Monday, October 08, 2007

தோழர் தமிழச்சிக்கு பகிரங்க மடல் :)

எல்லோருமே பதிவர்களின் பெயர்களை தலைப்பில் இட்டு பதிவெழுதிக்கொண்டிருக்கிறார்கள். என் பங்குக்கு நானும் ஒரு பகிரங்க மடலினைத் தோழர் தமிழச்சிக்கு எழுத விளைகிறேன். (தோழர் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் என நம்புகிறேன். இருப்பினும் யாராவது தமிழறிஞர்கள் இதுவிடயத்தில் பிழையைச் சுட்டிக் காட்டின் தோழர் என்னும் சொல்லை தோழியாக மாற்றக் கடமைப்பட்டுள்ளேன்)

தமிழச்சியின் பதிவுகள் குறித்து கருத்தெதுவும் கிடையாதென்ற போதும் அவர் வரித்துக்கொண்ட பணியில் தளராமல் தொடர்வது குறித்து ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு.

எனது நடவடிக்கைகள் எந்த விதத்திலும், அது பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எவ்வாறெனினும், எனக்கும், முக்கியமாக சமூகத்தில் பிறருக்கும் பாதிப்பினை, இழப்பினை ஏற்படுத்தாத நிலையில் அனைத்தையும் செய்வதற்குரிய உரிமை எனக்குண்டு என நான் நம்புகின்றவன். இவ்விடத்தில் கலாசாரம், பண்பாடு, கடவுள், பகுத்தறிவு, பெரியார் என எந்தவிதமான இடையூறுகளையும் நான் கணக்கெடுத்துக் கொள்வதில்லை.

தமிழச்சி எனக்கு அரசியலும் வேண்டாம் இயக்கமும் வேண்டாம் எனச் சொன்னது போல எனக்கு கடவுளும் வேண்டாம் பெரியாரும் வேண்டாம் என்பதுதான் இப்போதைக்கு என் நிலை.

இங்கே இத்திறந்த மடலில் தமிழச்சி மீதான என் பிம்பங்கள் உடைந்த சில சந்தர்ப்பங்களைச் சொல்லிச் செல்கிறேன். ( வலையுலகில் வேறும் பலர் மீதும் இவ்வாறான பிம்பங்கள் உடைந்திருக்கின்றன )

தனக்குத் தொல்லை கொடுக்கும் ஒருவரை (தமிழச்சியின் வார்த்தைகளில் பொறுக்கியை) நோக்கி தமிழச்சி இவ்வாறு அறை கூவுகின்றார். உன் அம்மா உன்னை ஒருத்தனுக்குப் பெற்றவளாயிருந்தால் நேரே வாடா என்கிறார் அவர். வழமையாக பெண்ணின் பாலியல் நடத்தையூடு ஒருவனை இழிவு செய்யும், காலங்காலமாக கட்டமைக்கப்பட்ட ஆண் வர்க்கச் சிந்தனைதான் இது.

ஆயினும் இது தமிழச்சியின் எண்ணத்திலிருந்து ஏன் வெளிப்படுகிறது ? ஆண் வர்க்கம் பெண்ணின் மீது வலிந்து திணித்த, கற்பு கோட்பாடுகளுக்கு எதிராக பெரியார் துணையுடன் எழுத்தில் சமர் செய்யும் தமிழச்சியின் உள்மன வெளிப்பாடுதானே அவரது அத்தகைய வார்த்தைகளில் வெளித்தெரிகிறது.

அதாவது யாரோ ஒரு பொறுக்கியினைத் திட்டுவதற்கு, சற்றேனும் சம்பந்தப்படாத ஒரு பெண்ணின் பாலியல் நடத்தை குறித்துச் சந்தேகம் எழுப்புகிறார் தமிழச்சி. இதைத்தானே இதுநாள்வரை பெண்களுக்கெதிராக அதிகார ஆண்வர்க்கம் செய்து வருகிறது. இன்னும் விரிவாக சொல்வதென்றால் உன் அம்மா உன்னை பலபேருடன் உறவு கொண்டு பெற்றவள். ஆகவே நடத்தை கெட்டவள். நடத்தை கெட்ட ஒருத்திக்கு பிறந்தவனாகையால் நீயும் இழிவானவன். இதுதான் தமிழச்சியின் அவ்வார்த்தைகளுக்குள் பொதிந்து கிடக்கும் விரிந்த பொருள்.

இது குறித்து தமிழச்சியிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு தான் குறித்த ஒரு பொறுக்கிக்கு எதிராக மட்டுமே அவ்வாறு திட்டியதாகச் சொல்கின்றார். பொறுக்கிக்கோ அல்லது பெறுக்கிக்கோ (பெறுக்கி விவகாரத்திற்கு பின்னர் வருகிறேன் ) எவருக்கோ திட்டுவதாயினும், எவளோ ஒரு பெண்ணை இழிவுபடுத்த வேண்டிய தேவைதானே உங்களுக்கும் இருக்கிறது. ? காலம் காலமாக அதிகார ஆண்வர்க்கம் செய்து வரும் அதே கைங்கரியத்தைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்? இத்தனைக்கும் அதனை எழுத்தில் எதிர்த்துக்கொண்டு.

அடுத்த விவகாரம் ! தலித் மாநாட்டுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். அதுகுறித்து கருத்தெதுவும் இல்லை. ஐய்யையோ ஈழத்தில் சாதியக் கட்டமைவுகள் இல்லையென்று நான் பூச்சாண்டி எதுவும் காட்ட முயலவில்லை. யுத்தம் காரணமாகவும், தமிழ்த்தேசியம் முதன்மைப் படுத்தப்பட்டிருப்பதனாலும், ஈழத்தில் சாதியக் கருத்து நடைமுறையில் பெரும்பாலும் இல்லாது போயிருக்கிறது. அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ( நடைமுறையில் கோவில் திருவிழா, திருமணம் உட்பட இன்னும் பல நிகழ்வுகள் சாதிய அடிப்படையில் அங்கே இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன) ஆயினும் எண்ண அடிப்படையில் எல்லோர் மனங்களிலும் அங்கு சாதியம் குறித்த கருத்துக்கள் ஒழிக்கப்படவில்லை. அதற்கான மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆக தேவையெனச் சிலர் உணர்கின்ற மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கியிருக்கும் நீங்கள் ஒரிடத்தில் எழுதிய வார்த்தைகள் இவை.

