நம்ப ஏலாமல் கிடக்கோ? இருந்து பாருங்கோ இப்பிடியோர் அறிவிப்பு கெதியில வரத்தான் போகுது.
சித்தாந்தங்களையும் புத்தகங்களையும் அப்பிடியே வரிவிடாமல் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு காவடியாடுற கூட்டம் இப்பவும் நிறைய இருக்கத் தான் செய்யுது. பிரதேச, கலாசார, நுட்பங்களுக்கு ஏற்றாற்போல் அவற்றின் பயன்பாடும் தேவையும் மாறுமென்ற அடிப்படைப் புரிதல்கூட இருப்பதில்லை இவர்களுக்கு.
மாஸ்கோவில் மழை பெய்தால் மானிப்பாயில் குடைபிடித்தவர்களும் சீனாவில் வெயிலடித்தால் சித்தங்கேணியில் நிழல் தேடியவர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்தார்கள். துன்பம் என்னவென்றால் இன்றும் அப்படியான கூட்டங்களைப் பார்க்கமுடியும்.
தமிழ்வலைப்பதிவுகளில் அப்படியான நிறையப்பேரைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்ததால் அவரின் அடிபொடிகள் அதை அப்பிடியே ஈழத்திலும் கொப்பி (காப்பி) பண்ணி அங்கும் பார்ப்பனிய எதிர்ப்புச் செய்கிறார்களென்பதைப் பார்க்கும்போது இவர்களுக்கும் பெரியாருக்கும் இருக்கும் தொடர்பு மாஸ்கோவுக்கும் மானிப்பாய்க்கும் இருக்கும் தொடர்பு போற்றான் தெரிகிறது.
அதே அடிபொடிகளிடமிருந்து விரைவில் வரப்போகும் அடுத்த "கலக" அறிவிப்புத்தான் ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
அப்படியொரு போராட்டத்தை அறிவித்து நோட்டீசு அடித்துப் "போராட"ப்போகும் தளபதி, தலைவிகளை வாழ்த்தி விடைபெறுகிறேன்
வணக்கம்! நன்றி!
முத்திரைகள்: தமிழ் இஞ்சி மிளகு மா சீனி மணி கலகம் கலக்கம்
12 comments:
ஈழத்தில் இந்தி ஆதிக்கத்துக்கெதிரான முதல் மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. அழைப்பிதழைப் பெரிதாகப் பார்க்க அதன்மேல் கிளிக்குங்கள்.
இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு தரும் பிற பதிவர்
இரயாகரன், சிறீரங்கன்
போகிற போக்கில
நிச்சயமாக நடக்கலாம்,
ஆச்சரியப் படுவதற்கிலை,
நிர்மாணத்துக்குப் போட்ட பின்னூட்டம்
//70 களில் மலையக மக்களை வன்னியில் வந்து குடியேறுமாறு உற்சாகப்படுத்தப்பட்டது. இதனால் இவர்கள் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையே பாதுகாப்பு கேடயமாக இருப்பார்கள் எனக் கருதினார்கள்.//
இதைச் செய்தவர்கள் காந்தீயம் ஆட்களல்லவா? அவர்களுக்கும் புளொட்டுக்கும் நிறையச் சம்பந்தம் அல்லவா? அப்படியானால் புளொட்டும் சாதிய இயக்கமேதானா? டேவிட், ராஜசிங்கம் எல்லோரும் வேளாளசாதிக்குத்தானா போராடினார்கள்? எழுபத்தேழிலே புலிகள் எங்கே இருந்தார்கள்?
எழுபத்தேழிலே மலையகத்தமிழரை அரவணைத்துக் குடியேற்றி இருக்காவிட்டால் இன்றைக்கு வேளாள யாழ்ப்பாணச்சமூகம் எழுபத்தேழிலே அரவணைத்துக் குடியேற்றத் தவறிய சமூகம் என்று எழுதிக்கொண்டிருப்பீர்கள்.
சரி அந்த நேரத்திலே நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?
