Friday, October 19, 2007

யாருக்கு யார் பெண்ணுரிமை குறித்துப் போதிப்பது ?

ஆனையிறவுப் பெருந்தளம் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது அதற்குள் ஊடுருவிய புலிகளின் சிறப்புப் படையணியொன்று அங்கிருந்த ஆட்லறிப் பீரங்கிகளைத் துவசம் செய்தெறிந்தது. அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஈரத்தீ எனும் திரைப்படத்தினை புலிகளின் நிதர்சனம் திரைப்பட வெளியீட்டுப் பிரிவினர் வெளியிட்டிருந்தார்கள்.

அதிலிருந்து சில காட்சிகள் இங்கே விரிகின்றன. சமரை வழிநடத்துபவர், பிற சக ஆண் பெண் போராளிகளுக்கு களத்தில் ஆணை வழங்குபவர் யாரென அவதானியுங்கள். சீதனப் பிரச்சனைகள் இருந்தாலும் சாதிப் பிரச்சனைகள் இருந்தாலும் பெண்ணியம் குறித்த பிற்போக்குச் சிந்தனை மிக்க சமூகமொன்றிலிருந்து புறப்பட்டு சுமார் பத்து வருடங்களில் சகலதையும் உடைத்தெறிந்து இன்று ஆண்களுக்குச் சமானமாக, ஆண்களை வழிநடத்துகிற அளவிற்கு உயர்ந்திருப்பது ஒரு பாய்ச்சல்தான்.

ஏனெனில் இவர்கள் தனியே அறிக்கை விட்டுக் கொண்டோ நோட்டீஸ் கொடுத்துக்கொண்டோ இருக்கவில்லை. செயலில் காட்டினார்கள்.

சொல்லுக்கு முன் செயல்.





9 comments:

Anonymous said...

கொரைக்கிற நாய் கடிக்காதுங்கிறீங்க!

மாசிலா said...

கொழுவி அய்யா, இவங்க அத்தனை பேரையும் நான் போற்றுகிறேன் சாமி!

நிற்க.

இப்ப நம்ம கதைக்கு வருவோம்க.

நீங்க இருக்கிற ஊருல தமிழச்சிய வரவச்சி, அவங்களுக்கு இதே மாதிரி பயிற்சி, சூழ்நிலைகள் உருவாக்கி கொடுத்தீங்கன்னா, அவங்களாலையும் இதை மாதிரி ஆக முடியும்க. அவங்க இருக்கறதோ, அய்ரோப்பா, அங்க போய் இத மாதிரி செய்து காட்டச்சொன்னாக்கா, அவங்களால என்னய்யா செய்ய முடியும்? கொஞ்சமும் விவஸ்தை இல்லாம எழுதறீங்களே!

அவங்க கிட்ட இருக்கிற போர் குணத்தை அவங்க சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சமுதாய நலத்திற்கு வெளிப்படுத்தி வர்ராங்க.

இதுல உங்களுக்கு எங்க சார் கொடையுது?

ஆகவேண்டிய வேலைய போய் பாருங்கய்யா!

நன்றி.

மீண்டும் ஒருமுறை ஈழத்தில் உள்ள இப்போராளிகளுக்கு நான் தலை வணங்குகிறேன். சகாப்தம் படைக்கும் அவர்கள் அனைத்து சமுதாயத்திற்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

கொண்டோடி said...

கொழுவி,
உம்மை உடனடியா பெண்போராளிகளிட்ட மன்னிப்புக் கேட்கச்சொல்லி ஒப்பிலாமணி - சே.. மாசிலாமணியார் அறிவிப்பு விட்டிருக்கிறார். கெதியாக் கேட்டுப்போடும். பிறகு அதுக்கும் நோட்டீசு அடிச்சு 'கலகம்' செய்யப்போகினம்.
உம்மால சனத்துக்குத்தான் ஆய்க்கினை.