/டேய் அனானி உன்னை மாதிரி தட்டு கழுவிக் கொண்டும், பெறுக்கும் வேலையும் செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. /

ஈழத்தில் சாதியம் தொழில்முறையான பிரிப்புக்களுனூடே கடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. 90 களின் ஆரம்பம் வரை இப்பிரிப்புகளினூடே மக்களின் சாதி அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருந்தது. அவன் கள்ளுச்சீவுறவன், இவன் பறைமேளம் அடிக்கிறவன் என்பவையூடாகத்தான் அங்கு சாதி அடையாளப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

அடக்கப்பட்ட மக்களின் தொழில்கள் இழிதொழில்களாக, கேவலமான தொழில்களாக நோக்கப்பட்டன. அத்தொழில்களைச் சொல்வதன் ஊடாக ஒருவர் சமூக மட்டத்தில் இழிவு செய்யப்பட்டார்.

இங்கே தமிழச்சியும் கழுவுறவன், பெறுக்கிறவன் என்பதனூடாக ஒருவரைக் கேவலமாகத் திட்டமுடியும் என நம்புவதன் ஊடாக அத்தொழில்கள் கேவலமானவை என அவருக்குள்ளிருக்கும் உயர் மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இதற்கு கூட தமிழச்சி குறிப்பிட்ட ஒரு நபரைத் திட்டவே அச்சொற்களைப் பயன்படுத்தினேன் என விளக்கமும் தந்திருக்கிறார். மேற்சொன்னது போலவே எவரைத் திட்டவெனினும் அவர் தனக்குள்ளிருக்கின்ற காலம்காலமாக கட்டமைக்கப்பட்டு வந்த பிற்போக்குத் தனத்தைத்தானே பயன்படுத்துகிறார். ?

இறுதியாக சொல்வது என்னவெனில் பெண்களின் பாலியல் நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புவதன் ஊடாக இழிவு செய்யலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு பெண் விழிப்புணர்வு குறித்து பேசவும் எழுதவும் என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், தொழில் ரீதியில் ஒருவரை கேவலப்படுத்தலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு, அதே தொழில்முறையில் சாதிப்பிரிப்புச் செய்த ஈழத்துச் சாதியத்திற்கெதிரான தலித் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், இது போல பல கேள்விகளும் எனக்குள் எழுவது தவிர்க்க இயலாதது என்பதுதான்.

உள்ளார்ந்த விழிப்புணர்வும், தெளிவும், அர்ப்பணிப்பும் அற்ற நிலையில் தமிழக அரசியல்த்தனத்தின் ஓர் அங்கமாகிய வார்த்தைகளால் யுத்தம் செய்தல் மற்றும் தன்னைத் துருத்தி வெளிக்காட்டுதல் என்னும் நிலைப்பாட்டில் அவர் செல்கிறாரா என்பது மற்றவர்கள் முடிவெடுக்க வேண்டியது. நான் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டேன்.

35 comments:

வி.சபேசன் said...

உங்கள் கருத்துக்கள் நியாயமானவை! நீங்கள் கூறிய கருத்துக்களை சற்றுமுன்தான் வேறொரு வலைப்பதிவரோடு தமிழச்சி குறித்து பேசுகின்ற போது, நானும் கூறினேன். நான் எழுதுவதற்கு முதல் நீங்கள் எழுதிவிட்டீர்கள்.
ஆனால் இவைகள் எதுவும் தமிழச்சிக்கு தெளிவைக் கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை.

Anonymous said...

கொழுவி
அண்மையில் எனக்கு ஒரு வலையை கனடாவாழ் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதில் பிரான்ஸ்சில் நடைபெறும் தலித் மானாடு பற்றிய செய்திகளும் வேறு ஈழத்தின் சாதீயப் பிரச்ச்னை பற்றிய செய்திகளும் இருந்தன. இன்றும் ஈழத்தில்(வன்னி தவிர) சாதீயப் பிரச்சனை இருக்கின்றது என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். அதே நேரம் மானாடு நடாத்துகின்ற அளவுக்கு பெரிதாக இல்லை. தமிழ்‍னாட்டுடன் ஒப்பிடும் பொழுது ஒன்றும் இல்லை எனவும் சொல்லலாம். அந்த வலையில் மாற்றுக் குழுக்களின் இணையத் தளங்களுக்கான தொடுப்புகள் இருக்கின்றன. இவர்கள் இதிலிருந்து காட்ட முற்படுவது தாழ்த்தப்பட்ட மக்கள் பெருசுக்கு எதிரானவர்கள் என்பதை ஆகும்.

தமிழச்சி பெரியார் வழி நிற்கிறார் ஆனால் ஈழத்துக்கு எதிராகவும் சிங்கள இன்வாதிகளின் கொலைகளுக்கு ஆதரவாகும் இருக்கிறார்.

Anonymous said...

ஈழத்தில் சாதிப் பிரச்சினை நிறைய உள்ளது. வெள்ளாளர் ஆதிக்கம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஈழமும் தமிழகமும் சாதிப் பிரச்சினையில் வேறுவேறானவை. இலங்கை எழுத்தாளர்கள் பஞ்சமர் என்றே குறிப்பிட்டனர். தலித்துக்கள் என்று அல்ல. ஆனால் இன்று தலித் பிரச்சினை என்னும் கோசங்கள் தமிழகத்தவரால் வித்தியாசமாகவே விளங்கிக் கொள்ளப்படுகின்றன. பிரபாகரனும் தமிழ்ச்செல்வனும் வெள்ளாளர்களா என்ன? சாதி சொல்லிக் கூப்பிடுபவர்களுக்குப் புலிகள் கொடுக்கும் தண்டனைகளோ, சாதி அடிப்படையான கலாசார அம்சங்களைப் புலிகள் அழுத்தங்கொடுத்துக் குறைத்ததையோ இவர்கள் வசதியாக மறைக்கிறார்கள். ஆனால் புலிகள் பகிரங்கமாகச் சாதியத்துக்கெதிரான நிலைப்பாட்டை வெளியிடவில்லை. சோபாசக்தி போன்றவர்கள் தங்களை அடையாளப்படுத்தவும் தமிழகத்தில் நிலைநிறுத்தாவுமே தலித் என்பதை முதன்மைப்படுத்துகிறார்கள். தலித்துக்களுக்கு புலிகள் சலுகைகள் வழங்கவில்லை என்பதான கோசங்கள் வேறு. தமிழிச்சி போன்ற அரைகுறைகளுக்கு இதுவெதுவும் விளங்கப் போவதில்லை

Mayooran said...

அனானியின் கருத்துடன் நான் 100% ஒத்துப்போகின்றேன். தமிழச்சி தேவை இல்லாமல் எம் பிரச்சனையில் மூக்கை நுழைக்கின்றார்.

Anonymous said...

