கொழுவிக்கு சிறிரங்கன் அண்ணா எழுதிய வாழ்த்துப் பாவொன்றை கடந்த பதிவில் இட்டிருந்தேன். அதுதொடர்பாக ஒரு தெளிவிப்பு அறிவிப்பும், அவரோடு ஒப்பிட்டு வேறு இரண்டொருவரின் "நன்னடத்தை" பற்றியும் 'உரையாடும்' வண்ணம் இவ்விடுகை செய்யப்பட்டுள்ளது.
முதலில் தெளிவிப்பு அறிவிப்பு.
அந்த வாழ்த்துப்பாவை நான் வெளியிட்டதற்கும், தமிழச்சி கொளத்தூர் மணி ஐயாவின் அறிக்கையை வெளியிட்டதற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன்.
இனிமேலும் 'அது' மாதிரி, கொண்டோடியிடமிருந்து கொழுவிக்கு ஆதரவு அறிக்கையோ கொக்கோ கோலாவிடமிருந்து கோள்மூட்டிப் பதிகமோ வாங்கிப் பதிவிட மாட்டேனென்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கிறேன். (கிட்டத்தட்ட டோண்டுசார் செய்துகொண்டிருந்த விளையாட்டுப் போலக் கிடக்கிறதே இப்படி ஆதரவு அறிக்கை பிரசுரிப்பது? என்று மனத்தில் கேள்வி வந்தாலும் கேட்கமாட்டோம். காரணம் வெளியுறவுக்கொள்கை)
தேவையற்ற சண்டையில் கொழுவியை இறக்கிவிட விசமிகள் சிலர் செய்யும் சதிவேலைகளை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். பிறநாட்டு அரசியலில் தலைபோடுவதில்லையென காலங்காலமாகக் கொழுவி கடைப்பிடித்து வரும் வெளியுறவுக்கொள்கை தான் இப்போதுமுள்ளதென்பதறிக.
++++++++++++++++++++++++++++++++++++++
இனி, வேறிருவரின் "நன்னடத்தை" பற்றியது.
இரண்டு மாதங்களின் முன்னால் வலைப்பதிவுகளில் ஒரு போக்கு நிலவியது. இன்னார் இருநூறாம் பதிவைக் கடந்துவிட்டார், இன்னார் இரண்டு வருடங்களை நிறைவு செய்துவிட்டார் எனக் கொண்டாட்டங்கள் நடந்தன. அவ்வலைப்பதிவரின் இடுகைகளை இன்னொருவர் 'ஆகா ஓகோ' வெனப் புகழ்ந்து "விமர்சிப்பார்".
அந்தக் காலகட்டத்தில்தான் கொழுவியின் வலைப்பதிவும் இரண்டுவருடங்களை நிறைவு செய்தது. இரண்டாம் வருட நிறைவு தொடர்பாகவும், அந்நாளில் எழுதப்படும் ஓரிடுகை தொடர்பாகவும் ஓர் அறிவிப்புக்கூட கொழுவியால் வெளியிடப்பட்டுமிருந்தது.
அந்த நேரத்துப் போக்குக்கு ஏற்றாற்போல கொழுவியை "விமர்சிக்கும்படி" இரண்டு தலைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எழுத்துலகில் புத்தகம் போட்ட அந்தத் தலைகளும் தலைக்கனமில்லாமல்
'அதுக்கென்ன! அந்தமாதிரி எழுதித்தாறம்'
என்று உறுதிமொழியும் அளித்திருந்தனர்.
எங்கட ஊர்ப்பக்கம் ஒண்டு சொல்லுவினம்.
குரங்கிட்ட மருந்துக்கு மூத்திரம் கேட்டா கொப்புக்கொப்பாத் தாவுவாம் எண்டு (அல்லது இதை மாதிரி ஏதோ ஒண்டு).
அது மாதிரிப் போச்சுது கொழுவியின்ர கதை. தாறம் தாறம் எண்டவங்களை பிறகு காணவேயில்லை.