ஈழநாதன்(Eelanathan) said...

தமிழச்சியின் விதண்டாவாதங்களை எதிர்கொள்வதை விடுத்து ராஜேஷ்வரியின் பிதற்றல்களுக்கு எதிருரை கொடுக்கும் எண்ணமுண்டா.என்ரை பதிவை கனநாளா காணேலை அதை கண்டுபிடிச்சு வந்து தூசு தட்டிப் பதிவு போட அலுப்பாக இருக்கிறது.கொழுவி,கொண்டோடி,வசந்தன் யாராவது?பதிவிட்டால் பேசுவதற்கு நான் தயார்.தமிழச்சியை விடுங்கோடாப்பா பாவம் நல்ல பிள்ளை எவரோ ஒரு அனானி சொன்னமாதிரி வெளுத்ததெல்லாம் பால் இல்லை இல்லை புரட்டுவது எல்லாம் புரட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்

கொண்டோடி said...

அதுக்கேன் நாங்கள் வரவேணும்?
நீர் என்ன புடுங்குறீர்?
நீர் முந்தி திசைகளில வந்த ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின்ர புரட்டுக் கட்டுரைக்கு எதிரா எழுதின கட்டுரை மீள்பதிவாக்கி இன்னும் மேம்படுத்தி மறுப்பு எழுதும்.

நிற்க, ராஜேஸ்வரியின் புரட்டுக்களை எதிர்த்து ஆருக்கு விளங்கப்படுத்தப் போறீர்? தமிழச்சிக்கும் மாசிலாவுக்குமா?
அவையள் ரெண்டுபேருக்கும் தான் நாங்கள் கதைக்கிற - சே... எழுதிற தமிழே விளங்குதில்லையே?
இப்பவும் பாரும் ஏன் பெண்புலிகளை இதுக்குள்ள கொழுவி இழுக்கிறார் எண்ட அடிப்படையே தெரியாமல் ஒரு வளாயும் விளங்காமல் மாசிலாமணியார் வந்து ஏதோ சொல்லிப்போட்டுப் போறார்.

பெண்போராளிகளைக் கொச்சைப்படுத்தி நடந்த மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அதை பெரிய விலாசமாக பறைதட்டித் திரியிறது மட்டுமில்லை, அங்க நடந்த விசயங்களையே விளங்காதமாதிரி நடிச்சுக்கொண்டும், அதை ஆரேன் விளங்கப்படுத்தினா தெனாவெட்டா கதைவிட்டுக்கொண்டும் திரியிறவைக்கு என்ன விளங்கப்படுத்தக் கிடக்கு?

கொண்டோடி said...

மாசிலாமணியார்,
தமிழச்சி துவக்குத் தூக்கிச் சண்டைபிடிக்கேல எண்டது இஞ்ச பிரச்சினையில்லை.

அப்பிடித் துவக்குத் தூக்கிச் சண்டைபிடிக்கிறவைய கொச்சைப்படுத்தி நடந்த மாநாட்டில கலந்துகொண்டதும், அதுக்குப்பிறகும் அப்பிடியெதுவும் அங்க நடக்கேல எண்டு புரட்டுச் சொல்லிக்கொண்டு திரியிறதும்தான் பிரச்சினை. அதாலதான் பெண்போராளிகளைக் கொண்டு உறைக்கும்படி சிலது சொல்லவேண்டிக்கிடக்கு. எண்டாலும் உங்களுக்கு உறைச்ச அளவுக்கு உங்கட தலைவிக்கு உறைக்கேல பாருங்கோ.

கொண்டோடி said...

இன்னுமொண்டைச் சொல்ல வேணும் ஈழநாதன்.