கொழுவி!

கொளத்தூர் மணியில் இருந்து, தமிழக அரசியல் வரைக்கும் செல்வாக்குள்ள ஒரு ஆளோட கதைக்கிறீர். கவனம்.

மணிப்பக்கம் said...

தங்களின் கருத்துக்களுடன் நான் ஒத்து போகின்றேன் அய்யா...! தொடர்ந்து பதியவும்!!

-/பெயரிலி. said...

கொழுவி,
என் தனிப்பட்ட கருத்து இது.
தமிழச்சி, இராயகரன் + சத்தியக்கடதாசி போன்றோருக்கு ஓர் அமைப்பு சார்ந்து ஆதரித்தோ, இன்னோர் அமைப்பினை வெறுத்து எதிர்த்தோ பதிவுகளைப் போடவில்லை என்று வாசித்தவரையிலே நம்புகிறேன்.

தமிழ்ச்சோலையைப் பின்னிருந்து யார் நடத்துவது என்பது இரயாகரன் சொல்லும்வரை எனக்குத் தெரியாது. தமிழ்ச்சோலை என்று ஒன்றிருப்பதோ, அதிலே நிகழ்ந்து குறித்து, தமிழச்சி பதிவு போட்டதுங்கூட இரயாகரன் பதிவிலே கண்டதுதான். ஆனால், தமிழ்சோலையிலே நிகழ்ந்ததாகத் தமிழச்சி சொல்வது அவ்வாறுதான் நிகழ்ந்திருந்தால், தமிழச்சி கேட்கும் நியாயம் அதன் பின்னால், யாரிருப்பினும் கேட்கப்படவேண்டியதே. அவருடைய ஒரே நோக்கம், அவர் சொல்லும் பெரியாரியத்தினது பிரசங்கமும் பரப்பலுமே என்றே தோன்றுகின்றது. இரயாகரன் + சத்தியக்கடதாசி ஆகியோர் அவரின் பதிவுகளிலேயிருந்து தமக்குத் தேவையான வகையிலே திரித்தும் விரித்தும் அர்த்தம் தோன்றும் வண்ணம் எழுதியிருக்கின்றார்கள் என்பதும் என் உணர்ந்தல். அதன் பின்னால், இரயாகரன் + சத்தியக்கடதாசி ஆகியோரை அமைப்பு ரீதியிலே முரண்படுகின்றவர்களிலே ஈழத்தமிழர் சிலர் தமிழச்சியினையும் மிகவும் தவறாக இலக்காகக் கொண்டு தாக்க முயல்கின்றனர் என்றே படுகின்றனர். சாத்திரியின் கடைசி இரு இடுகைகளும் மிகவும் பொருந்தாதவை என்பதிலே எனக்கேதும் மாற்றுக்கருத்தில்லை. அதுவும் தமிழச்சி பதிவாகவே "எனக்கு அரசியலும் வேண்டாம் இயக்கமும் வேண்டாம்" என்று எழுதி தன் பதிவினைப் பற்றிய இரயாகரன் போன்றோரது விளக்கம் தவறென்று சொன்னபின்னரும் இப்படியாக எழுதியது மிகவும் கேவலமானது. தமிழச்சியின் பதிவிலேயே வேறு யாரோ அநாநி அவருக்குப் பின்னூட்டம் மிகவும் கேவலமாக யாழ்ப்பாண வழக்கிலேயே எழுதியிந்தார். அதுவும் மிகவும் கேவலமானது. இது தமிழச்சி போன்றவர்களை ஈழத்தமிழர்களுக்காகக் குரல் எழுப்புவதைத் தடுக்கவே வழி செய்யும். அதுவும் பின்னூட்ட வாலாக்கள், வளர்மதி-சுகுணா திவாகர் பிரச்சனையிலே, தமிழ்பித்தன் - தமிழச்சி பிரச்சனையிலே புகுந்து தமது திசைதிருப்பலுக்காக விளையாடியதுபோல, இப்போதும் நிறைய தமிழச்சி போன்ற ஈழத்தமிழ் ஆதரவாளர்களையுங்கூட ஈழத்தமிழரிலிருந்து பிரிக்க, "ஈழத்தமிழன்", "தமிழ்நாட்டுப்பெரியார்த்தமிழன்" வடிவங்களாக அவ்வப்போது பின்னூடங்கள் வந்து கொட்டுகிறன. மாசிலாவுக்கு ஈழத்தமிழன் பின்னூட்டி எரிவதுக்கும் முண்டை மாசிலாவுக்கு ஈழத்தமிழன் பின்னூட்டுவதற்கும் வித்தியாசம் எழுதும் "ஈழத்தமிழிலேயே" தெரிந்துவிடும். இப்படியான நிலைகளையும் சாத்திரி போன்றோர் அந்நியமாக்குதலின்போது எண்ணிப்பார்ப்பதில்லை.


சபேசனின் பெரியாரியக்கம் நோக்கு என்னவென்றாலுங்கூட, மிகவும் ஆக்கபூர்வமானது. தலித் பெரியாரியக்கம் என்ற பதாகையின்கீழே புலியெதிர்ப்பினைச் சிலர் செய்கின்றார்கள் என்று அவர் கருதுவதால், மாற்றாக புலிகளுக்கு ஆதரவான பெரியாரியக்கம் என்று அவர் ஒன்றை அமைத்திருப்பது மிகவும் ஒழுங்கான சரியான முறையிலான எதிர்கொள்தல். அதை வரவேற்கலாம். தமிழச்சி போன்றோர்கூட, பெரியார் கொள்கைக்காக ஆங்கே சேர்ந்தியங்கும் வாய்ப்புண்டு.

இவ்வகையிலே ஈழத்தமிழரோ எத்தமிழரோ தமிழச்சியினைக் கேவலமாகத் தாக்கிப் பின்னூட்டுவதையும் பதிவிடுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதே நேரத்திலே, நீங்கள் தமிழச்சிக்காக இங்கு வரிசைப்படுத்தியிருக்கும் கேள்விகள் நியாயமானவையும் அவர் சொல்லிக்கொள்ளும் பெரியாரியப்பார்வைக்கு மிகவும் முரணானவையுமெனக் கருதுகிறேன். இவை தமிழர் என்ற வடிவிலேயே வரவில்லை. தொழில்சார்நிலைவன்மம், பால்வடிவவன்மம் என்பவற்றின் பாற்பட்டவை; நிதானமாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் கேட்டிருக்கின்றீர்களென்று படுகின்றது, அவர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.

Anonymous said...

