Tuesday, October 16, 2007

இரயாகரன் மறுத்த பின்னூட்டம்

தோழர் இரயாகரன் யாழ் மேலாதிக்க கழிசடைத்தனம் குறித்து எழுதிய பதிவில் ரிபிசி புலியெதிர்ப்புக் கும்பல் குறித்தும் சொல்லியிருக்கிறார். அப்பதிவுக்கு நான் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன்.

ரிபிசி மீது எனக்கு உடன்பாடு இல்லைத்தான். ஆனாலும் புலிப் பாசிசத்தை அம்பலப் படுத்த எமக்கு அந்த வானொலியை விட்டால் வேறு வழியில்லை என எழுதிய அப்பின்னூட்டத்தை இரயாகரன் தடுத்து நிறுத்திவிட்டார். :(

ஏன்.. நான் இரயாகரனுக்குப் பிடித்த புலிப் பாசனம்... மன்னிக்கவும் புலிப் பாசிசம் என்ற சொற்கள் கொண்டு தானே அப்பின்னூட்டத்தினை நான் எழுதியிருந்தேன். பிறகேன் அதனை தடுத்து நிறுத்தினார்..?

ஒரு வேளை எதிரிகளோடு இணக்கமான விவாதத்தை நடத்த முடியாதென்பதாலோ அல்லது எதிரிகளின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பது வீண் என்பதனாலயோ அதனை அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

அட

அதனைத் தானே புலிகளும் சொல்கிறார்கள். இதிலிருந்து தெரிவதென்ன ?

1 comment:

கொண்டோடி said...

அதில்லையண்ணை பிரச்சினை!
ரயாகரனுக்கு(ம் கூடவே சிறிரங்கன் போன்றோருக்கும்) சொந்தமான புலிப்பாசிசம் எண்ட சொல்லை நீர் பாவிச்சதுதான் பிரச்சினை. அவருக்கெண்டே உருவாக்கி வச்சிருக்கிற சொற்களை நீரெப்பிடிப் பாவிக்கலாம்?
ஏற்கனவே பொதுவுடமை, சமவுடமை, கம்யூனிசம், சோசலிசம், காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் எண்டு கொஞ்ச சித்தாந்தங்களையும் சிந்தனை வாதிகளையும் தங்களுக்கெண்டு சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கினம். அதேபோல புலிப்பாசிசம், லும்பன், ஏகாதிபத்தியம் எண்டு கொஞ்சச் சொற்களையும் உரிமையெடுத்து வைச்சிருக்கினம்.

நீரேன் அவையின்ர சொற்களைப் பாவிக்கிறீர்?
புலிப்பாசனம் எண்டு எழுதும்.