(உந்தச் சொலவடை ஒரு 'இது'க்காகக் சொன்னது. பிறகு, அவையள் ரெண்டு பேரையும் கொழுவி குரங்கு எண்டு சொன்னதெண்டோ அவையளின்ர படைப்புக்களை கொழுவி வேறயொண்டுக்கு ஒப்பிட்டதெண்டோ வரிஞ்சுகட்டிக் கொண்டு வரக்கூடாது)
இப்பிடியே இந்த ரெண்டு தலைகளையும் நம்பி கொழுவியின்ர ரெண்டாம் வருசக் கொண்டாட்டம் திண்டாட்டமாயே போயிட்டுது. அது நடக்கவேயில்லை.
இப்பிடி விண்ணப்பம் விடுக்கப்பட்டு, அதுவும் தாங்கள் எழுதித் தருகிறோம் (அதுக்குள்ள, 'நக்கல் நளினங்கள் இருக்கும் தம்பி கண்டுகொள்ளாதையும்' எண்டு ஒரு முன்னறிவிப்பு வேற தந்திருந்தார் ஒருத்தர்) என்று ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையிலும், தந்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாமல் வலையாடும் அந்த இருவரும் இருக்கும் அதே வலைப்பதிவுச்சூழலில், கேட்காமலே பாமாலை கோர்த்துப் பரிசளிக்கும் சிறிரங்கன் போன்ற வள்ளலார் (நான் 'வாடிய பயிரைக் கண்டு வாடிய'வரைச் சொல்லவில்லை, சிறிரங்கன் வாடக்கூடியவர் என்ற போதும்கூட.) நிறைந்திருப்பது ஒரு முரண்.
இப்படிப்பட்டவர்கள் பெருக வேண்டும். இப்படிப்பட்ட பாமாலைகள் அதிகம் கோர்க்கப்பட வேண்டும். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும்.
"இன்ஷா அல்லா" (இதுக்கு என்ன பொருளெண்டு தெரியாது. ஆனா இப்பிடிப் பாவிக்கவேண்டிய கட்டாயம் ஒண்டு இருக்கிறதாக நினைக்கிறன். அவ்வளவுதான்.)
++++++++++++++++++++++++++++++++++++++
பின்குறிப்பு1:
சிறிரங்கனும் வள்ளலார் போல வாடக்கூடியவர் (கவனிக்க: பாடக்கூடியவர் என்று சொல்லவில்லை, அவர் பாடக்கூடியவர் என்ற போதும்கூட) என்று சொல்லப்பட்டதன் மூலம் சிறிரங்கன் அண்ணன் பாமாலையில் வைத்த ஐஸுக்கு பதில் ஐஸ் வைக்கப்பட்டாயிற்று என்று ஒரு குஞ்சும் நின்று கத்த ஏலாது.
பின்குறிப்பு2:
சிறிரங்கன் வள்ளலார் போலப் பாடக்கூடியவர் என்று பின்குறிப்பு ஒன்றில் கொழுவி சொன்னதன்மூலம், கொழுவிக்கு அவர் வைத்த ஐஸ் மீண்டும் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதென எந்தப் புடுங்கியும் எழுத ஏலாது.
பின்குறிப்பு3:
பின்குறிப்பு இரண்டில் சொல்லப்பட்டது போல் ஐஸ் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதால், சிறிரங்கன் கொழுவிமீது இன்னொரு புகழ்மாலை புனைந்தளித்துச் சமன்செய்யக் கடப்பாடுடையவர் என எந்தப் புறம்போக்கும் சொல்ல முடியாது.
பின்குறிப்புக்கள் அவ்வப்போது தொடரும் சங்கிலியாக.
++++++++++++++++++++++++++++++++++++++
முத்திரைகள்: வள்ளலோசிறிபாமோபியா, ஆதரவறிக்கோமோபியா, பெயரிடிதசேமிழோபியா
15 comments:
நீர் உப்பிடிப்பட்ட பாமாலை தாறமெண்டு சொல்லிப்போட்டு வாழை நார்கூடத் தராத வங்களிட்ட இனி வாக்கு மட்டும் வாங்கிப்போட்டு விடாதையும்; வாக்குமூலமே வாங்கிப்போட்டு விடோணும். அப்பதான் கேப்பாங்கள். ஏனப்பு தாறெண்டியள் இன்னும் தரயில்லையே எண்டு கேட்டால், வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; பாட்டியார் பல்செற் துலைஞ்ச பன்னொரெண்டாம் நாளென்பார். விடக்கூடாது உவங்களை, கொழுவி.