கொழுவி,
தமிழிச்சி நிறைய வம்புதும்புகளில் மாட்டி குழம்பியுள்ளார். குட்டையை மேலும் குழப்பாமலிருப்பது நல்லது. தமிழிச்சி உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே பால்நிலை சார்ந்து தவறான வார்த்தைப் பிரயோகங்கள் செய்திருக்கிறார். ஈழத்துச் சாதியமைப்புத் தொடர்பில் அவருக்குப் போதிய விளக்கம் யாராவது பதிவாகக் கொடுப்பது நல்லது. ஆதாரங்கள் இல்லாமல் இணையப்புரட்சித் தோழர்களின் கருத்துக்களை மட்டும் நம்புவது தமிழிச்சியின் பிழைமட்டுமல்ல. ஈழத்துச் சாதியமைப்புத் தொடர்பில் தமிழகத்தவர் விளங்கிக் கொள்ளவில்லையென மீண்டும் மீண்டும் கூப்பாடுபோடும்நாம் ஏதாவது கட்டுரைகளை எழுதுவது நல்லது.

சாதி, பால்நிலை சார்ந்து உள்ள தவறான கண்ணோட்டம் என்பது பல்லாண்டுகளாகக் கடத்தப்பட்டு வந்துள்ளது. எமது கலாசார அம்சங்களிலும், மொழியிலும், சிந்தனையிலும் அவை பின்னிப் பிணைந்துள்ளன. பகுத்தறிவு வழிநின்று அவற்றைக் கடக்க நாம் நினைத்தாலும் சில சமயங்களில் (தமிழிச்சி உணர்ச்சி வசப்படுவது போன்ற) நம்மையறியாமல் வெளிவந்து விடுகிறது. நமக்குள்ளே உள்ள அழுக்குகள் படிப்படியாக அகற்றப்படல் வேண்டும். சில தலைமுறைகளின் பின்னராவது கலாசாரத்திலும் மொழியிலும் சிந்தனைமுறையிலுமிருந்து அந்த அழுக்குகள் அகற்றப்படும் என நம்புவோம்.

அவ்வாறு அகற்றப்படுவதற்கு பெரியாரியத்தைப் பரப்புவதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழிச்சி போன்றோரது பங்களிப்பு அவசியமானது. அவசரப்பட்டு முத்திரைகள் குத்துவதும் குற்றங்காணப்தும் பயனளிக்காது. நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பவற்றைப் பற்றித் தமிழிச்சி சிந்திப்பார் என நம்புவோம்.

வணக்கம்

Anonymous said...

இதுவரை பெரியார் குறித்து 1101 கட்டுரைகளை எழுதிய தமிழச்சியே சமயத்தில் சறுக்கி அக்கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு முரணாக எழுதும் போது அவற்றைப் படிக்கும் நாம் எம்மாத்திரம் ?

முதலில மனசுக்குள்ள விழிப்புணர்வு வேண்டும். பிறகு அதை மற்றவர்களுக்கு பரப்பலாம். அப்படி விழிப்புணர்வு வரவில்லையெனில் முதலில் அதற்கு தனக்குத்தானே விழிப்புணர்வு பெற முயற்சிக்க வேண்டும்.

தவிர இங்கே தமிழச்சியின் எந்தவித கருத்துக்களையும் ஈழவிடுதலைப் போருடன் நான் தொடர்பு படுத்தவில்லை. அவர் புலி எதிர்ப்பாளர்களின் வலையில் சிக்கினாரோ அல்லது விரும்பியே விழுந்தாரோ என்பது குறித்தெல்லாம் அலட்ட வில்லை. அது அவர் விருப்பம்.

தமிழச்சி என்ன சொன்னாலும் இராயகரன் என்ன சொன்னாலும் சிறிரங்கன் என்ன எழுதினாலும் கொழுவி என்ன சொன்னாலும் ஈழப் போர் தன்பாட்டில் நடந்தே தீரும்-

ஆனால் சாதாரண நிலையிலேயோ அல்லது உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயோ அவர் தான் பரப்பும் கொள்கைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

குருக்கள் கு*வினால் குற்றமில்லை என்று ஊரில் சொல்லூவாங்கள். இங்க தமிழிச்சிக்கு வாக்காளத்து வாங்க வெற்றியும், இன்னுமொரு அனோனியும் வந்திட்டார்கள்.

தாங்கள் ஈழத்தில் புகுத்த முனையும் பெரியாரிசத்துக்கு சறுக்கல் வந்திடுமோ எண்ட பயம் தான் இவைக்கு.

இண்டைக்கு தலித் மாநாடு. நாளைக்கு வெள்ளாள மாநாடு. நாளைக்கு பிராமணி மாநாடு, பறையர், பள்ளன், அம்பட்டன் என்று ஒவ்வொருவரும் சாதி சொல்லித் தமிழினத்தைப் பிரிச்சுப் போடுங்கோ



வாழ்க பெரியாரிசம்

Anonymous said...

மிக முக்கியமான தேவையான பதிவு. பெரியாரின் கருத்துக்களுக்காக தமிழச்சியின் பதிவுகளைப் படிப்பதுண்டு. ஆனால் அவ்வப்போது தேவையில்லாத விவாதங்கள் அந்த பதிவின் தன்மையையே குலைக்கின்றது.

அவருக்குத்தான் தெரியும் எவ்வளவு மன அழுத்தம் இந்தப் பதிவால் என்று. இருந்தாலும் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டிய தருணம் இது. இனி அவர் தவறு செய்தால் அனைத்து பெரியார் வழிசெல்பவரும் இப்படியே என நினைக்கும் நிலை.

தவறான ஆயுதங்களை ( தாயைச் சாடுவது , தொழிலைக் கேவலப்படுத்துவது ) சில சமயம் மனக் கழிவுகளைக் காட்டிவிடுகின்றது. இனி செய்ய வேண்டியது அதை மறைப்பதே..மற்றவர்க்கு நியாயப்படுத்துவதோ அல்ல.. மனம் வருந்துவதும்..கழிவை சுத்தப்படுத்த தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ளவேண்டுமென்பதுமே. உறுதியைக்க் காட்டவேண்டிய நேரத்தில் (தவறான) உணர்வுகளைக் காட்டினாலும் திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறட்து மனமிருந்தால். பார்ப்போம்.

நன்றிகள்

Sri Rangan said...