தூ அசுரா உங்களை விட இன்னும் சிறப்பாக எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை உனக்கு இரண்டு கண்களும் போனால் சரி என்று சொல்லியிருந்தார்
||சுசீந்திரனின் உரையில் இலங்கை அரசானது « மகாவம்ச » மனநிலையில் இருப்பதாகவும் மேலும் அவரது பேச்சானது புலிகளின் தமிழ்த் தேசியத்திற்கு வலுவூட்டும் தன்மை கொண்டதாகவும் காணப்பட்டதனாலேயே அவர் மீதான விமர்சனங்கள் காரசாரமாக இருந்ததாக அறிந்தேன். மேலும் புலிகள் இந்தியாவிலிருந்து; தமது பிரச்சாரத்திற்காக நெடுமாறன், திருமாவளவன் போன்றோரை அழைக்கும் சிரமத்தை குறைப்பதற்கு, சுசீந்திரனை அவர்கள் உபயோகிக்கும்படி எம்.ஆர். ஸ்டாலின் பரிந்துரை செய்ததாகவும் அறிந்தேன். நான் இருந்திருந்தால் பகவத்கீதை மனநிலையில் உள்ள சமூகத்தைவிட மகாவம்ச மனநிலை கொண்ட சமூகம் ஒன்றும் அபாயகரமானதல்ல எனும் பதிலை நண்பன் சுசீந்திரனுக்கு கொடுத்திருப்பேன்.||
புலிகளிலே உள்ள வெறுப்பிலே எதையும் செய்யத் தயாரானவர்கள் இன்று தலித் ஆதரவு வேடம் எடுத்திருப்பது வியப்பில்லையே
தமிழச்சியின் தலித் கூடல் விளம்பரம் இது
தலித் மகாநாடு அழைப்பிதழ்
சபாலிங்கத்தின் கொலைநாளை ஞாபகப்படுத்தும் ஒன்றுகூடல் விளம்பரம் இது
சபாலிங்கம் ஞாபகார்த்த கூடல் அழைப்பிதழ்
இரண்டின் அமைப்பிலும் ஒற்றுமையைக் கவனிப்பவர்களுக்கு இவற்றினை நடத்துகிறவர்கள் ஒரே ஆட்களே என்று சொல்லித் தெரியத் தேவையில்லை.
உங்களுக்கு முக்கியம் புலிகளை ஒழிப்பதுதான். இதற்கு ஜேஆர் ஜயவர்த்தனா சொன்னதுபோல எந்தச்சாத்தானோடும் கூட்டுச் சேரத் தயார்.
:-) நல்ல முற்போக்கு சிந்தனை.
தமிழச்சி அவர்கள் ஆரம்பித்து வைக்கவேண்டுகின்றேன்.
haha haha haha haha ha ha ha...LOL
இப்படிப் போராட்டம் தொடங்கப்படுமாயின், நிபந்தனைகளற்ற ஆதரவினை வெளியிருந்து நாம் வழங்குவது பற்றிப் பரிசீலிப்போம்.
கொழுவி அவர்களிற்கு பனி கொட்டும் மாஸ்கோவையும் நந்சென்று வெய்யிலடிக்கும் என் கிராமமான மானிப்பாயையும் உதாரணம் காட்டி பேசியதற்காக மானிப்பாயிசம் பேசும் மானிப்பாய் புரட்சிகர மக்களால் சுமார் பத்துபேரளவில் சேர்ந்து மாபெரும் எதிர்ப்பு மகாநாடு பிரான்சில் நான் வசிக்கும் நீஸ் மாநகரில் எனதுவீட்டு வரவேற்பு மண்டபத்தில் நடாத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றபடும்
புரட்சிப் புயல்,
வருகைக்கு நன்றி.
நிர்மாணத்துக்குப் போட்ட பின்னூட்டம் ஏன் இஞ்சயெண்டு எனக்கு விளங்கேல; இருந்தும் கருத்துத் சுதந்திரத்துக்காக அது வெளியிடப்பட்டுள்ளது.
நற்கீரன், டோண்டு மான்,
வருகைக்கு நன்றி.
நோனா,
சிரிப்புக்கு நன்றி.
அதுசரி சும்மா பேருக்கு வலைப்பதிவை இணைச்சு வச்சிட்டு இருக்கிறியள் போல...
குழவி,
அப்ப நீங்களும் நம்மட ஆள்தானா?
இந்திய கத்துக்குங்க அண்ணாச்சி. "அறிவு" மேலும் வளரும். நமக்கு "எது தேவையோ" அதை வளர்த்துக்கோணும் இல்லையோ?
;-D
//முத்திரைகள்: தமிழ் இஞ்சி மிளகு மா சீனி மணி கலகம் கலக்கம்//
நம்ம கொழுவி அண்ணாத்தை கிட்ட ரொம்பவும் தமாசா போச்சுபா!
எனக்கு கூட கிண்டல் பேர்வழின்னா ரொம்ப பிடிக்கும்.
:-D
சாத்திரி மற்றும் மாசிலாமணியார்,
என்னடாப்பா எழுதினது ஆரெண்டுகூடப் பார்க்காமல் வெளுத்துக் கட்டுறியள்.
இடுகையெழுதினது கொண்டோடி... கொழுவியில்லை.
Post a Comment