உப்பிடியான ஆக்களிட்டை எப்பிடி எழுதி வாங்கிறதெண்டதுக்கு ஒரு கதை சொல்லுறன் கேளும்.
எங்கட ஊர்ப்பக்கம் ஒரு விதானை. எழுதித்தரவேண்டின ஆள்விபதரத்துக்கே மேசைக்குக் கீழை வையுமெண்டு நிக்கிற ... இல்லை, நிண்ட ஆள். என்னோட படிச்ச பொடியன் ஒருவன் நேவிகுள்ளை சிவிலியன் வேலையில சேர்றதுக்குப் போய், ஏரியாவிதானையெண்டு, 'அவன் அவற்றை விதானைப்பகுதிக்குள்ளைதான் இருக்கிறான். நல்லவன், வல்லவன்; ஒரு சோலிசுரட்டு, அடிதடிக்குப் போகாதவன்' எண்டு எழுதித் தரக்கேட்டிருக்கிறான். விதானை குடுக்கவேண்டின கடமை. விதானை "தாறன் தம்பி; வாற கிழமை வந்து எடுத்துப் போம்" எண்டு அனுப்பிப்போட்டார். பொடியன் வந்து போட்டு, அடுத்தகிழமை போக, அதுக்கடுத்த கிழமை வரச்சொல்லிப்போட்டார். அங்கை எழுதவெண்டு புதுசா ஒரு பாரதமுமில்லை. இருக்கிற கடித டெம்பிள்ளேட்டில பெயரை, விலாசத்தை மாத்தி டைப் அடிச்சுப்போட்டுக் குடுக்கிறதுதான். ஆனா, உப்பிடி வாரும் போமெண்டு அலைக்கழிச்சாத்தான், வெள்ளன கரெக்டர் சேட்டுவிக்கட்டோ, லெட்டரோ வந்து சேரட்டுமெண்டு ஆக்கள் கீழால ஒண்டை ரெண்டை வெட்டுவினம் எண்டு விதானைக்கு அனுபவம். மூண்டு தரக்காப் பொடியன் போய்வந்துபோய்வந்துபோய்வந்து வெறுத்துப்போனான்; நாலாம் தரம் போக, விதானை அந்த மாதிரியே சொல்லி, கொஞ்சம் தள்ளவேணும் எண்டதையும் சாடைமாடையா சம்திங் சம்திங்கிங் வேணுமெண்டும் சொல்ல, பொடி ஆத்திரத்தில, சுவத்தோட விதானைய அமத்தி வச்சு, நோதிங்கிங்கில மெனிதிங்ஸ் விதானைரம்செட் ஸோலோவா ஐஞ்சு நிமிசம் தனியாவர்த்தனம் வாசிச்சுப்போட்டுது. ஆவர்த்தனம் முடிஞ்ச கையோட, விதானை மூச்சுப்பேச்சில்லாமல், "இவன் என்ரை விதானைப்பகுதிக்குள்ளைதான் இருக்கிறான். நல்லவன், வல்லவன்; ஒரு சோலிசுரட்டு, அடிதடிக்குப் போகாதவன்" எண்டு எழுதிக்குடுத்துப்போட்டுது. பொடியன் வாங்கிக்கொண்டுபோய்ட்டான்.
உந்தமாதிரித்தான் உந்தக் கேசுகளிட்டை நீர் வாக்குமூலம் வாங்கவேணும்; வாய்மூலமில்லை, கண்டீரோ?
கொழுவியை கண்டு கொண்டாடியாட
ஷ்ரேயாவை கண்டு சிறிரங்கதார் ஆட
உல்லாசம் பொங்கும் இரண்டாம் வருடம்
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
கொழுவும் நேரமடா... தம்பி பின
தழுவும் நேரமடா...