//தமிழச்சி என்ன சொன்னாலும் இராயகரன் என்ன சொன்னாலும் சிறிரங்கன் என்ன எழுதினாலும் கொழுவி என்ன சொன்னாலும் ஈழப் போர் தன்பாட்டில் நடந்தே தீரும்- //



போர் நடப்பதா கண்ணா கஷ்டம்?அது நீங்க சொன்னாவென்ன செ(சொ)ல்லாட்டியென்ன நடக்கத்தானே செய்கிறது?கடந்த கால் நூற்றாண்டாய் இலங்கையில நடக்குதில்லையா?முடிந்ததா?இல்லையே!போருக்கு மூப்படைய மூப்படைய தலைமுறைகள் மாறியும் கொண்டு செல்வார்கள்-நடாத்திச் செல்வார்கள்(சுடலைக்கு?...),எங்கே(...) என்பதில்தாம் நாம் மாறுபடுகிறம்.

வந்தியத்தேவன் said...

//இண்டைக்கு தலித் மாநாடு. நாளைக்கு வெள்ளாள மாநாடு. நாளைக்கு பிராமணி மாநாடு, பறையர், பள்ளன், அம்பட்டன் என்று ஒவ்வொருவரும் சாதி சொல்லித் தமிழினத்தைப் பிரிச்சுப் போடுங்கோ//

நீங்களும் சாதிப் பெயரைச் சொல்கிறீர்கள் அனானி. ஜாதிகள் இல்லையடிபாப்பா.

Anonymous said...

தமிழச்சியின் கருத்துக்களை சுட்டிக்காட்டியது நல்லதொரு விடயம்.

ஒவ்வொருவருக்குள்ளும் சாதியம் கலாச்சாரமாக பழக்கவளக்கமாக சொல்லாடல்களாக வார்தைப்பிரயோக வடிவமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கு தமிழச்சி விதிவிலக்கல்ல. இது பன்னெடும் காலமாக மரபு வழியாக தொடர்வதால் உடனே மாற்றம் கண்டுவிடாது.

ஒருவரை இன்னசாதி என்று பிறர் சொல்லும் வரை அல்லது தன்னை இன்ன சாதி என்று ஒருவன் உணரும் வரை இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நேற்று தலித்தின் வாயில் மலத்தை திணத்தார்கள் தி மு க எனறு குமுதம் ரிப்போட்டரில் படித்தேன். இன்று தமிழச்சி தட்டுக்கழுவுபவன் என்று சொல்வதை படிக்கின்றேன்.

தலித் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிறிரங்கன் தமிழச்சியின் வலைப்பூவில் தான் ஒரு வெள்ளாளன் ஆனால் அந்த சாதியில் விபத்தாய் பிறந்து விட்டதாக சொல்கின்றார்

அவர் விரும்பியும் விரும்பாமலும் அவர் வெள்ளாளர் என்று கூறவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். இந்த நிலையை கடப்பது என்பது தான் சாதி என்ற கொடும் நோயில் இருந்து விடுபடுவதாகும். தாயகத்தில் நிர்ப்பந்தங்களை கடந்து தமிழர் என்று மக்கள் மாறியுள்ளனர். மேலும் மாறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் எதற்காக ஒரு புதிய அலகு உருவாக்குகின்றீர்கள்?

இரயாகரனாகட்டும் சிறிரங்கனாகட்டும் என்னும் எத்தனையோ புலியெதிர்பாளர்களாகட்டும் அவர்களிடம் இருந்து விடுபடவே அடிமட்ட மக்கள் போராடினார்கள். அவர்கள் அவர்களது சாதிய நிலையை கடந்து தமிழர் என்று ஒன்றிணைந்து போராட்டத்தில் ஒன்றிணைந்து நிற்கும் இந்த நேரத்தில் அவர்கள் குரல்களை பிரான்ஸ்ல் இருந்து கொண்டு எதிரொலிக்க முற்படுவதே அவர்களுக்கு எதிரான போக்கு மாறவில்லை என்பதை பறைசாற்றுகின்றது.

சிங்களம் இன்ன சாதி என்று பார்த்து கொல்வதில்லை. தமிழர் என்றே கொல்கின்றது. சாதியத்தை கடந்து தமிழர் போராடுகின்றனர். இந்த போராட்டத்தையே சாதிய நோயை அழிக்கும் காரணியாகவும் பயன்படுத்துகின்றனர். யார் மறுத்தாலும் போராட்ட நிலத்தின் யதார்தம் இதுதான். போராட்டத்தை எதிர்க்கும் உங்களிடம் சாதிய படிமங்கள் மறைந்து விட்டது என்று சொல்ல முடியாது. மாறாக அது வன்மமாக பிடிவாதமாக புலமைத்துவ போட்டியாக வாத திறமையாக வடிவெடுத்துள்ளது. இவைகளும் சாதியத்தின் தாக்க விழைவுகள் தான்.

ரவி said...

பொதுவாக ஈழத்து தமிழில் மொக்கை போடும் கொழுவி சீரியஸாக கேட்கும் கேள்விகள்...

நியாயம் பொதிந்தவையே...!!!!!

தமிழச்சி நேர்மையாக பதில் தருவார் என்றே நம்புகிறேன்...

(சீரியஸா பதிவு போட்டுட்டு அப்புறம் என்ன ஸ்மைலி...சுப் ரஹோ...!!!)

Anonymous said...

"தன்னைத் துருத்தி வெளிக்காட்டுதல்"

இதனோடு முற்றிலும் உடன்படுகிறேன்.

Anonymous said...

///ஆனால் புலிகள் பகிரங்கமாகச் சாதியத்துக்கெதிரான நிலைப்பாட்டை வெளியிடவில்லை.//
பல ஆலய உட்புகுதல்கள் புலிகளின் ஆதரவுடன் நடந்தனவே!

Osai Chella said...

innabaa, ivvalavu detailaa nee ezhuthi evvalavu naalaachu. avanga kobaththula konjam appadi ippadi thittittaa athai pooy perisu paduththriyee! aanaalum eelam parri nee irukkum thelivum enakkuth theriyum. angkulla saathiyam parri ezhuthavendum. summa kummiyadichukkittu neram pokkikinu irunth unnai ivvalavu thelivaa ezhutha vachathukku thamilachikku oru je! Unakkum thaan thambi! Keep writing!

Ayyanar Viswanath said...

நீங்கள் தமிழச்சியின் புகைப்படத்தை போடாமல் இதை பதிவித்ததிற்காக என் கண்டனங்கள் :)

Anonymous said...

yov ayyanaaru enna nadakkuthunnu mulusa ellathayum padiccup paaru. neeramketta neerathula ethayaccum olari maattikaatha

Anonymous said...

என்ன கொழுவி - தமிழச்சி உங்கள் கடிதத்திற்கு பதில் தராமல் தன்வழியில போறார்?

கொழுவி said...

