சொல் இடம்பெற்றிருக்கிறது. விடைகளைச் சொல்லி பாசிசப் பரிசுகளை பறித்துச் செல்லுங்கள்.

14 comments:

Anonymous said...

தோழர் ரயாவின் கட்டுரையில் பாசிசம் எத்தனை முறை வந்திருக்கும்னு எண்ணிறதை விட நமக்கு பாந்தி பாயசத்தில் எத்னை முந்திரிகொட்டை இருக்குன்னு கவுண்ட் பண்ணுறதுதான் ஈஸியாக இருக்கும் கொழுவி சார்

Anonymous said...

புலிகளுக்கு ஆதரவானவர்களை அல்லது இராயகரனை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை புலிகள் பினாமிகள் பாசிட்டுகள் என பொத்தாம் பொதுவாக இராயகரன் அழைக்கும் போது புலிகளுக்கு எதிரானவரான அல்லது புலி ஆதரவாளர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் இராயகரனை ஒட்டுக்குழு உறுப்பினர் அரச கைக் கூலி துரோகி இன்ன பிற சொற்களால் அழைத்து பின்னூட்டமிட்டால் ஏற்றுக் கொள்வீர்களா

theevu said...

முதல் எனக்கு கணக்கு விளங்கவில்லை.

பின்னவீனத்துவ சிலபஸ்கூட அத்துபடி ஆனால் இந்த பாசிசம் மட்டும் விளங்குதேயில்லை.

பாசிசம் எண்டால் என்ன?

நல்ல ரியூசன் மாஸ்டர் யாரும் கிடைச்சால் சொல்லும்.(பி.கு சிறீரங்கனிடம் போகமாட்டன்)

sathiri said...

அய்யா கொழுவி எப்பவிலை இருந்து தெல்லிப்பளை வைத்தியசாலை மன நோயாளிக்கெல்லாம் பதில் எழுத தொடங்கினனீங்கள்

-/பெயரிலி. said...

பாரோட்டா ரொட்டியெண்டால், பங்கு பெற வருவன். பந்தி வைப்பியளோ?

-/பெயரிலி. said...

அதிரடி
புலிகளுக்கு ஆதரவானவர்களை அல்லது இராயகரனை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை புலிகள் பினாமிகள் பாசிட்டுகள் என பொத்தாம் பொதுவாக இராயகரன் அழைக்கும் போதுகூடா புலிகளுக்கு எதிரானவரான அல்லது புலி ஆதரவாளர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் இராயகரனை ஒட்டுக்குழு உறுப்பினர் அரச கைக் கூலி துரோகி இன்ன பிற சொற்களால் அழைத்து பின்னூட்டமிட்டமுடியாது. அவர் எவ்வாறானவரானாலுங்கூட, அவ்வாறானவர் அல்லவே அல்லர். அவர் பொத்தாம்பொதுவாக அழைக்கின்றார் என்பதற்காக, நான் ஒருபோதும் அப்படியாக அவரை நோக்கி அழைக்கமாட்டேன்.

Anonymous said...

புலிப்பாசிட்டுக்கள்/ ஒட்டுக்குழுக்கள் என்ற இரண்டே வகைகளுக்குள் எல்லோரையும் அடக்கிவிட்டுத் தானொருவரே நடுநிலைநிற்பதான பிரமையிலிருக்கிறார் தோழர் இரயா. புலிகளினழிவை மக்கள் சாதிப்பதாகப் புலம்பித் திரியுமவர் ஈழத்தில் புலியுடன்மக்களுந்தான் அழிகிறார்களென்பதை அறியாதிருக்க நியாயமில்லை. சிங்களத்தின் நோக்கம் புலிகளுக்கெதிரான போரேயல்ல. ஒட்டுமொத்தத்தமிழினத்தை ஈழத்திலிருந்து துரத்தியடிப்பது. தமிழரேயில்லாத ஈழத்தையே நாடிநிற்கும் இரயா யாருக்காக இணையப் புரட்சி செய்கிறார்? இரயா முன்வைக்கும் தீர்வுகள்தாமென்ன?

Anonymous said...

இதென்ன பெரீய்ய போட்டி? இரயாகரனின் தமிழரங்கக் கட்டுரைகள் அனைத்தையுமே எண்ணிவிட்டேன். பாசிசம்/பாஸிசம் ஆகிய சொற்கள் இதுவரை 84,368 தரம் பாவித்துள்ளார். விரைவில் இலட்சம் போடப் போகிறார். நான் எண்ணினதிலை டவுட்டு இருந்தாப் போய் எண்ணிப் பாருங்கோ. அதுக்கு முதல் பரிசைத் தாருங்கோ எனக்கு.