பதிவில் ஒண்ணே ஒண்ணு நக்கலில்லாமல் தாடா
தமிழ்மணத்தில் விளையாடும் கலையே நீ வாடா
உன்னை வாழ்த்தி எழுதாத
குரங்கு ஜென்மங்கள் வாழ்ந்தாலென்ன வீழ்ந்தாலென்ன
த்ரிஷாவை சைட்டடிக்கும் ரெமோவாக
வளர்ந்தாலே போதுமடா.. தம்பி நீ
ரசிகர் மன்றம் வைத்து பாலாபிசேகம் செய்தாலே போதுமடா
சித்திரப் பூப்போலே சிதறும் நையாண்டி சைட் டிஷ்ஸே
அண்ணி வீட்டுக்குள் இருக்கையில் மட்டுமேன் பூனையைப்போல பதுங்குகிறாய்
பப்பிலை நீ ஓடித்திரியும் நெப்போலியன் அரக்கு
அங்கேயும் முட்டியோடு கள்ளுத் தந்தால் தான் குடிப்பேன் என்பது பிலிமு
முகமோ ஆப்பாயில் ஆம்லெட்டோ இது என்ன கோலம்
மின்னொளி வீசும் உன் மப்பு கண்டால்
உன் ஆசை மாமி வீட்டு அல்ஷேசன் நாயும் ஓடுமடா - தம்பி அலறி
ஏழு கடல் தாண்டி ஓடுமடா
இலட்சினைகள்: உல்டா, உஜாலா,கொழுவி கொழுக்கட்டை கொண்டோடி பினாட்டு
தம்பி கொழுவி, உங்களை வாழ்த்தி எழுதாத குரங்கு ஜென்மங்களை நினைத்து கண்ணீர் உகுக்க வேண்டாம். உங்கள் தீவிர இர்சிகையான் இந்த அன்பு அக்கா வடித்த பாமாலையை பனையோலையாக எண்ணி கள்ளுக்குடிக்காமல் தயவு செய்து பிரசுரிப்பீர்களா?
இவள்
மெல்போர்ண் மலருமல்ல சுவிஸ் சாக்லேட்டுமல்ல, அமெரிக்க அஞ்சலினா ஜூலியுமல்ல
புத்தகம் போட்டவை இருக்கட்டும் இங்கை ஒருத்தர் புத்தகம் இந்தா வருது உந்தா வருது எண்டு பேய்க் காட்டுறார் அவரை என்ன செய்யிறது?
கொழுவி,
இன்னும் ஒரு இரண்டு (வருடம் ) பதிவிடும்..
அது வந்து பழக்க தோசத்திலே வந்துட்டுது. இன்னும் ஒர் நூறாண்டு இரும் என்றோ
இன்னும் ஒரு நூறாண்டு இரும்பும் என்றோ வரும் தமிழ்மணத்திலே எங்கோ வாசிச்சு மந்திலே ஒட்டிகிச்சு கண்டியளோ! :-))))))))))
//கொழுவியை கண்டு கொண்டாடியாட
ஷ்ரேயாவை கண்டு சிறிரங்கதார் ஆட
உல்லாசம் பொங்கும் இரண்டாம் வருடம்
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
கொழுவும் நேரமடா... தம்பி பின
தழுவும் நேரமடா...//
இவளோ என் எவளோ
ஒரு"ட்"போட்டாலென்ன குறைந்தா போவீர்?
ஆவும் டவும் "ட் " உட்கொண்டால் ஆகும் அமுதம்
பாவிகள் தோசம் கலையுமெனுங்
காவடியெடுப்புக்குள் ஒரேயொரு"ட்"வால் மோட்சம்!
பாவ(வா)தை(டை)கள் தரத்தக்க பாக்கியம்
சோகச் சுவட்டிலும் செ(சொ)ல் நேர்த்தி சுகமதிகம்
எனதாய்ய கலைத்துவங்களைக் கடப்பதற்கும்
சின்னதாய்ச் செய்த பெ(பொ)ன் முறுவலோ மௌவல்
வவ்வாலாய்த் தொங்கும் எனதுடலுக்கு...
ஓவ்... என்னே எனதுனது?