//என்ன கொழுவி - தமிழச்சி உங்கள் கடிதத்திற்கு பதில் தராமல் தன்வழியில போறார்?//

ஐயனே அனானி
தமிழச்சி பதில் தர வேண்டுமென்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை.

சறுக்கல்கள் சாதாரணமானவைதான். ஆயினும் எந்த புள்ளிக்கெதிராக போராடுகிறோமோ கடைசியில் சில பல காரணங்களால் அந்தப் புள்ளியிலேயே சறுக்கி விழுந்து விடுகிறோம் என்ற துயர்மிகு உண்மையின் பாற்பட்டு விழிப்புணர்வு என்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல அது தனக்கும் சேர்த்துத்தான் என்பததுணர்ந்து அவர் தொடர்ந்து போராடட்டும். மனதின் மடிப்புக்களில் இருந்து அவரும் நானும் நாமும் எல்லோரும் சேர்ந்தே தெளிநிலையடைவோம்.

ஸ்ப்பா.... இதுக்கு மேலையும் என்னாலை சீரியசா பேச முடியாதுப்பா ராசா.. அப்பாலை சிறீரங்கன் எனக்களித்த வாழ்த்துப்பா வந்திருக்கு.. அங்க வாங்க

Ayyanar Viswanath said...

/yov ayyanaaru enna nadakkuthunnu mulusa ellathayum padiccup paaru. neeramketta neerathula ethayaccum olari maattikaatha/

அன்பு நண்பா
தமிழச்சியின் புகைப்படத்தை ஏன் போடவிலலை என்கிற என் கேள்வியில் பொதிந்திருக்கும் உண்மை என்னவெனில் இங்கே வெகு சூடாக கதைக்கப்படும் அவருக்கு புகைப்படங்களை வெளியிட்டுக்கொள்ளும் ஆர்வம்தான் மேலோங்கி இருக்கிறதே தவிர கருத்து ரீதியிலான தெளிவும் தன் சார்ந்த விழிப்பும் இல்லை.புரட்சி,பகுத்தறிவு,பெரியார் என்பவைகளை மலிந்த விளம்பரத்திற்கான மூலதனமாக மட்டுமே கொள்கிறார் என்பது வலையில் உலவும் சிந்திக்க தெரிந்த எவருக்கும் தெளிவாய் விளங்கும். இங்கே இவ்வளவு தீவிரமாய் கதைப்பதை காட்டிலும் அவர் புகைப்படத்தை போட்டிருந்தால் குறைந்த பட்சம் ஏதோ ஒன்றாவது முழுமையடைந்திருக்கும்.

வந்தியத்தேவன் said...

ஈழத்தமிழர்கள் பற்றி பதிவர்கள் தீவு,கொழுவி கவனத்திற்கு துருத்தி என்றால் என்ன?(http://thamilachi.blogspot.com/2007/10/blog-post_8368.html) என்ற‌ பதிவில் தமிழச்சி கூறிய வரிகள் இவை.

//உங்களுக்கு தான் படம் போட்டு எழுதும் அளவுக்கு உங்கள் நாட்டில் சுதந்திரம் இல்லை யார் யாருக்கோ பயந்துக் கொண்டு பொத்திக் கொண்டிருக்கிறீர்கள்."//

இத‌ற்க்கு நான் அளித்த‌ பின்னூட்ட‌ம். த‌மிழ‌ச்சி அத‌னை பிர‌சுரிக்க‌மாட்டார் என‌க் க‌ருதி இங்கே.

தமிழச்சி இதே பதிவில் நீங்கள் ஈழத்தமிழர்கள் முகம் காட்ட மறுப்பவர்கள் அவர்கள் துணிவில்லாமல் தமது படங்களை வலையில் போடுவதில்லை எனச் சாரம் கொண்ட ஒரு வரியினை எழுதியிருந்தீர்கள். அதனை ஏன் நீக்கி விட்டீர்கள்? நாம்(ஈழத்தமிழர்கள் எந்த நிலையில் ஈழத்தில் வாழ்கின்றோம் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? இல்லை நீங்களும் கல்கி துக்ளக் ஹிந்து படித்துவிட்டு சும்மா போலியாக ஈழத்தமிழர்களை ஆதரிக்கின்றீர்களா?
உங்கள் பெயர் பிரபலமடைய எம்மை வம்புச் சண்டைக்கு இழுக்காதீர்கள். நாம் யுத்தம் என்ற அரக்கனாலும் ஏனைய பலராலும் உயிர்கள் உடைமைகள் இழந்து வாழ்பவர்கள். நீங்களோ சொகுசாக வாழ்ந்துகொண்டு எம்மைச் சீண்டிப்பார்க்கிறீர்கள்.

தயவு செய்து இப்படியான கீழ்த்தரமான வரிகளை எழுதாதீர்கள். யாரு ஒருவன் உங்களிடம் வம்பு செய்தால் உடனே முழு ஈழத்தவர்களையும் கேலி செய்யாதீர்கள். உங்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுது நீங்கள் வித்தியாசமானவர் என நினைத்தோம் ஆனால் ஒரு வரியின் மூலம் நீங்களும் சராசரிப் பெண் தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

இதனை மட்டுறுத்தாமல் வெளியிடுவீர்கள் என நினைக்கின்றேன்.

Anonymous said...

தமிழச்சி, சபேசன் மற்றும் அனைவருக்கும்

அங்கே தினமும் 10ற்குக் குறையாமல் அப்பாவிப் பொதுமக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இங்கே குளிர் தேசங்களில் இருந்து கும்மியடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=a7031000fd987a3c9f87

ஒரு தடவை இந்த வீடியோவைப் பாருங்கள்.

தமிழச்சி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். பெரியாரின் கருத்துக்கள் நேரடியாக ஈழத்திற்கு பொருந்தாதவை. பெரியாரின் களம் வேறு.

அதிகார பூர்வமாக பாடசாலைச் சான்றிதழ்களிலும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களிலும் சாதி தாண்டவமாடும் ஊர் உங்களது தமிழ்நாடு.

ஈழத்தில் அப்படியல்ல. அங்கே அது அதிகார பூர்வமாக அன்றி மக்கள் மனங்களில் எண்ணங்களாக இருக்கிறது. அங்கே பார்ப்பனிய ஆதிக்கம் கிடையாது. அதாவது அங்கே பிராமணர்கள் ஆதிக்க சக்திகள் கிடையாது.

ஈழத்தமிழர்களுக்குத் தேவை கருத்தியல் ரீதியான விழிப்பூட்டல். எவருடைய ஸ்டன்ட் show ம் ஈழத்தமிழருக்குத் தேவையற்றது.