ராஜேஸ்வரியப் பற்றி யாரும் தப்பாச் சொல்லிப் போடாதைங்கோ. எங்கட சக வலைப்பதிவாளர் லண்டன் டாக்குத்தர் கருணாநந்தன் (அந்தாளின்ர பட்டங்கள் எல்லாம் மறந்துபோச்சு. கோவிக்காதைங்கோ டாக்குத்தர். ஒண்டா ரெண்டா ஞாபகம் வைச்சிருக்கிறதுக்கு?) பாஞ்சடிச்சு வந்து கடிச்சுக் குதறிப்போடுவார்.

ஒருக்கா ராஜேஸ்வரிய விமர்சிச்சு ஏதோ சொன்னதுக்காக பெயரிலிக்கு பைத்தியம் எண்டும் தன்னட்ட வைத்தியத்துக்கு வரச்சொல்லியும் டாக்குத்தர் எழுதினபிறகு பெயரிலியும் வெருண்டுபோய் ராஜேஸ்வரி மேட்டரைத் தொடுறேல. பெயரிலிக்கே அப்பிடியெண்டா நாங்கள் நீங்களெல்லாம் எம்மாத்திரம்?

ஆகையால் சொல்கிறேன், ராஜேஸ்வரி மேட்டரைத் தொட்டுடாதைங்கோ.

ஈழநாதன்(Eelanathan) said...

கொண்டோடி என்ரை வலைப்பதிவிலை எழுதுறதிலை எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.பிரச்சனை என்னவெண்டால் பின்னூட்டங்களை மட்டுறுத்தி அடிக்கடி பிரசுரிப்பது அது என்னாலை முடியாது எப்ப நேரம் இருக்குதெண்டு எனக்கே தெரியாது கொழுவி 24 மணிநேரம் இணையத்திலை இருக்கிறதாலை கேட்டன்.சரியெண்டு பின்னூட்டத்தை திறந்து விட்டால் கண்ட நிண்டவனெல்லாம் வந்து பூன சூனாவெண்டு கழிஞ்சுவிட்டுப் போவான் தேவையா

தமிழே விளங்காத தமிழச்சிக்கு இதையெல்லாம் நான் விளங்கப்படுத்தி விளங்கின மாதிரித் தான்.செல்லா பதிவிலை லக்கி பதில் கொடுப்பதைப் பார்த்தேன் இந்த வாதப் பிரதிவாதங்களை எட்ட நின்று பார்ப்பவர்களுக்கு ராஜேஷ்வரியின் மனப்பிறழ்வை கொஞ்சமாவது தோலுரித்துக் காட்டலாம் என்றுதான் கேட்டேன் சரி சரி கோவிக்காதையும் நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகவாவது எழுதி கொழுவியிட்டைக் குடுத்து விடுறன் பின்னூட்டம் அவர் பாடு என்ன கொழுவி ஆட்சேபணை ஏதும் இருக்கோ?

கொண்டோடி said...

ஈழநாதரே,
மீள்வருகைக்கு நன்றி.

//சரி சரி கோவிக்காதையும் நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகவாவது எழுதி கொழுவியிட்டைக் குடுத்து விடுறன்//

அது!!!!!

நீர் இனி வலைப்பதிவு திறந்து ஒண்டும் எழுத வேண்டாம். திரட்டியில வந்தாலும் 'ஆராள் உது புதுசாக் கிடக்கு' எண்டு வந்து வாழ்த்துச் சொல்லுவாங்கள்.
பேசாமால் எழுதி கொழுவியிட்டயோ கொண்டோடியிட்டயோ குடுத்துவிடும். மிச்சத்தை நாங்கள் பாத்துக்கொள்ளிறம்.
செல்லாவிட்ட கூட குடுத்துவிடலாம்; அதிகம்பேரைப் போய்ச்சேரும்.

எண்டாலும் துணிவா எழுத வெளிக்கிட்டதுக்கு வாழ்த்து.
நான் நினைச்சன் டாக்குத்தர் கருணாவுக்குக்குப் பயந்துதான் மற்றவங்களை உசுப்பிவிட்டிட்டுப் பதுங்கிறீர் எண்டு.