"எனதெனச் சிந்தித்தலால் மற்று
இவ்வுடம்பு(வம்பு) இன்பத்துக்கு(...) ஆமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போலச்
சிறியவும் முத்தவும்(நாத்தவம் நீக்கி) ஆகி
நுனைய(நனையவல்ல) புழுக்குலம் தம்மால்
நுகரவும் வாழவும் பட்ட
இனைய(இணைய)உடம்பினைப் பாவி(மேவி)
யான்எனது(ஷ்ரேயா) என்னால் ஆமோ?"
சொன்னால் ஆகும்
ஏதிர்-பால் ஆகும்
தவிப்-பால் ஆகும்
தாகத்தால் ஆகும்
தூக்கத்தால் ஆகும்
துடி-பால் ஆகும்
நெடியவிடைச் சேற்றில் புதையும் நெஞ்சால் ஆகும்
போடுங்கோ "இவள்"ட்'க்கொரு புள்ளடி!
//யான்எனது(ஷ்ரேயா) என்னால் ஆமோ?"
சொன்னால் ஆகும்//
அவாவைத் தெரியாதோ ? சிவாஜி படத்தில ஆம்பல் ஆம்பல் எண்டு ஆடினாவே அவாதான். அதுகிடக்கட்டும்
பேய்த்தண்ணியோ
ஸ்ரீரங்கத்தார், உமக்கும் எமக்கும் எப்ப அடுத்தமுறை வீட்டில வயர் பிடுங்கப்படுமோ தெரியேல்லை. பிடுங்கினாத்தான் பொடியள் கொஞ்சம் உருப்படியா வேலை பாப்பாங்களெண்டு நினைக்கிறன்.
பாவம் ஆவுக்கும் இடவுக்கும் இடையிலை இட்டுப்போட்டுச் சொல்லிக் குடுத்துக் கெடுக்கிறியள். தயவு செய்து உப்பிடி ஆ(ட்)டமல் விடுங்கோ சின்னப்பொடியள். சரியில்லை. வேணாம்.
//உந்தச் சொலவடை ஒரு 'இது'க்காகக் சொன்னது. பிறகு, அவையள் ரெண்டு பேரையும் கொழுவி குரங்கு எண்டு சொன்னதெண்டோ அவையளின்ர படைப்புக்களை கொழுவி வேறயொண்டுக்கு ஒப்பிட்டதெண்டோ வரிஞ்சுகட்டிக் கொண்டு வரக்கூடாது//
அந்த வேறயொண்டைக்கூட "மூத்திரம்" எண்டு சொல்ல முடியாதபடி நீங்கள் பயந்து நடுங்கிச் செத்துக்கொண்டிருக்கும் நிலைதான் புலத்தில் இருக்கிறது.
இதற்கெல்லாம் பாசிசம் தான் காரணம்.
//ஈழநாதன்(Eelanathan) said…
புத்தகம் போட்டவை இருக்கட்டும் இங்கை ஒருத்தர் புத்தகம் இந்தா வருது உந்தா வருது எண்டு பேய்க் காட்டுறார் அவரை என்ன செய்யிறது?//
அப்ப நான் சொன்ன தலை இன்னும் புத்தகம் போடவேயில்லையா?
மற்றத் தலையும் எனக்குப் பாவெழுதித்தாறன் எண்டபிறகுதான் புத்தகம் போட்டதென்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
அதுசரி ஈழநாதத்தார், நீங்கள் எந்த ஈழநாதன்? சிங்கைச் சிங்கமொன்று இருந்தது உதே பேரில். ம்... அதெல்லாம் ஒரு காலம்.
மற்றாக்களுக்கு பிறகு பதிலளிக்கப்படும்.
(கொழுவியின் இந்த இடுகையில் வழமையான கொழுவித்தன்மையில்லை என்பது புரிகிறது. வழமையான கொழவியாகவே எழுதித் தொலைத்திருக்கலாம் ;-(()
//ஓரிடுகை
ஓர் அறிவிப்பு//
அண்ணே... கொண்டையை மறைக்காமல்... எழுதிப்போட்டியள் போல...
ஹிஹிஹி...
//பெயரிடிதசேமிழோபியா//
இவையள்தான் அந்தத் தலைகளா?