ஒரு உதாரணத்திற்கு ஈழத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட ஒருவனிடம் பார்ப்பானையும் பாம்பையும் முதலில் கண்டால் பார்ப்பானை அடி என பெரியார் சொன்னார் எனில் அவன் ஐய்யய்யோ ஐயர் பாவம். அவரை எதுக்கு அடிக்கணும் என்றுதான் கேட்பான். ஏனெனில் ஏலவே சொன்னது போல அங்கு பிராமணிய ஆதிக்கம் இல்லை.

இதை ஏன் நான் சொல்கிறேன் எனில் பெரியாரின் எல்லா கருத்துக்களும் ஈழத்திற்கு பொருந்தாது.

சமூகத்தின் சகல மக்களையும் சரிசமானமாகப் பார்த்து சகலருக்கும் சகல வசதிகளையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி அதனூடாக தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்ற நிலையை அகற்றுவதனூடாகவே ஈழத்தில் சாதியை இல்லாதொழிக்க முடியும். அதனை அங்கே புலிகள் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

சாதி தொடர்பான ஏற்றத்தாழ்வுகளை இன்னமும் சான்றிதழ்களிலும் பாடசாலைகளிலும் பேணிக்கொண்டு இருக்கின்ற தமிழ்நாட்டில் உங்களுடைய பரப்புரைகள் தேவைப்படலாம்.

உங்கள் இயக்கத்தில் உள்ள மாசிலா ஒருதடவை சொல்லியிருந்தார். அதாவது இனி இலங்கைத் தமிழர் புதுவைத் தமிழர் என பிரித்து நோக்க வேண்டியிருக்குமென.

அதை தான் நானும் சொல்கிறேன். தயவு செய்து உங்கள் புரட்சிகளை புதுவைத் தமிழர்களுக்கு மட்டும் செய்து கொள்ளுங்கள்.

எங்கள் களம் வேறு. தளம் வேறு. நிலம் வேறு. நமக்கான முறையில் நமக்கான பிரச்சனையை நாமே தீர்த்துக் கொள்கிறோம். நன்றி

Anonymous said...

அதே அதே பூசாரி

ஈழத்தில் இரட்டைத் டம்ளர் முறையில்லை
ஈழத்து பாடசாலைகளில் சாதி கேட்கப்படுவதில்லை
ஈழத்து birth certificate இல் சாதி குறிப்பிடப்படுவதில்லை
ஈழத்தில் யாரையும் மலம் தின்ன வைப்பதில்லை
ஈழத்தில் தமிழில் பூசை செய்வதை எவனும் தடுத்ததில்லை

இதெல்லாம் எங்கு நடக்கிறதோ அங்கேதான் பெரியார் தேவைப்படுகிறார்.

ஈழத்து மனித மனங்களில் படிந்து கிடக்கிற சாதியை சாதாரண விழிப்பூட்டலால் தகர்த்து விடலாம். அதற்கு சாதாரண பகுத்தறிவே போதும். பெரியாரெல்லாம் தேவையில்லை.

Anonymous said...

கருவறைக்குள் புகுந்து போராட அழைப்பு விடுகின்றார்கள் ஆனால் எனக்கு ஓன்று மட்டும் விளங்கவில்லை, கருவறைக்குள் புகுந்து போராடினால் சாதி விட்டுப்போய்விடுமா? சாதியை ஓழிக்க ஓரே வழி educationதான். These typs of stunts are good for publicity but they are rather useless in practical term. Another point is that, they have right to their opinion (people who are talking about பகுத்தறிவு) as long as they are not disturbing the public.

Bharathy said...

ஆமாம்..உண்மை ..
பகுத்தறிவு தேவயே இல்லை கடதாசியில் எழுதி வைத்த"மாவீரர் உரையை"வாய்பிளந்து அக மகிழ்வுடன் கேட்டு "எங்கட தலைவர் எல்லாம் வெல்வார்" என்பதை தாண்டி எங்களுக்கு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

வந்தியத்தேவன் said...

பூசாரி நீங்கள் சொல்வதுபோல் தமிழச்சி எம் பிரச்சனைக்குள் தனக்கு பப்ளிசிட்டி தேட முயல்கிறார்.

மு.சபேசன் அவர்களே! உங்களைப் போன்ற துரோகிகளும் தமிழ்சோலை போன்ற ஓர் அமைப்பும் இருக்கும் வரை எல்.டி.டி.ஈ. இயக்கம் நேர்மையாக செயல்பட முடியாது!

என சொல்வது இவரின் அறியாமையையும் பைத்தியக்காரத்தனத்தையும் மட்டும் காட்டுகின்றது. என்ன செய்வது தான் புகழ் அடையவேண்டும் என்றால் புலிகளை எதிர்க்கவேண்டும் என்ற ஹிந்துராம் சோ மாலன் போன்ற பார்ப்பணர்களின் மன‍னிலையில் தான் தமிழச்சியும் இருக்கின்றார். இவருக்கு நாம் அனுபவிக்கும் வேதனைகள் ஏதும் தெரியாது.

சில பிரபலங்களின் அறிமுகம் இருந்தால் தான் பெரிய ஆள் என்ற மனோபாவம் இவருக்கு.

அதே நேரத்தில் சாதிப் பிரச்சனை ஈழத்தில் எப்படி இருக்கிறது என்ற விடயங்களும் இவருக்கு தெரியாது, இவரின் சைகோதனமான பதிவுகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே எம்மை இவர் போன்ற பைத்தியங்களிடம் இருந்து காக்கச் செய்யும்.

Anonymous said...

நன்பர்களே!

வி.சபேசன் எனும் பெயர் வலிந்தே மு.சபேசன் எனப் பாவிக்கப்படுகிறதா? அப்படியானால் அதற்கு எங்கள் பகுதியில் அர்த்தம் வேறு. தெரியும்தானே ?

நந்தவனத்து ஆண்டி said...

//தமிழிச்சி நிறைய வம்புதும்புகளில் மாட்டி குழம்பியுள்ளார். குட்டையை மேலும் குழப்பாமலிருப்பது நல்லது. தமிழிச்சி உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே பால்நிலை சார்ந்து தவறான வார்த்தைப் பிரயோகங்கள் செய்திருக்கிறார். ஈழத்துச் சாதியமைப்புத் தொடர்பில் அவருக்குப் போதிய விளக்கம் யாராவது பதிவாகக் கொடுப்பது நல்லது. ஆதாரங்கள் இல்லாமல் இணையப்புரட்சித் தோழர்களின் கருத்துக்களை மட்டும் நம்புவது தமிழிச்சியின் பிழைமட்டுமல்ல. ஈழத்துச் சாதியமைப்புத் தொடர்பில் தமிழகத்தவர் விளங்கிக் கொள்ளவில்லையென மீண்டும் மீண்டும் கூப்பாடுபோடும்நாம் ஏதாவது கட்டுரைகளை எழுதுவது நல்லது//

//பூசாரி நீங்கள் சொல்வதுபோல் தமிழச்சி எம் பிரச்சனைக்குள் தனக்கு பப்ளிசிட்டி தேட முயல்கிறார். //

வி.சபேசன் said...