Anonymous said...

அண்ணோய்!

எள்ளிலு சிறிய இலை விடத்தம் இலை. அதை எண்ணச் சொல்லுங்கோ எண்ணிறம். ஆனா உது மட்டும் வேணாம்.. ஆளவிடு சாமி

அற்புதன் said...

பாசமான தோழர் இராயா பற்றி அவ தூற்றைப் பரப்பும் கொழுவியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இணையத்தில் வெறும் மொக்கைப் பதிவுகளைப் போடும் கொழுவியின் மக்கள் நலன் சார்ந்த நடைமுறைச் செயற்பாடுகள் எவை எவை என அறிய விரும்புகிறேன்.

பிள்ளையை நேசரிக்கு கூட்டிக் கொண்டு போறது தான் 'என்ர மக்கள்' நலம் சார்ந்த செயற்பாடு என்றோ ,வீட்டுக்கு முன்னால பேச்சுத் துணை இல்லாம வம்பழக்கிற வெள்ளைக் காறக் கிழவன் தான் என்ர அரசியற் செயற்பாட்டுக்கான தோழர் என்றோ உண்மைகளை அவிட்டு விடாமால் பதில் சொல்லுமாறு கொழுவியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறான வசதியான செயற்பாடுகளைத் தவிர மற்ற எந்தச் செயற்பாட்டையும் தெரிவுகளையும் பாசிசப் புலிகளும் அவர்களின் பினாமிகளும் எமக்கு விட்டு வைக்கவில்லை என்றும் சொல்லலாம்.

உங்கள் ஆய்வுகளில்/பாசிச மொக்கைகளில் கழியும் நேரத்தைத் தவிர்த்து இது போன்ற பின்னூடங்களுக்கு பதில் வழங்குமாறு தோழர் கொழுவி அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

பெயரிலியை போலவே எனக்கும் தோழர் இரயாவிடம் ஒரு கேள்வி

இணையம் வருவதற்கு முன்னர் எப்படி நீங்கள் புரட்சி செய்தீர்கள் ?

இணையம் தவிர்ந்த மற்றைய தொடர்பாடல் வழிகளான ஈமெயில் எஸ் எம் எஸ் பக்ஸ் தந்தி கூரியர் மெயில் புறா இந்த வழிமுறைகளைப் பின்பற்றியும் புரட்சி செய்கிறீர்களா..?

கொழுவி said...

//இணையத்தில் வெறும் மொக்கைப் பதிவுகளைப் போடும் கொழுவியின் மக்கள் நலன் சார்ந்த நடைமுறைச் செயற்பாடுகள் எவை எவை என அறிய விரும்புகிறேன்.
//

இப்படிக் கேள்வி கேட்பதன் ஊடாகவே நீங்கள் ஒரு பினாமி பாசிட்டு என்பதை நிறுவுகிறீர்கள். இதற்கான எனது பதிலை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள். நடுநடுவில பாசிசம் புலிப்பினாமி பாசிட்டு என்று போட்டுக்கொள்ளுங்க..

ரவி said...

கொழுவி, எனக்கு ஒரு பிரச்சினை...

எனக்கு இராயகரன், அற்புதன் இவர்களை யாரென்று தெரியாது...

அதனால் எனக்கு என்ன சொல்லித்தொலைப்பதென்றே தெரியவில்லை...

அதனால் இந்த பதிவை படித்து குழம்பி மண்டை காய்ந்தேன் என்று பதிவு செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போகிறேன்...

உங்கள் நன்பர்கள், எதிரிகள் எல்லாரும் சுகமாயிருக்கட்டும்...

Anonymous said...

அதுதான் தூங்குவது பாசிஸ்ட் ஆச்சே பிறகு எதற்கு எழுப்பணும்? தூங்கும் பாசிஸ்டுக்கள் எழும்பினால் நல்லதா?

இரயாகரன் அவர்களின் பார்வையில் பாசிஸ்டுக்களில்லாதவர் யார்?

சிறிரங்கனும் அற்புதனும் ?

என்னும் சோபா சக்தி அவர் இவர் என்று கொஞ்சப்பேர மொத்த ஈழத்தமிழ் சனத்தில கழிச்ச மிச்சம் வருவது தான் இரயாகரனின் பாசஸ்ட் கணக்குக்கு சரியான விடையா வரும்.