கொழுவியும் சிறிரங்கனும்
TOM & JERRY யும்
கண்ணா பன்னிங்க தான் பக்கம் பக்கமாக பதிவு போடும் சிங்கம் சிங்கிளா ஒரு பின்னூட்டம் மட்டும் போடும்.ஹா ஹா ஹா(சே சிரிக்கிறது கூட வட மொழியில் தான் சிரிக்கவேண்டியிருக்கு கா கா கா என்று தமிழிலை சிரிச்சா அர்த்தமே மாறிப்போகுமே)
//ஸ்ரீரங்கத்தார், உமக்கும் எமக்கும் எப்ப அடுத்தமுறை வீட்டில வயர் பிடுங்கப்படுமோ தெரியேல்லை. பிடுங்கினாத்தான் பொடியள் கொஞ்சம் உருப்படியா வேலை பாப்பாங்களெண்டு நினைக்கிறன்.
பாவம் ஆவுக்கும் இடவுக்கும் இடையிலை இட்டுப்போட்டுச் சொல்லிக் குடுத்துக் கெடுக்கிறியள். தயவு செய்து உப்பிடி ஆ(ட்)டமல் விடுங்கோ சின்னப்பொடியள். சரியில்லை. வேணாம்.//
இலங்கைபோன்ற நாடுகளில் வாழ்வை மகிழ்வு நிலைக்கிட்டுச் செல்லும் பொருளா-தாரம் இந்தக் "தன் கையே தனக்கு உதவி,வெள்ளையனை வெளியேற்ற"என்ற நம்ம காந்தித் தாத்தாவின் திருவாய் மலர்வினது இந்தக் கைத் தொழில்தாம் பெயரிலி!இதையும் விட்டுப்போட்டால் சமூகத்தளத்தில் வலிய நிகழ்வுகள் வந்து தற்கொலை விகிதம் மற்றும் இழுபறித் துய்ப்புகள் என்ற கேடானகோடிச் சிதைவுகள் வந்து"வம்பில்"இளைய சமூகம் மாட்டாத்தோ?அதன்பால் வினை முற்றுந் தரணங்களில் இத்துணைப்பால் வினைப் பேராற்றால் மிக்கதென்பதில் எமக்கொன்றும் பாவமில்லையல்லவா?இப்படிப் பச்சையாப் போட்டுடைத்து விட்டீர்களே பெயரிலி! ,சரி சரி!!!
பெயரிலி,
ஆலோசனைக்கு நன்றி.
ஆனாலும் வந்து (போய் எண்டும் வாசிக்கலாம்) மொத்துறதுக்கு விசாப்பிரச்சினை, பணப்பிரச்சினை எண்டு நிறைய இருக்கெல்லோ?
கொழுவிக்குக் கவிதை பாடிய அக்கா,
நன்றி.
கவிதை நல்லாயிருக்கு.
//அண்ணி வீட்டுக்குள் இருக்கையில் மட்டுமேன் பூனையைப்போல பதுங்குகிறாய்//
நான் அண்ணியோட இருக்கேலயே? எனக்கு அண்ணன் இருக்கிறதெண்டு ஆர் உங்களுக்குச் சொன்னது? எனக்கு நீங்கள் அக்கா எண்டும் சொன்னபடியா என்ர மனுசியைத்தான் சொன்னியள் எண்டும் சொல்லமுடியாது.
என்னையே குழப்பிப் போட்டியளே?
இருந்தாலும், நாம் பதுங்கும் பூனையல்ல; பாயும் புலியென்று சொல்லி வைக்கிறோம்.
சிறிரங்கன்,
நீங்கள் என்னைப் புகழ்ந்து பாடின கவிதை விளங்கீச்சு,
பிறகு வேற ஆருக்கோ பதில் சொல்லி எனழுதின கவிதை (?) விளங்கேல.
வேற ஆரோ கேட்டதுபோல நீங்கள் பேயத்தண்ணியில இருந்து எழுதினியள் போல கிடக்கு.
கார்த்திக் ரமாஸ்,
வருகைக்கு நன்றி.
கண்டு கனகாலம்.
சுகமா இருக்கிறயளோ?
Post a Comment