வி. சபேசன் என்ற பெயரை தமிழச்சி தொடர்ந்து மு. சபேசன் என்றுதான் எழுதிக் கொண்டுவருகிறார். அவர் வேண்டும் என்று எழுதுகிறார் என்றுதான் நானும் நினைக்கிறேன். அவர் அப்படி எழுதுவதன் உடாக ஏதாவது ஒரு வகையில் திருப்தியை பெறுகிறார் என்றால், அப்படியே தொடர்ந்து எழுதட்டும்.

ஆனால் எனக்கு இந்த மு. சபேசனுக்கு என்ன உள்அர்த்தம் என்று புரியவில்லை. யாராவது விளக்குவீர்களா?

Anonymous said...

//ஈழத்தில் சாதி ஒழிந்துவிட்டது என்கிறீர்களே! முடிந்தால் நீங்கள் ஆதாரத்துடன் வெளியிடுங்கள். அதுவும் 10 வருடங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.//

உங்களுக்கு எந்தவிதமான அடிப்படை அறி தகுதியும் இல்லாத நிலையிலும் பின்னூட்டமிட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு காலம் என்னைத் தள்ளியிருக்கிறது.

முதலில்
ஈழத்து தலீத் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பற்றியும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பது.
இவ்வாறு சொன்னது யார். ? நீங்கள்தான் உங்கள் அறிக்கையில் சொல்லியிருக்கிறீர்கள்.

அதனால் நீங்கள்தான் அங்குள்ள கொடுமைகள் குறித்து எழுத வேண்டும்.

ஈழத்தில் சாதியில்லையென்று யார் சொன்னது ? அங்கே அது இருந்தது. தமிழ்நாட்டினதைப் போலவே இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நாம் வெளியே வந்துகொண்டிருக்கிறோம். மாற்றங்கள் எங்கள் மனங்களில் நடந்துகொண்டிருக்கின்றன.

யாரும் எங்களுக்கு உங்களைப் போல பிலிம் காட்டி மாற்ற வில்லை. நாமாக மாறுகிறோம். இன்னமும் கொஞ்சம் மீதி இருக்கிறதுதான். அதனையும் மாற்றிவிடுவோம். அதற்கு நீங்கள் தேவையில்லை.

சரி.. சாதி ஒழிந்ததற்கு நீங்கள் கேட்கும் ஆதாரங்களை நான் தருகிறேன்.

ஈழத்தில் சாதி பிறப்புசான்றிதழில் இல்லை
ஈழத்தில் சாதி பாடசாலைகளில் கேட்கப்படுவதில்லை

ஈழத்தில் இரட்டை தமிழர் முறை கிடையாது.

ஈழத்தில் சாதி சங்கங்களோ சாதி கட்சிகளோ கிடையாது.

சரி. இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

முடிந்தால் அதற்குரிய தைரியம் இருந்தால் எங்கள் தமிழில் ஏலுமெண்டால் சாதி ரீதியாக அங்கே மக்களைக் கொடுமை செய்யும் 3 உதாரணங்கள் தர முடியுமா தமிழச்சி?

ஒருபோதும் உங்களால் முடியாது.
உங்களால் பதில் சொல்ல முடியாத உங்களைத் திணறடிக்கும் பின்னூட்டங்களை நீங்கள் அனுமதிப்பதில்லையாகையால் இப்பின்னூட்டம் வேறொரு பதிவிலும் வெளியிடப்படும்.

அடுத்த பதிவு டைப் பண்ணுவதற்கு முதல் முடிந்தால் தற்போது ஈழத்தில் சாதி அடிப்படையில் மக்களை கொடுமைப்படுத்தும் உதாரணங்களைத் தருவீரா ?

ஏளனத்துடன்
இவன்
ஈழத்து தலித்

Anonymous said...

//ஏளனத்துடன் கேள்வி கேட்கின்றீர்களே உங்களை ஏன் ஈழத்து தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்?//

அப்பத்தானே சந்தையில விலை போகலாம் :) (சத்தியமாக இப் பதில் உங்களுக்கு புரியாதென்பது எனக்குத் தெரியும் )

ஒடுக்கப்பட்டவர்கள் தம்மைத் தலித் என அடையாளப் படுத்திக் கொள்வதில் எனக்கொரு பிரச்சனையும் கிடையாது. மாநாடு நடத்துவதிலும் எந்தவித பிரச்சனையும் கிடையாது.

நான் ஈழத்து தலித்தேதான்.

அதற்காக உங்கள் பிரபல்யத்திற்காக எங்கள் தலைகளில் ஏறிநின்று குதிரை ஓடாதீர்கள். உங்கள மாதிரி காராத்தே பிலிம் போடுவது அறிக்கை விடுவது ஆக்ரோசமாக பேசுவது நோட்டீஸ் அடித்து கொடுப்பது எல்லாமே உங்களுடைய நாட்டினி்ன் கேவலம் கெட்ட அரசியல் கலாசாரத்தின் தொடர்ச்சி.

நமக்கு அதெல்லாம் பழக்கமில்லை.

அதெல்லாம் கிடக்கட்டும்
கேள்விகளுக்குப் பதில்கள்தான் வேண்டும். மறுகேள்விகள் அல்ல. அப்படிப் பார்த்தாலும் உங்கள் கேள்விக்கான பதில்களைச் சொல்லிவிட்டேன்.

எனது கேள்விக்கான பதிலைச் சொல்லுங்கள். ஈழத்தில் தற்போது சாதி ரீதியாக மக்கள் கொடுமைப்படுத்தப்படும் உதாரணங்கள் சொல்லுங்கள்.

அதிலும் ஈழத்து தலித்துக்களுக்காக போராடும் தலைவிக்கு அவை கட்டாயமாகத் தெரிய வேணும்.

Anonymous said...

திங்கட்கிழமை எனக்கு பெண்கள் மாநாடு இருக்கு.

ஆராவது என்னை பின்தூற்றி எழுதினால் நான் அதை மாநாட்டில் ஆதாரமாக சமர்ப்பித்து
என்னை வெளிச்சப்படுத்துவேன் .

தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

பண்டாரம்